தினம் ஒரு கதை - 42

தினம் ஒரு கதை - 42

மன்னர் கிருஷ்ணதேவ ராயரின் மகாராணிக்கு தன் தம்பி முகுந்தனை மந்திரியாக்காமல் அப்பாஜியை மந்திரி ஆக்கியது பற்றி வருத்தம். போய் கணவரிடத்தில், ‘‘என் தம்பி அப்பாஜியைவிட திறமை குறைந்தவனா?’’ என்று சண்டை பிடித்தார்.

மனைவிக்கு உண்மையை உணர்த்த விரும்பினார் ராயர். அப்பாஜியையும் முகுந்தனையும் அழைத்த அவர், இரண்டு பேழைகளை ஒவ்வொருவர் கையிலும் கொடுத்தார். ‘‘இதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியாது. ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டு போய் பக்கத்து நாட்டு மன்னர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள்’’ என்றார்.

முகுந்தன் கலிங்க நாட்டுக்குச் செல்ல, அப்பாஜி கங்க நாட்டுக்குச் சென்றான்.

கலிங்க மன்னன், ராயரின் தூதனாக வந்திருக்கும் முகுந்தன் கொடுத்த பேழையை ஆசையாகப் பிரித்தான். உள்ளே சாம்பலும், மனிதத் தலைமுடிகளும் இருந்தன. கலிங்க மன்னன் அதிர்ச்சியோடு ‘‘இது என்ன?’’ என்று கேட்க, முகுந்தன் பதில் சொன்னான்.

‘‘கலிங்க மன்னா! இது எங்கள் மன்னர் உங்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் ராயரின் தலைமுடிக்கு சமமானவர். ஒருவேளை நீங்கள் அதை ஒப்புக் கொள்ளாவிட்டால் உங்களை இந்த சாம்பலாக ஆக்கிவிடுவார் எம் மன்னர்’’ என்று சொல்லிவிட்டு நாடு திரும்பினான்.

கலிங்க மன்னன் கோபமாகி, தன் படையை பின்னாலேயே அனுப்பி, ராயர் நாட்டைத் தாக்கி அழிக்கும்படி சொன்னான்.

முகுந்தன் போலவே அப்பாஜியும் பேழையை கங்க நாட்டு மன்னரிடம் ஒப்படைத்தார். ‘‘இது என்ன அப்பாஜி? போயும் போயும் சாம்பலும் தலைமுடியும் கொடுக்கிறாய்’’ என கங்க மன்னர் கோபமாகக் கேட்டார்.

அப்பாஜி அதைப் பார்த்து சமாளித்துக்கொண்டு, ‘‘மன்னா! ராயர் உங்கள் நன்மைக்காக ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தின் புனிதப் பிரசாதமே இந்த சாம்பல். இந்த தலைமுடிகூட யாகத்தில் கிடைத்ததுதான். இதை வைத்துக் கொண்டால் தோல்வியே ஏற்படாதாம்’’ என்றார்.

மன்னர் மகிழ்ச்சியாகி தன் படையை அப்பாஜிக்குத் துணையாக அனுப்பிவைத்தார். அப்பாஜி கங்க நாட்டுப் படையோடு வந்தபோது, கலிங்க மன்னன் படைகள் ராயரை சூழ்ந்தது. அப்பாஜி கங்க நாட்டுப் படையின் உதவியுடன் கலிங்கப் படையைத் தோற்கடித்தார்.

‘மந்திரியாக இருப்பதற்கு வேகம் தேவையில்லை. விவேகம்தான் தேவை’ என்பதை ராணி புரிந்து கொண்டு அப்பாஜியை மந்திரியாக ஏற்றுக் கொள்வதாக ராயரிடம் சொல்லிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu