தினம் ஒரு கதை - 59

தினம் ஒரு கதை - 59

பள்ளி மாணவன் தனியே வீட்டில் இருந்தான். அப்பா அலுவலகத்துக்குச் சென்றிருந்தார். அம்மா காய்கறி வாங்க மார்க்கெட் சென்றிருந்தார்.

அவன் குளித்து விட்டு பீரோவைத் திறந்து நல்ல நீலநிற சட்டை ஒன்றை எடுத்தான். அந்த சட்டையோ அவன் கையில் சிக்காமல் துள்ளிக் குதித்து கட்டிலில் விழுந்தது. மறுபடியும் எடுக்கப் போனான். அப்போது கட்டிலில் இருந்து சட்டை எழுந்து ஹாலில் உள்ள சோபாவுக்குச் சென்றது.

‘சட்டை ஓடுகிறதே’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது சட்டை அவனைத் திரும்பிப் பார்த்ததுப் பேசியது.

‘‘நான் போன முறை உன்னிடமிருந்து விடைபெறும்போது எப்படி இருந்தேன்?’’

‘‘போன முறை ஒரு பிறந்தநாள் விழாவுக்கு உன்னை அணிந்து சென்றிருந்தேன்.’’

‘‘அதன் பிறகு என்ன செய்தாய்?’’

‘‘வீட்டுக்கு வந்ததும் அப்படியே கழற்றிப் போட்டேன்.’’

‘‘அதன்பிறகு எப்படி இந்த பீரோவுக்கு வந்தேன் என்று உனக்குத் தெரியுமா?’’

‘‘தெரியாதே!’’

‘‘தெரிந்து கொள். நீ அப்படியே தரையில் கழற்றி வீசிவிட்டுச் சென்றாய். உன் அம்மா எடுத்து நல்ல சோப்பு போட்டு துவைத்து, அலசி, நிழலில் உலர்த்தி, காய்ந்து விட்டதா என்று பக்குவம் பார்த்து, இஸ்திரி போட்டு, அழகாக மடித்து இங்கே வைத்திருக்கிறார். நான் இப்படி மடிப்பு கலையாமல் இருக்க உன் அம்மாவின் உழைப்புதான் காரணம்.’’

அப்போது ஹாலில் தட்டில் வைத்திருந்த நான்கு இட்லிகளும் துள்ளி எழுந்து பள்ளி மாணவனை நோக்கிக் கத்தின. அவன் மேலும் ஆச்சர்யத்தோடு பார்த்தான். இட்லிகள் கோரஸாக பேசின...

‘‘உளுந்தை ஊறப் போட்டு, அரிசியை ஊறப் போட்டு, எங்களை மாவாக ஆட்டி, சரியான புளிப்பில் இட்லி சட்டியில் ஊற்றி,  வெந்ததும் எடுக்கும்போது கையில் சூடு வாங்கி, வெளியே எடுத்து பக்குவமாய் உனக்கு சாப்பிடக் கொடுத்திருப்பதன் பின்னால் இருப்பது உன் அம்மாவின் உழைப்பு. புரிகிறதா?’’

இப்போதுதான் அவனுக்கு அம்மாவின் உழைப்பும், அன்பும் அர்ப்பணிப்பும் தெளிவாகப் புரிந்தது.

நான்கு இட்லிகளும் சட்டையும் சேர்ந்து பேசின. ‘‘நேற்று உன் அப்பா முன்னால் வைத்து உன் அம்மாவை என்ன பேசினாய். உன் அம்மா வேலைக்குப் போகவில்லை, சம்பாதிக்கவில்லை என்று கிண்டல் செய்தாயே. பணம் வரும் வேலை மட்டும்தான் வேலையா? இப்படி குடும்பத்துக்காக உழைக்கும் உழைப்புக்கெல்லாம் பண மதிப்பு நிர்ணயித்தால் அதற்கான சம்பளத்தை யாராலும் கொடுக்க முடியாது, புரிந்து கொள். எப்போதும் அம்மாவை இகழ்வாக மனதுக்குள் கூட நினைக்காதே!’’

சொல்லி முடித்து சட்டை சட்டையாகவும், இட்லி இட்லியாகவும் மாறி இயல்புக்குப் போயின.

அவன் அம்மா வந்ததும் அவரிடம் மனம் உருகி மன்னிப்பு கேட்டான். அம்மா அவனை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu