தினம் ஒரு கதை - 62

தினம் ஒரு கதை - 62

‘‘அப்பா... சேமிப்புன்னா என்னப்பா?’’

ஒரு பள்ளி மாணவன் அப்பாவிடம் கேட்டான். அவர் சேமிப்பு பற்றி விளக்கிச் சொல்ல சொல்ல ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான்.

‘‘சேமிக்க நினைத்தால் அதை ஒத்திப் போடக் கூடாது. உடனே ஆரம்பிக்க வேண்டும். அதுதான் சேமிப்பின் முக்கியமான விதி’’ என்று முடித்தார் அப்பா.

‘‘நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன் அப்பா’’ என்றான் மகன்.

‘இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று சொல்லாமல், ‘நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று மகன் சொன்ன பதிலில் இருந்தே அவனுடைய சோம்பல் மனநிலையை அப்பா புரிந்து கொண்டார். அவனுக்கு நல்ல பாடம் புகட்ட நினைத்தார்.

அன்றிலிருந்து வாரம் ஒருமுறை மேலோட்டமாக மகனிடம் சேமிப்பு பற்றிக் கேட்பார். ‘‘என்னடா, சேமிப்பு ஆரம்பிச்சிட்டியா?’’

‘‘நாளைக்குத் தொடங்கிடுவேன் அப்பா’’ என்று மகனும் உடனே சொல்லிவிடுவான். அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், ‘‘சரி... சரி’’ என்று அப்பாவும் போய்விடுவார்.

இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தன. ஒருநாள் அப்பாவும் மகனும் மாலை வேளையில் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவன் அம்மா அவித்த பட்டாணியை வெங்காயமும் மாங்காயும் போட்டு கொண்டு வந்திருந்தார்.

அதைப் பார்த்த உடன் மகன் வாங்கி ஆவலோடு சாப்பிட்டான்.

‘‘மகனே, இது ஒரு ஸ்பெஷல் பட்டாணி தெரியுமா?’’ என்றார் அப்பா.

‘‘பட்டாணியில் என்ன ஸ்பெஷல்?’’ என்று மகன் கேட்க, அப்பா தொடர்ந்தார்.

‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு, உன்னை சேமிக்க ஆரம்பிக்கச் சொன்னேன். ‘நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்றாய். அன்றைக்கு மறுநாள் முதல், ஒவ்வொரு நாளும் ஒரு பட்டாணியை எடுத்து ஒரு டப்பாவில் போட்டுக்கொண்டே வந்தேன். அந்த பட்டாணி சிறுகச் சிறுக சேர்ந்து ஒரு கையளவையும் தாண்டிப் போயிற்று. அதைத்தான் அவித்து உன் அம்மா கொடுத்திருக்கிறார்.’’

இதைக் கேட்ட மகன், தன் சோம்பேறித்தனத்தை நினைத்து வெட்கப்பட்டான்.

அப்பா தொடர்ந்தார்...

‘‘ஒரு கிராமுக்கும் குறைவான எடை உடைய பட்டாணியே சிறுகச் சிறுக சேர்க்கும்போது இவ்வளவு வருகிறதென்றால், நீ பணத்தை சேர்த்திருந்தால் இந்நேரம் ஓரளவுக்கு நல்ல தொகையாக கிடைத்திருக்கும். இப்போதாவது சேமிப்பை உடனே தொடங்க வேண்டும் என்று புரிந்து கொள்’’ என்றார் அப்பா. 

சேமிப்பை ஒத்திப் போடக் கூடாது என்ற உண்மையைப் புரிந்து கொண்ட மகன், இதோ பட்டாணியை சாப்பிட்டு முடித்ததும் சேமிப்பை ஆரம்பிக்கப் போகிறான்.

நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu