தினம் ஒரு கதை - 69

தினம் ஒரு கதை - 69

அம்மாவிடம் கோபமாக ஓடிவந்தாள் சிறுமி. அவள் சைக்கிள் ஓட்டி வரும்போது ஒரு பைக் அவள் மீது மோதி விட்டதாம். பெரிய காயம் இல்லாவிட்டாலும் மோதியதால் கீழே விழுந்த அதிர்ச்சி அச்சிறுமிக்கு இருந்தது. வீட்டுக்கு வந்ததும் பையைத் தூக்கி எறிந்தாள். அம்மாவிடன் தன் கோபம் அனைத்தையும் காட்டி கத்தினாள்.

‘‘அம்மா பச்சை சிக்னல் போட்ட பிறகுதான் நான் போனேன். ஆனாலும் ஒரு பைக் ஆசாமி என் மீது மோதிவிட்டார்.’’

‘‘இருந்தாலும் நீ ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்து ரோட்டைக் கடந்திருக்கலாமே?’’

‘‘என்ன சொல்றீங்கம்மா நீங்க? நான் பச்சை சிக்னல் கொடுத்த பிறகுதானே போனேன். என் மீது என்ன தப்பு?’’

அம்மா அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதியாகப் போய்விட்டார்.

மறுநாள் பள்ளியில் அறிவியல் பாடத்தில் மறை வெப்பம் என்ற Latent heat பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து தான் கொண்டு வந்திருந்த மின்சார அடுப்பில் வைத்தார். நீருக்குள் ஒரு தெர்மாமீட்டரை வைத்தார். சுற்றி நின்று மாணவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீர் சூடாகும்போது தெர்மாமீட்டரின் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நூறு டிகிரி வெப்பம் காட்டியது. இப்போது ஆசிரியர் கேட்டார்.

‘‘மாணவர்களே, நூறு டிகிரியில் நீர் ஆவியாகி நீராவி ஆக வேண்டும்தானே?’’

‘‘ஆமாம் டீச்சர்!’’

‘‘ஆனால் இங்கே ஏன் இன்னும் நீராவி வரவில்லை?’’

‘‘ஆம், வரவில்லை. காரணம் தெரியவில்லை.’’

‘‘கவனியுங்கள்… கொஞ்ச நேரம் பொறுத்தே நீராவி வருகிறது. இதைத்தான் ‘மறை வெப்பம்’ என்று சொல்கிறோம். நீராவியாக நீர் மாற்றம் அடையும் செயலுக்கு அந்த வெப்பம் உதவி செய்கிறது. தெர்மாமீட்டருக்கு கணக்கு காட்டாமல் மறைந்திருப்பதால் அதை மறை வெப்பம் என்கிறோம்’’ என்று சொல்லி முடித்தார்.

ஆசிரியர் சொல்லி முடித்ததும், சிறுமிக்கு இந்த மறை வெப்பத்துக்கும் டிராபிக் சிக்னலில் வாகனம் வருவதற்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாக பட்டது.

சிவப்பு விளக்கு எரிந்தால் எந்த வாகனமும் முன்னேறக்கூடாது. ஆனாலும் அன்று பைக் ஆசாமி வந்தார். வந்து இடித்தார். சிவப்பு விளக்கு எரிந்ததும் வாகனங்களை நிறுத்த வேண்டியது நியதி என்றாலும், ஒன்றிரண்டு வாகனங்கள் வேகமாக வரும்போது அவர்களால் நிறுத்த முடிவதில்லை.

எனவே, மற்றவர்களுக்கு சிவப்பு விளக்கு எரிந்தாலும், நமக்கு பச்சை விளக்கு எரிந்தாலும், ரோட்டைப் பார்த்து எந்த வாகனமும் வரவில்லை என்பது அறிந்தே கடக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

இதை தன் அம்மாவிடம் சொன்னபோது, அம்மா சொன்னார்.‘‘வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தை குறைத்து நிறுத்தத்தான் சிவப்பு எரிவதற்கு பத்து விநாடிக்கு முன்னால் மஞ்சள் விளக்கு போடுவார்கள். ஆனால் நம் மக்கள் மஞ்சள் விளக்கு கொடுத்த உடன் வேகத்தை குறைப்பதற்கு பதிலாக கூட்டுகிறார்கள். அவர்களும் திருந்த வேண்டும். ஆனால் அவர்கள் திருந்தும்வரையில் அவர்களுக்காக நம் உயிரைப் பணயம் வைக்க முடியாது.’’

‘‘புரிகிறது அம்மா. ரோட்டில் வாகனம் ஓட்டும்போது எதிரே வருபவர் செய்யும் தவறையும் கணித்து ஓட்டுவதுதான் புத்திசாலித்தனமானது’’ என்று சொல்லி முடித்தாள் அச்சிறுமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu