தினம் ஒரு கதை - 54

தினம் ஒரு கதை - 54

ஒரு கிராமத்தில் பெரிய நகை வியாபாரி இருந்தார். அவரிடம் ஏராளமான தங்கம் இருந்தது. அதே ஊரில் ஒரு திருடனும் இருந்தான். அவன் இவர் கடையில் திருட திட்டமிட்டான்.

கடையின் மேலே இடித்து உள்ளே போக முடியுமா என்று பார்த்தான். அது வலிமையான சுவராக இருந்தது. முன்வாசல் பூட்டை உடைக்க நினைத்தான். பூட்டை அசைக்கக்கூட முடியவில்லை. கத்தியைக் காட்டி மிரட்ட நினைத்தான். ஆனால் கடையில் ஏராளமான வேலையாட்கள் இருந்தார்கள்.

எதுவும் முடியவில்லை. நகை வியாபாரியின் பாதுகாப்பு அவ்வளவு உறுதியாக இருந்தது. திருடன் இப்போது வேறு மாதிரி திட்டம் போட்டான். வசதியானவர் மாதிரி வேடம் போட்டுக் கொண்டு வியாபாரியிடம் சென்றான்.

நகைகளைப் பற்றி பேசிக்கொண்டே, மனிதனை மிருகமாகும் மருந்து தன்னிடம் இருப்பதாகச் சொன்னான். வியாபாரி அதை நம்பி, ‘‘அப்படியா?’’ என்றார். 

திருடன் நான்கு மாத்திரைகளை எடுத்து வைத்தான். முதல் மாத்திரையைப் போட்டுக்கொண்டு ஓநாய் மாதிரி ஊளையிட்டான். தான் கால்வாசி ஓநாயாக மாறிவிட்டதாகச் சொன்னான். வியாபாரி அதை நம்பி, ‘‘ஆம். நீ மாறிவிட்டாய்’’ என்றார். அப்படியே அவரை நம்ப வைத்து அடுத்த மூன்று மாத்திரைகளைப் போட்டுக்கொண்டான்.

நான்காம் மாத்திரையைப் போட்டுக்கொண்டு, ‘‘நான் முழு ஓநாயாக மாறிவிட்டேன். உன்மீது பாயப்போகிறேன்’’ என அவன் சொன்னதும், வியாபாரியின் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. அவன் முழுமையாக ஓநாயாகவே மாறிவிட்டதாக நினைத்து உள்ளறைக்கு ஓடிவிட்டார்.

திருடன் வெளியே பூட்டிவிட்டு, கடையில் வைத்திருந்த முக்கிய வைரக்கற்களை எடுத்துக் கொண்டு ஓடினான். நல்லவேளையாக கடை ஆட்கள் அவனைத் துரத்திப் பிடித்தார்கள்.

அவனிடம், ‘‘ஏன் இப்படி மனிதன் மிருகமாவான் என்று ஏமாற்றினாய்?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவன், ‘‘இந்த வியாபாரி புறரீதியாக வலிமையான கட்டிடம், வேலையாட்கள் எல்லாம் வைத்திருந்தார். ஆனால் மனரீதியாக பல கட்டுக்கதைகளை நம்பி பலவீனமாக இருந்தார். ஆகையால் அவரை மனதால் வீழ்த்தி திருடுவதுதான் சரியான முறை என்று அப்படிச் செய்தேன்’’ என்றான்.

புற வலிமை எவ்வளவு முக்கியமோ, அகவலிமையும் அவ்வளவு முக்கியம் என்பது வியாபாரிக்கு அப்போதுதான் புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu