தினம் ஒரு கதை - 124

தினம் ஒரு கதை - 124

ஒரு தெருவில் 36 வயது ஆணும் 34 வயது பெண்ணும் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இருவருமே காதல் தோல்வி அடைந்தவர்கள். அதனாலேயே திருமணம் செய்யாமல் இருந்தார்கள். மனிதர்களின் அன்பு மீது நம்பிக்கை இழந்தவர்கள்.

ஆண் தன் வெறுமையிலிருந்து மீள ஒரு பொமேரியன் நாய் வளர்த்தான். பெண் தன் வெறுமையில் இருந்து மீள நிறைய புத்தகமாய் படித்து வந்தாள். ஒரே தெருவில் இருந்த காரணத்தால், இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள்தான். ஆனால் ஒருவர் முகம் இன்னொருவர் மனதில் பதிந்ததில்லை. காரணம், இருவருமே மனிதர்களை வெறுத்தார்கள். ‘மனிதர்கள் அனைவரும் ஈரமில்லாதவர்கள், ஏமாற்றுக்காரர்கள்’ என்று நினைத்தார்கள். அதனால் புதிய மனிதர்களைப் பார்த்தால், அவர்களைப் பற்றி ‘இவர்கள் யார்’ என்றெல்லாம் யோசிக்கும் பழக்கத்தை விட்டிருந்தனர்.

ஒருநாள் அந்த ஆண் வளர்த்து வந்த பொமேரியன் நாயோடு ரோட்டில் நடை பயின்று கொண்டிருந்தான். திடீரென்று நாய் மூச்சுத் திணற ஆரம்பித்தது. அப்படியே ரோட்டில் விழுந்தது. அவன் பதறினான். ‘என்னாச்சுடா?’ என்று நாயைக் கொஞ்சினான். ஆனால் நாய் இன்னும் இன்னும் மூச்சுத் திணற ஆரம்பித்தது. ‘‘ஐயோ, யாராவது பாருங்களேன். என் செல்லத்தைக் காப்பாற்றுங்களேன்’’ என்று வாய்விட்டுக் கதற ஆரம்பித்தான்.

அப்போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த பெண், முதன்முறையாக இவனை உற்றுப் பார்த்தாள். ஒரு நாய்க்காக கதறும் ஆண். அருகில் சென்று நாயைப் பார்த்தாள். இதற்கிடையில் அவன் நாயின் வாய்க்குள் கைவிட்டு, ‘‘எதையோ முழுங்கிடுச்சிங்க’’ என்று எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அவள் வேகமாக அவன் கையை நாயின் வாயிலிருந்து எடுத்து விட்டாள். ‘‘சின்ன வகை நாய் எதையாவது முழுங்கிடுச்சின்னா இப்படி செய்யக் கூடாது’’ என்று சொல்லி, நாயின் பின்னங்கால் இரண்டையும் பிடித்துக் கொண்டாள். நாயை அப்படியே உதறினாள்.

‘‘ஐயோ, நாய்க்கு வலிக்கும்’’ என்று அவன் கதறினான்.

‘‘கொஞ்சம் சும்மா இருங்க’’ என்று இவள் அதட்டினாள். ஆனால் அதைக் கேட்காமல் அவன் சுற்றிச் சுற்றி அழுது கொண்டே இருந்தான். ஓரிடத்தில் நிற்கவில்லை. தெருவையே சுற்றிக் கொண்டிருந்தான். அப்படி ஒரு மனிதன் அந்த தெருவில் இருக்கிறார் என்பதே அன்றுதான் பல தெருவாசிகளுக்குத் தெரிந்தது.

நாய் இன்னும் மூச்சுத் திணறியது. இப்போது அந்தப் பெண் தன் உத்தியை மாற்றினாள். நாயை பின்பக்கமாக தன் மேல் சாய்த்தபடி பிடித்துக்கொண்டு அதன் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை மூன்று முறை சடக்கென்று அமுக்கி எடுத்தாள். மூன்றாம் முறை ஒரு பழைய பாதி பிளாஸ்டிக் மூடியை நாய் கக்கியது. அதன் பிறகே நாய் மூச்சை சீராக விட்டது. நாய் பிழைத்ததைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவளுக்கு திரும்பத் திரும்ப நன்றி சொன்னான்.

‘‘நீங்க இதை எங்கே கத்துக்கிட்டீங்க மேடம்?’’

‘‘நான் நேத்து யதேச்சையா ஒரு புத்தகத்துல நாய் முதலுதவி பற்றி படிச்சேன். எனக்கு புத்தகம்தான் உலகம்.’’

‘‘எனக்கு என் நாய்தான் உலகம். ஏன், உங்களுக்கு மனுஷங்கன்னா பிடிக்காதா மேடம்?’’

‘‘பிடிக்காது சார். ஆனா, ஒரு நாய்க்காக நீங்க இப்படி கதறி அழுததைப் பார்த்தபோது மறுபடியும் மனுஷங்க மேல நம்பிக்கை வந்திருக்கு!’’

‘‘என் நாயை அக்கறையோட காப்பாத்தின உங்க மேல எனக்கு அளவற்ற ப்ரியம் வருது. எனக்கும் மனுஷங்க மேல நம்பிக்கை வருது. நீங்க திருமணம் ஆனவரா மேடம்?’’

‘‘இல்ல சார், நீங்க திருமணமானவரா?’’

‘‘இல்ல மேடம். நான் பேச்சிலர்தான். மேடம், நாம கல்யாணம் செய்துக்கலாமா? நீங்க என் நாயோட வாயில மாட்டின பொருளை எடுத்து அதைக் காப்பாத்தினது மாதிரி, என் மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்கிற வெறுமையை எடுத்து விடுவீங்களா? நானும் உங்க மேல அன்பா இருப்பேன்.’’

அவள் அவன் கையை ப்ரியத்தோடு பிடித்துக் கொண்டாள். அவனும் பிடித்துக் கொண்டான். நாய் அவர்களைச் சுற்றிச் சுற்றி மகிழ்ச்சியோடு செல்லமாய் குரைத்துக் கொண்டிருந்தது.

நாயுடனும் புத்தகங்களுடனும் அவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையோடும் வாழ்ந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu