தினம் ஒரு கதை – 5

தினம் ஒரு கதை – 5

ஒரு வழிப்போக்கன் அந்தக் கிராமத்துக்கு வந்தான். அங்கே அருமையான விவசாய நிலம் இருந்தது. நிலத்தின் சொந்தக்காரன் வீடும் அருகிலேயே இருந்தது.

          வழிப்போக்கன் போய், தண்ணீர் கேட்டபடி பேச்சு கொடுத்தான். 

          ‘‘அருமையான நிலம் வைத்திருக்கிறீர்களே, நெல் பயிரிடுவீர்களோ?’’

          ‘‘இல்லை, மழை பெய்யாவிட்டால் நெல் வாடி விடும். அதனால் நெல் பயிரிடுவதாக இல்லை!’’

          ‘‘அப்படியானால் பருத்தி பயிரிடுவீர்களா?’’

‘‘பருத்தியைப் பூச்சிகள் தாக்கி அழித்துவிட்டால் என்ன செய்வது? அதனால் அதையும் செய்வதாக இல்லை.’’

          ‘‘காய்கறிகளாவது  பயிரிடலாமே?’’

          ‘‘அவை சீக்கிரம் அழுகிவிடும். நல்ல விலையும் கிடைக்காது. அதனால் அந்த எண்ணம் இல்லை.’’

          ‘‘உங்கள் வாழ்க்கையில் தினம் தினம் பசியை அனுபவித்து வருகிறீர்களா?’’ 

வழிபோக்கன் கேட்டான்.

          ‘‘எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?’’ - விவசாயி ஆச்சரியப்பட்டான்.

          ‘‘பாதுகாப்பாக கப்பல் ஓட்டவே முடியாது; கரையில் நின்றால் சம்பாதிக்கவும் 

முடியாது. 

   பாதுகாப்பாக பயிரிடவும் முடியாது; பயிரிடப் பயந்தால் சோறு உண்ணமுடியாது’’ 

என்று சொல்லி விடைபெற்றான் வழிப்போக்கன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu