தினம் ஒரு கதை - 67

தினம் ஒரு கதை - 67

பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.

ஆண்டு விடுமுறைக்கு கிராமத்தில் வந்து குடும்பத்தோடு தங்கியிருக்கிறாள் அவள். தூக்கத்தில் ஒரே பறவைகள் கனவாக வந்து அவளைத் தொந்தரவு செய்தன. அதிலும் வாத்துகளாக வந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தன. அவற்றின் மொழி அவளுக்குப் புரியவில்லை.

ஒரு வாத்து அவள் முகத்திலேயே வந்து விழுந்தது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். கனவு என்று புரிந்ததும், தண்ணீர் பருகிவிட்டு மறுபடியும் தூங்கினாள். மறுபடியும் வாத்து கனவே வந்தது.

காலையில் எழுந்ததும் அப்பாவிடம் அதைச் சொன்னாள். ‘‘நேற்று பகலில் முதன்முதலில் குளத்தில் ஏராளமான வாத்துகளைப் பார்த்ததால் அப்படி வாத்து கனவு வந்திருக்கலாம்’’ என்றார் அப்பா.

‘‘அந்த வாத்துகள் வெறுமனே வரவில்லை. என்னிடம் ஏதோ சொல்ல முயற்சி செய்தன’’ என்றாள் சிறுமி. அப்பா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

உள்ளுணர்வுக்கு ஏதோ வித்தியாசமாக உறுத்த, சிறுமி பக்கத்து வீட்டு அக்காவை அழைத்துக் கொண்டு குளத்துக்குச் சென்றாள். நேற்று அவள் பார்த்த அதே குளம். வாத்துகள் இங்கும் அங்கும் அசைந்து அசைந்து நீந்திக் கொண்டிருக்கின்றன. குளத்தை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். ‘தன்னை அந்தக் கனவு ஏன் இங்கே அழைத்தது’ என யோசித்தபடி நடந்தாள்.

கிட்டத்தட்ட முழு குளத்தையும் சுற்றி முடித்தபோது, கரையில் அந்த புதரைப் பார்த்தாள். அங்கே ஒரு வாத்து முனகியபடி படுத்திருந்தது. அருகில் சென்று பார்த்தாள். வாத்தின் அலகுக்குள் ஒரு பிளாஸ்டிக் வளையம் போய் அதன் தலையோடு பிணைத்திருந்தது.

பிளாஸ்டிக் வளையம் மாட்டிய காரணத்தால் வாத்தால் எதுவும் சாப்பிட முடியவில்லை. சிறுமி அருகில் சென்று பார்த்தாள். அந்த பிளாஸ்டிக் வளையம், முந்தின நாள் அவள் உபயோகித்த பழச்சாறு பாட்டிலில் இருந்த வளையம். அவள்தான் அதில் உள்ள பிளாஸ்க் வளையத்தை வெட்டாமல் எடுக்கிறேன் என்று எடுத்து விளையாடிவள் அதை அப்படியே குளத்தில் வீசி எறிந்திருந்தாள். அதுதான் வாத்தின் வாழ்க்கையை முடிக்கப் பார்த்திருக்கிறது.

உடனே வாத்தை அருகில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் சென்று கத்தரிக் கோலால் வளையத்தை வெட்டி காப்பாற்றினார்கள். மறுபடியும் குளத்தில் வாத்தை விட, அது மகிழ்ச்சியாக நீந்திப் போனது.

தன்னுடைய கைகள் கட்டப்பட்டிருக்கும்போது வாய் வழியே தலையைச் சுற்றி ஒரு பிளாஸ்டிக் வளையம் மாட்டியிருந்தால் எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்று சிறுமி கற்பனை செய்து பார்த்தாள். அவள் உடலும் உள்ளமும் நடுங்கி அழுகை வந்தது.

‘பறவைகள், சிறு உயிரினங்கள் வசிக்கும் குளம், வாய்க்கால், ஆறு, கடல் பக்கம் பிளாஸ்டிக் பொருட்களைப் போடக் கூடாது’ என்ற உறுதியை எடுத்துக் கொண்டாள். அப்பாவிடம் சொல்லி, இதை ஓர் எச்சரிக்கை பலகையாக குளத்தின் அருகில் வைக்க வேண்டும் என்றும் உறுதி எடுத்துக் கொண்டாள்.

மனிதர்களுக்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் பிளாஸ்டிக் வளையங்கள் பறவைகளுக்கும், நீர் வாழ் உயிரினங்களுக்கும் சித்திரவதை வளையங்கள் என்பதை சிறுமி புரிந்து கொண்டது போல நாமும் புரிந்து கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu