தினம் ஒரு கதை - 52

தினம் ஒரு கதை - 52

ஒரு கல்லூரி மாணவன் காலையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது படுக்கையின் ஓரத்தில் அவன் காலடியில் அன்றைய தினசரி செய்தித்தாளை யாரோ வைத்து விட்டுப் போயிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் அவன் எழுந்து, காலருகே இருந்த செய்தித்தாளை எடுத்து தரையில் தூரமாக வைத்து விட்டு மறுபடியும் தூங்கிப்போனான்.

மறுநாளும் அப்படியே செய்தித்தாள் வந்து அவன் தூக்கத்தைக் கெடுத்தது.

யாரோ தற்செயலாக வைத்திருக்கிறார்கள் என்று விட்டு விட்டான். ஆனால் மூன்றாவது நாளும் அப்படியே செய்தித்தாள் கிடந்தது.  ஒரு வாரம் இது தொடர்ந்தது.

‘யார் இதைச் செய்வது என கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அடுத்த நாள் தூங்குவது போல் பாவ்லா செய்து படுத்திருந்தான். அவன் அறைக்குள் வந்து அவன் காலடியில் செய்தித்தாளை வைத்தது வேறு யாருமில்லை, அவன் அம்மாதான்.

‘‘அம்மா, ஏன் இப்படி பண்றீங்க?’’

‘‘எப்படி?’’

‘‘என் காலடில வந்து பேப்பரை வைச்சிட்டுப் போறீங்க. என்னால தூங்க முடியல!’’

‘‘உன் கால் மேல வைக்கலையே. கால் பக்கத்துலதானே வைச்சேன்.’’

‘‘இல்லம்மா, கால் பக்கத்துல ஏதோ ஒண்ணு இருக்குது. அதை மிதிச்சிடப் போறோம்னு  உணர முடியுது. அதனாலேயே தூங்க முடியலை.’’

‘‘ரொம்ப ஓவரா அலட்டிக்காதப்பா!’’

‘‘அம்மா! சின்னச் சின்ன தொந்தரவுகளால அடையுற அசௌகரியம் உனக்குப் புரியவே மாட்டேங்குதும்மா...’’

‘‘சும்மா காலடியில தள்ளி பேப்பர் வச்சதே உன் தூக்கத்தை பாதிக்குதே. அப்போ நீ தினமும் பின்தொடர்ந்து ஒரு பொண்ணை டார்ச்சர் பண்றியாமே! அவ எப்படி நைட்டு தூங்குவா. யோசிச்சிப் பாரு...’’

‘‘அம்மா... அது உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

‘‘நீ அவளை ஃபாலோ பண்ணி தொந்தரவு பண்றது. மெசேஜ் செய்து தொந்தரவு செய்றது... எல்லாமே தெரியும். அதை உனக்குப் புரிய வைக்கத்தான் உன் காலடியில பேப்பரை வைச்சேன். உன்னை மாதிரிதான் அந்தப் பொண்ணும்! கொஞ்சம் புரிஞ்சிக்க. யாரையும் இப்படி தொந்தரவு பண்ணாதே!’’ என்றார் அம்மா.

அன்றிலிருந்து அந்த மகன் யாரையும் தொந்தரவு செய்வதே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu