தினம் ஒரு கதை - 30

தினம் ஒரு கதை - 30

கிராமத்தில் வாழ்ந்த இளைஞன் ஒருவன், நகரத்துக்குப் பிழைப்பு தேடிச் சென்றான். நகரத்துக்குப் போக வேண்டுமானால் ஒரு காட்டைக் கடக்க வேண்டும். 

அங்கே ஓர் ஓநாய் அவனைத் துரத்தியது. ஓநாயிடமிருந்து தப்பிப்பதற்காக வியர்க்க விறுவிறுக்க ஒடினான். ஒரு கரடி அவனைக் காப்பாற்றியது.

கரடிக்கு நன்றி சொன்னான். கரடி அவன் எதற்குப் போகிறான் என விசாரிக்கிறது. பிறகு அவனை கிராமத்துக்கே போய் அது சொல்லும் மந்திரத்தின் அர்த்தம் தேடச் சொல்கிறது. 

அந்த மந்திரம், ‘எள்ளும் உறியே பனி எடுத்தால் புல்லும் உறியே தின்னாம்’. கரடி சொன்ன மந்திரத்தைக் காதில் வாங்கிக்கொண்டு சொந்த ஊர் வந்து சேர்ந்தான். 

அந்த மந்திரத்தின் அர்த்தம் தேடி அலைந்தான். ‘ஏதோ எள்ளும், பனியும், புல்லும் வருகிறதே’ என்று ஒவ்வொருவரும் யோசித்தார்களே தவிர, கிராமத்தில் யாருக்கும் அதன் அர்த்தம் தெரியவில்லை.

அர்த்தம் தேடித் தேடி சோர்ந்து போன அவன், வேறு வழியே இல்லாமல் உயிரைப் பணயம் வைத்து மறுபடி காட்டுக்குச் சென்று கரடியைப் பார்த்து அர்த்தம் கேட்டான்.

‘‘நான் என்ன சொன்னேன்?’’ என கரடி கேட்டது.

‘‘எள்ளும் உறியே பனி எடுத்தால் புல்லும் உறியே தின்னாம்.’’ 

‘‘நான் சொன்னதை நீ சரியாகக் காதில் வாங்கவில்லை. நான் சொன்னது ‘எல்லு முறியே பணி எடுத்தால் பல்லு முறியே தின்னாம்’. அது எள்ளும் இல்ல, புல்லும் இல்ல, பனியும் இல்லை.’’

‘‘ஓஹோ!’’

‘‘எல்லு என்றால் எலும்பு, முறியே என்றால் முறிவதாக, பணி என்றால் வேலை, பல்லு என்றால் பற்கள். ‘எலும்பு முறியும் அளவுக்கு வேலை செய்தால் பல்லு முறியும் அளவுக்கு விதம் விதமாக சாப்பிடலாம்’ என்பதே இதன் அர்த்தம்.’’ 

‘‘அடடா, நான் தவறாகப் புரிந்து கொண்டேனே’’ என்று சொல்லி மறுபடியும் கிராமத்துக்கு வந்து தன் வயலிலும் தோட்டத்திலும் கடுமையாக உழைத்து, நிறைய சாப்பிடும் அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தான் அவன்.

‘கடுமையாக உழைத்தால், முன்னேறி நன்றாக வாழ்க்கையை அனுபவிக்கலாம்’ என்று கரடி சொன்னது அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்கும்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu