தினம் ஒரு கதை - 56

தினம் ஒரு கதை - 56

ஒரு பள்ளி மாணவி தன் வீட்டு மொட்டை மாடியில் டீ குடித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. பணிகளை கவனிக்க, வாட்ச்மேன் குடும்பம் அருகில் குடிசை போட்டுத் தங்கியிருந்தது.

காலையில் வாட்ச்மேன் ஒரு பாத்திரத்தில் கடையிலிருந்து டீ வாங்கி வந்தார். அதை அவர், அவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளாக நான்கு பேர் கப்பில் ஊற்றிக் குடித்தார்கள்.

இதைப் பார்த்த பள்ளி மாணவிக்கு சந்தேகம் வந்தது. கீழே ஓடிப்போய் தன் அம்மாவிடம் கேட்டாள். ‘‘அம்மா, நாம் வீட்டில் டீ போட்டுக் குடிக்கிறோம். வாட்ச்மேன் வீட்டில் ஏன் கடையில் வாங்கி குடிக்கிறார்கள்?’’

அம்மா மகளின் கேள்வியைப் பாராட்டி, ‘‘ஒரு பால் பாக்கெட் 20 ரூபாய். கால் கிலோ சர்க்கரை 15 ரூபாய். நூறு கிராம் டீத்தூள் 40 ரூபாய். சராசரியாக ஒரு நாளைக்கு டீ குடிக்க அவர்கள் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டும். அதில்லாமல் டீ போட பாத்திரம் மூன்று வேண்டும். பாலை ஒரு பாத்திரத்தில் தனியே பாதுகாக்க வேண்டும். சர்க்கரையை ஒரு டப்பாவில் தட்டி எறும்பு மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். பால் கெட்டுப் போகாமல் வைக்க அவர்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் இல்லை. வீடோ மிக மிகச் சிறிய ஒற்றை அறைதான். இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் வீட்டில் டீ போட வேண்டும் என்று கடையில் வாங்கிக் குடிக்கிறார்கள்’’ என்றார்.

இதைக் கேட்ட மாணவி திகைத்தாள். ‘‘ஏழ்மை இவ்வளவு கொடுமையாம்மா?’’

‘‘ஆமாம்!’’

‘‘அம்மா, நாமே வாட்ச்மேன் குடும்பத்துக்கு டீ போடப் பொருள் கொடுக்கலாமே!’’

‘‘கொடுக்கலாம். அதற்கு பதிலாக அந்த இரண்டு குழந்தைகளுக்கு தானியங்கள், முட்டை போன்றவற்றைக் கொடுக்கலாம். அதில்லாமல் நீ இன்னொன்று செய்யலாம்...’’

‘‘என்ன?’’

‘‘அந்த இரண்டு குழந்தைகளும் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டில் பாடம் சொல்லித் தர ஆளில்லை. நீ எட்டாம் வகுப்பு படிக்கிறாய். மாலை வேளையில் ஒரு மணி நேரம் அவர்களுக்கு சொல்லித் தரலாம். அதன் மூலம் கல்வியில் ஆர்வம் வந்தால், வாழ்க்கையில் அந்த கல்வி ஆர்வத்தை வைத்தே முன்னேறிவிடுவார்கள். அதுதான் நீ அவர்களுக்கு செய்யும் மாபெரும் நன்மையாகும்.’’

எப்படி அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தெளிவைப் பெற்ற பள்ளி மாணவி, மாலை வேளைக்காகக் காத்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu