தினம் ஒரு கதை - 125

தினம் ஒரு கதை - 125

ஒரு நிறுவனத்தில் ஐந்து இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். அதில் ஓர் இளைஞன் மட்டும் வேலையில் ஆர்வமில்லாமல் இருந்தான். அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மேலதிகாரி அவனுக்கு ஊக்கமான வார்த்தைகள் பலவற்றைச் சொன்னார். வேலையை எளிமையாகப் புரியும்படி கற்றுக் கொடுத்தார்.

ஆனாலும் அவன் பெரிய ஆர்வம் காட்டவில்லை. உற்சாகம் இல்லாமலேயே இருந்தான். ஒருநாள் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்தான். இவர் காரணத்தை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு, சட்டென்று ராஜினாவை ஏற்றுக் கொண்டார்.

ராஜினாமா கடித்தத்தில் இவர் அப்ரூவல் கையெழுத்தை இட்டு மேற்படி வேலைகளை கவனிக்கும் மனிதவள அதிகாரிக்கு கடிதத்தை அனுப்பி விட்டார்.

‘‘நேர்முகத் தேர்வு செய்து, அதில் திறமையைக் கண்டறிந்துதான் இவரை வேலைக்குச் சேர்த்தோம். பயிற்சி கொடுக்க திட்டமிட்டிருந்த சூழலில், ராஜினாமாவை இவ்வளவு சீக்கிரமாக ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்?’’ என்று பயிற்சி கொடுத்த அதிகாரி மீது விசாரணை வந்தது.

விசாரணைக்கு மூன்று நாளைக்கு முன்பு அந்த பயிற்சி அதிகாரி அலுவலகத்தில் இருந்த பழைய கடிகாரத்தை எடுத்து விட்டு புதிதாய் ஒரு கடிகாரத்தை மாட்டினார். அது ஒரு மணி நேரத்தில் நின்று விட்டது. ‘சரி, அது அங்கேயே இருக்கட்டும்’ என்று வைத்திருந்தார்.

விசாரணை வந்தது. அந்த இளைஞன் ராஜினாமாவுக்கான காரணத்தைக் கேட்டார்கள். அதற்கு பயிற்சி அதிகாரி பதில் சொன்னார். ‘‘சார், இரண்டு நாட்களாக நம் அலுவலகத்தில் வேலை செய்யாத கடிகாரம் பொது இடத்தில் இருக்கிறது. நம் அனைவருக்கும் மொபைலில் நேரம் பார்க்கும் வசதி, கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்கும் வசதி எல்லாமே இருந்தாலும், அந்த பெரிய கடிகாரம் வேலை செய்யவில்லை என்று தெரிந்தாலும், அந்த வேலை செய்யாத கடிகாரத்தைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே இருக்கிறோம். நீங்கள் இந்த கண்ணாடி வழியே இரண்டு நிமிடம் பாருங்கள். யாராவது ஒருவர் வேலை செய்யாத கடிகாரத்தைப் பார்ப்பார்கள்’’ என்றார்.

மனிதவள அதிகாரி பார்த்தார். இரண்டு பேர் வேலை செய்யாத கடிகாரத்தைப் பார்த்து, ‘‘அது வேலை செய்யாது இல்ல’’ என்று சொல்லி திரும்பிக் கொண்டனர்.

இப்போது பயிற்சி அதிகாரி சொன்னார், ‘‘கடிகாரம் வேலை செய்யாது என்று நம் அனைவருக்கும் தெரியும். தெரிந்தாலும் அதைப் பார்த்து குழம்புகிறோம். அதுபோலத்தான் அந்த இளைஞனும் கம்பெனிக்கு ஒரு வேலை செய்யாத கடிகாரமாக எனக்குத் தெரிந்தார். அவர் வேலை செய்யாமல் கம்பெனியில் இருக்கும்போது, இந்த கடிகாரம் கொடுக்கும் அதே குழப்பத்தைத்தான் அனைவருக்கும் கொடுக்கிறார். ஆள் கணக்கில் வேலையில் அவரை வைத்து திட்டமிடுவோம். ஆனால் பணியில் ஆர்வமில்லாத காரணத்தால் அவர் தனக்கான வேலையைச் செய்ய மாட்டார். வேண்டாத கடிகாரங்களை அப்புறப்படுத்துவதே சரி’’ என்றார்.

மேலும், ‘‘அவனுக்கு வயது 21தான் ஆகிறது. அவனுக்கான துறையை அவன் நிச்சயம் தேர்ந்தெடுப்பான். இதில் பரிதாபப்பட எதுவுமில்லை. இது கம்பெனிக்கு நஷ்டம் ஏற்படுத்தும் செயல் அல்ல, லாபம் அளிக்கும் செயல்’’ என்றார் பயிற்சி அதிகாரி.

விசாரணைக் குழு, அவர் தவறு செய்யவில்லை என்று அறிவித்தது. விசாரணை முடிந்ததும் தன் அறையில் இருந்த நல்ல கடிகாரத்தை எடுத்து, ஓடாத கடிகாரத்தை அப்புறப்படுத்திவிட்டு மாட்டினார் பயிற்சி அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu