தினம் ஒரு கதை - 53

தினம் ஒரு கதை - 53

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஒரு மாணவி பேருந்தில் சென்று கொண்டிருந்தாள். பயண நேரத்தை வீணாக்காமல் தன் இருக்கையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று புத்தகத்தில் இருந்து கண்களை எடுத்துப் பார்த்தவள், அடுத்த நிறுத்தம் அழகிய பாண்டியபுரம் என்று தெரிந்து கொண்டாள்.

பின்னால் ஒரு பாட்டி கண்டக்டரிடம், ‘‘அழகிய பாண்டியபுரம் வந்தா சொல்லுப்பா’’ என்று கேட்டது போல் இருந்தது.

பஸ் நிறுத்தம் வந்தது. எல்லோரும் இறங்கியபின் கண்டக்டர் மறுபடி விசில் ஊதப் போகும்போது மாணவி எழுந்து, ‘‘இருங்க... இருங்க... இந்த பாட்டி அழகிய பாண்டியபுரத்துல இறங்கணும்னு சொன்னாங்க. நான் கேட்டேன். வண்டியை எடுக்காதீங்க’’ என்றாள்.

தூக்கத்திலிருந்த பாட்டியை எழுப்பி, அவர் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாகச் சொன்னாள். பாட்டியோ, ‘‘இல்லம்மா. நான் சிவலிங்கபுரத்துலதான் இறங்கணும்’’ என்றார். 

இதைக் கேட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் பள்ளி மாணவியைப் பார்த்து சிரித்தார்கள். அது அவளுக்கு அவமானமாக ஆகிவிட்டது.

கண்டக்டர் கோபித்துக் கொண்டு, ‘‘ஏம்மா, உன் வேலையை மட்டும் பாரு’’ என்றார்.

அந்த மாணவி சோர்வுடன் தன் இருக்கையை நோக்கி வரும்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த பார்வையற்ற நபர் ஒருவர் திடுக்கிட்டு எழுந்து, ‘‘ஏங்க, அழகியபாண்டியபுரம் வந்துடுச்சா. நான் தெரியாம தூங்கிட்டேன்’’ என்று எழுந்து கொண்டார்.

‘‘நல்லவேளை! இப்பவாவது எழுந்தீங்களே... இதோ இந்தப் பொண்ணுதான் வண்டிய நிறுத்தி வைச்சிருந்தது’’ என்றனர் சில பயணிகள்.

அந்த பார்வையற்ற நபர், மாணவி இருந்த திசை பக்கமாகத் திரும்பி பொதுவாகக் கைகூப்பி, ‘‘ரொம்ப நன்றிம்மா. நீ வந்து வண்டியை நிறுத்தலைன்னா நான் வேற ஊர்ல இறங்கி சிரமப்பட்டிருப்பேன். நீதான் காப்பாற்றினாய்’’ என்று வாழ்த்தியபடியே இறங்கினார்.

இதைக் கேட்டு பள்ளி மாணவிக்குத் திருப்தியாக இருந்தது. ‘யாரோ அந்த நிறுத்தில் இறங்கவேண்டும் என்று சொன்னது காதில் விழுந்ததால்தான் வண்டியை நிறுத்தினேன். உதவி செய்ய வேண்டும் என்ற என் நோக்கம் தூய்மையானது. மற்றவர்கள் சிரித்ததற்காக நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?

பாட்டிக்கு என் உதவி தேவைப்படாவிட்டாலும் பார்வையில்லாதவருக்கு உதவி இருக்கிறேனே. எப்போதுமே உதவி செய்ய நினைத்து விட்டால் வெட்கப்படாமல் உடனே செய்து விட வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு நிம்மதியாக மறுபடியும் படிக்க ஆரம்பித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu