தினம் ஒரு கதை - 35

தினம் ஒரு கதை - 35

முல்லாவின் நண்பர் ஒருவர் சண்டைக்கார பேர்வழி. ஊர் முழுக்க இதனாலேயே அவர் பிரபலம். சின்ன பிரச்னை என்றாலும், ‘‘அடித்து விடுவேன், நொறுக்கி விடுவேன்’’ என்று ஊரில் அனைவரையும் மிரட்டிக்கொண்டே இருப்பார். இதையே தன் தொழிலாக ஆக்கியிருந்தார்.

ஒருநாள் இந்த சண்டைக்கார நண்பர் நடந்து வரும்போது அந்தக் காட்சியைப் பார்த்தார். முல்லா தன் நாயுடன் பாதையோரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் நாயோ, பாதையில் போன வண்டிகளையும் குதிரையில் பயணம் செய்வோரையும் துரத்தித் துரத்திப் பிடிப்பது போல போகிறது. நாய் ஆவேசமாகப் போகும். ஆனால் நாயால் யாரையும் பிடிக்கமுடியாது. அவர்கள் வேகமாகப் போய்விடுவார்கள்.

முல்லா அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தார். இதை அந்த சண்டைக்கார நண்பர் பார்த்தார்.

‘‘என்ன முல்லா, உங்கள் நாய் வாகனத்தில் வருவோரையும் போவோரையும் துரத்திக் கொண்டு இருக்கிறது. அது பற்றி உங்களுக்குக் கவலையே இல்லையா?’’ என்றார்.

அதற்கு முல்லா, ‘‘நாய் இப்படி துரத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ஒருவேளை நாய் ஏதாவது வாகனத்தைத் துரத்திப் பிடித்துவிட்டால் அதை வைத்து என்ன செய்யும் என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. அர்த்தமில்லாத குறிக்கோளை அடைய அர்த்தமில்லாத வித்தை செய்து கொண்டிருப்பவர்களை என்ன செய்ய?’’ என்றார்

முல்லா தன்னைத்தான் குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட நண்பர், திருந்தி வாழ ஆரம்பித்தார்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu