தினம் ஒரு கதை – 7

தினம் ஒரு கதை – 7

ஒரு கிராமத்தில் பலூன் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் விதவிதமான பறக்கும் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். வண்டியைத் தள்ளியபடி,, ‘‘பறக்கும் பலூன்... பறக்கும் பலூன்...’’ என்று கூவிக் கூவி விற்றுக்கொண்டே வந்தார். அப்போது மரத்தடியில் ஒரு சிறுவன் தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான். பலூன் வியாபாரி அவன் மேல் இரக்கப்பட்டு, ‘‘ஏன் தம்பி அழுகிறாய்?’’ என்று பரிவுடன் விசாரித்தார்.  ‘‘கருப்பாக இருப்பதால் என் நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்’’ என்று சொல்லிச் சிறுவன் அழுதான். 
          பலூன் வியாபாரி யோசித்தார். ஒரு பலூனை எடுத்தார். ‘‘இதைப் பாரு... இது என்ன நிற பலூன்?”

‘‘சிவப்பு.’’

‘‘பறக்கிறதா?’’

‘‘ஆம்.’’

          இப்படி ஒவ்வொரு நிற பலூனாக மேலே பறக்கவிட்டார். அழுது கொண்டிருந்த சிறுவனும் அழுகையை நிறுத்தி வேடிக்கை பார்த்தான். அப்போது ஒரு கருப்பு பலூனை எடுத்த வியாபாரி, ‘‘இது கருப்பு பலூன். நிச்சயம் பறக்காது’’ என்றார்.
          இதைக் கேட்ட சிறுவனுக்கு கோபம் வந்தது ‘‘அது கருப்பா, சிவப்பா, மஞ்சளா என்பதை வைத்தா பறக்கிறது? அதற்கு உள்ளே என்ன வாயு இருக்கிறதோ, அதை வைத்துதானே பறக்கிறது. நிறத்தில் என்ன இருக்கிறது’’ என்று படபடத்தான் சிறுவன்.
          ‘‘மனிதர்களில் யார் என்ன நிறமாக இருந்தால் என்ன? அவர்களின் பண்பும் திறமையும்தானே அவர்களைச் சிறப்பாக வைக்கிறது என்பது புரியாமல் நீ அழும்போது, நான் அப்படிச் சொல்லலாம்தானே?’’ என்கிறார் பலூன் வியாபாரி.

          சிறுவனுக்கு உண்மை புரிந்து தன்னம்பிக்கை உணர்வைப் பெறுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu