தினம் ஒரு கதை - 123

தினம் ஒரு கதை - 123

கழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.

கழுகு அந்த மேகத்துக்கு அருகே வந்து, ‘‘ஏன் நீ மட்டும் நகராமல் கஷ்டப்பட்டு காற்றை எதிர்த்து இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டது.

‘‘ஓர் உயிருக்கு ஆபத்து. அதனால் கலங்கிப் போய், அதைக் காப்பாற்ற இங்கேயே நிற்கிறேன்’’ என்றது.

‘‘யாருக்கு ஆபத்து? என்னிடம் சொல். நான் உனக்கு உதவி செய்கிறேன்’’ என்றது கழுகு.

கழுகை நம்பிய மேகம் விஷயத்தைச் சொன்னது. ‘‘கீழே தரைப்பகுதியில் எனக்கு நேரே ஒரு சிறு குளம் இருக்கிறது. அதில் நிறைய தாமரை மலர்கள் இருக்கின்றன. அதில் ஒரு இலை நடுவே சிறுதுளி நீர் இருக்கிறது. அந்த நீரில் ஒரு மீன்குஞ்சு தெரியாமல் விழுந்து விட்டது. அது துள்ளி விளையாடும்போது தெரியாமல் அந்த தாமரை இலை சிறு துளி நீரில் விழுந்து விட்டது. அதற்கு எப்படி மீண்டும் குளத்துக்குள் போவது என்று தெரியவில்லை. அதன் அம்மா மீனோ, குஞ்சு மீனைக் காணோம் என்று கலங்கி வெளியே வெளியே எட்டிப் பார்க்கிறது. சூரிய வெளிச்சம் பட்டால் தாமரை இலையில் உள்ள சிறிதளவு சூடாகி குஞ்சு மீன் உயிருக்கு ஆபத்தாகிவிடும். அதனால்தான் நான் சூரிய ஒளியை மறைத்துக் கொண்டு நிற்கிறேன்’’ என்றது.

இதைக் கேட்ட கழுகின் புத்தி மாறியது. ‘‘நான் பெரிய மீன் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை குஞ்சு மீன் சாப்பிட்டதில்லை. நல்லவேளை, விஷயத்தைச் சொன்னாய்’’ என்றது.

மேகம் வேதனையடைந்தது. கோபமாக கழுகிடம், ‘‘நீ காப்பாற்றுவேன் என்று சொன்னதால்தான் நான் உண்மையைச் சொன்னேன். இப்போது நீ செய்வது அநியாயம், துரோகம்’’ என்று கத்தியது.

கழுகு அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் குஞ்சு மீனை சாப்பிட தாமரை இலையை நோக்கிப் போக ஆரம்பித்தது.

மேகத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குஞ்சு மீனைக் கொல்வதற்கு கழுகிடம் தானே யோசனை சொல்லிவிட்டோமோ என குற்ற உணர்வு அடைந்தது.

அதை உணர்ந்துகொண்ட காற்று சொன்னது. ‘‘மேகமே! நீ கழுகிடம் சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் உனக்கு உதவி செய்கிறேன். கழுகு குஞ்சு மீன் அருகே போகும்போது நான் வேகமாக வீசுகிறேன். நீ சட்டென்று விலகிவிடு. நான் சொல்வதை மட்டும் செய்’’ என்றது.

மேகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், காற்று சொன்னதைச் செய்ய நினைத்தது. கழுகு தாமரை இலையில் இருக்கும் குஞ்சு மீன் அருகே போகும்போது காற்றின் வேகத்தில் பட்டென்று விலகியது. அது விலகியதும் சூரிய ஒளி பளீரென்று அந்த தாமரை நீரில் விழுந்தது. அந்த ஒளி கழுகின் கண்களை கூசச் செய்தது. திடீரென்று அத்தனை ஒளிக் கூச்சத்தை எதிர்பாராத கழுகு, தடுமாறி இலையில் விழுந்தது. விழுந்த நேரத்தில் காற்றும் வேகமாக வீச, தாமரை இலை அசைந்து, அதன் நடுவில் உள்ள நீரோடு குஞ்சு மீன் குளத்தில் விழுந்தது.

அப்போது கழுகின் காதருகே பேசிய காற்று, ‘‘நல்ல விஷயத்தைக் கெடுக்க ஒருவர் வந்தால், உதவி செய்ய ஆயிரம் பேர் வருவார்கள்’’ என்றது. கழுகு தலைகுனிந்து நிற்கும்போது, அங்கே தாய் மீன் குஞ்சு மீனோடு நீந்தி நீந்தி பாதுகாப்பான இடத்தை அடைந்தது. மேகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu