தினம் ஒரு கதை - 29

தினம் ஒரு கதை - 29

பள்ளி மாணவர்கள் உணவு இடைவேளையின்போது வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

மரியா டிபன் பாக்ஸை திறந்தாள். அதில் கம்பங்களியும், வேர்க்கடலை துவையலும் இருந்தன. அதைப் பார்த்து கவிதா, ‘‘என்ன இது, பாக்கவே ஒருமாதிரி இருக்கு’’ என்று கேலி செய்தாள்.

சப்பாத்தி ரோல், சாதம் என்று மற்றவர்கள் கொண்டு வந்திருக்க, மரியா கொண்டு வந்த கம்பங்கூழைப் பார்க்க அவர்களுக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது. 

மரியா மற்றவர்களின் கிண்டலால் மனம் வருந்தி, சாப்பிடாமல் எழுந்து போய்விட்டாள்.

அன்று மதியம் அறிவியல் வகுப்பில் ஆசிரியர் மைக்ராஸ்கோப் வைத்து செயல்முறை பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 

மைக்ராஸ்கோப் என்பது நுண்ணிய பொருளையும் பெரிதாகக் காட்டும் சாதனம். சாதாரணமாகப் பார்க்கும் தலைமுடி, சிறு சிறு இலை துணுக்குகள் என்று ஒவ்வொன்றையும் மைக்ராஸ்கோப்பில் வைத்து ஆசிரியர் காட்டிக் கொண்டிருந்தார். 

ஒவ்வொரு இலையும் அதில் பார்க்க பெரிதாக, தனித்துவமாக தெரிந்தது. மரியாவும் கவிதாவும் அடுத்தடுத்து அதையெல்லாம் பார்த்தனர்.

‘ஒவ்வொரு இலைக்கும் தனித்துவம் இருப்பது போல, ஒவ்வொருவர் உணவிலும் தனித்துவம் இருக்கும். அதில் வெட்கப்பட ஏதுமில்லை’ என்ற முடிவுக்கு மரியா வந்தாள்.

‘எல்லா உணவும் நல்ல உணவுதான். இந்த விதவிதமான இலைகளைப் போல விதவிதமான உணவும் இருக்கிறதுதான். அந்த உணவை வைத்து மரியாவை கேலி செய்துவிட்டோமே’ என்று கவிதா வருந்தினாள்.

மரியாவிடம் மன்னிப்பு கேட்டாள். மரியா கவிதாவின் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டாள். 

ஆசிரியரிடம் நடந்ததைச் சொல்லி, மரியாவின் உணவை சாப்பிட அனுமதி கேட்டனர். 

அறிவியல் சாதனமான மைக்ராஸ்கோப், மாணவர்களுக்கு பிறர் கலாசாரத்தை மதிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்தது தெரிந்து மகிழ்ந்த ஆசிரியர், ‘‘சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்றார்.

மரியாவும் கவிதாவும் கம்பங்கூழையும் வேர்க்கடலை துவையலையும் ரசித்து சாப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu