தினம் ஒரு கதை - 119

தினம் ஒரு கதை - 119

ஓர் இளைஞன் திருமணம் செய்து கொண்டான். அவன் குடும்பம் மிகப்பெரியது. சித்திகள், சித்தப்பாக்கள், மாமாக்கள், அத்தைகள் என்று பல சொந்த பந்தங்கள் இருந்தார்கள்.

திருமணம் ஆன புதிதில் எப்போதும் அவர்களைப் பற்றியே மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பான். சில சமயம் மனைவி கொட்டாவியை அடக்கிக் கொண்டு கேட்பதைக்கூட அவன் கவனிக்கவில்லை.

இதில்லாமல் புதிதாய் வந்த மருமகளுக்கு மாமனார் பல போதனைகளைச் செய்வார். அவர் ஒரு சுற்றுச்சூழல் விரும்பி என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருமகளுக்கு சுற்றுச்சூழல் பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவார். அவரும் மருமகளுக்கு வரும் கொட்டாவியை பற்றிக் கவலைப்படாமல் பேசிக் கொண்டே இருப்பார். திடீரென்று சமையலறைக்கு வந்து, ‘‘இவ்வளவு தண்ணி செலவழிக்காதம்மா’’ என்று சொல்லிவிட்டுப் போவார்.

மாமியார் இன்னொரு பக்கம் குடும்ப பாரம்பரியம் என்று சொல்லி மருமகளை மெலிதாக வருத்திக் கொண்டே இருப்பார். ‘‘அவருக்கு தேங்காய் சட்னி அரைச்சிரு, அவனுக்கு வெங்காய சட்னிதான் பிடிக்கும், அதில்லாம கொஞ்சம் பாசிப் பருப்பு சாம்பாரும் வெச்சிரும்மா” என்பார். மருமகள் வீட்டைப் பெருக்கும்போது அருகில் நின்று, ‘‘இங்க தூசி இருக்கு பாரும்மா, இதைப் பெருக்கிடு’’ என மென்மையாகச் சொல்வார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தமாகத் துடைக்கச் சொல்வார்.

சனிக்கிழமை காலையில் யாராவது சொந்த பந்தங்கள் வந்தால், ஞாயிறு மாலைதான் வீட்டை விட்டு செல்வார்கள். இதில்லாமல் அந்த வீட்டில் அவன், அம்மா, அப்பா மூவரும் மருமகளிடத்தில் அவர்கள் குடும்பத்தில் நடந்த சம்பவங்களை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதை அவள் சுவாரசியமாகக் கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்.

தன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்று இவனே நினைத்துக் கொண்டான். ஒருநாள் காலையில் அவன் ஆபீஸுக்கு கிளம்பும்போது மனைவி சுருண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்து அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அங்கே ஒன்றும் கேட்கவில்லை. அலுவலகத்துக்குச் சென்ற பிறகு மனைவிக்கு மொபைலில் செய்தி அனுப்பினான். ‘நீ இந்தக் குடும்பத்தில் வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. மகிழ்ச்சியாய்தான் இருக்கிறாயா?’

‘உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, டி.வி, சினிமா எல்லாம் கிடைக்கிறது அதனால் மகிழ்ச்சியாய்தான் இருக்கிறேன். சிறகுகளை மட்டும் எங்கோ தொலைத்து விட்டேன். பரவாயில்லை, அது இல்லாவிட்டாலும் மகிழ்ச்சிதான்’ என்று மனைவி பதில் அனுப்பினார்.

அன்று மாலை அலுவலகம் விட்டு வந்தான். அங்கு தன் புது மருமகள் முன் ஏராளமான மல்லிகைப் பூக்களை அவன் அம்மா கொட்டி, ‘‘இது எல்லாத்தையும் தொடுத்து சரமாக்கிரும்மா’’ என்றார்.

இதைக் கேட்டு மகன் அம்மாவை கடுமையாகப் பார்த்தான். ‘‘அம்மா, இவ்வளவு பூவையும் தொடுத்து சரமாக்குறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? பூ வேணும்னா கடையில வாங்குங்க. இப்படி மொத்தமா கொட்டி சிரமப்படுத்தாதீங்க’’ என்றான்.

அங்கே வந்த அப்பா, ‘‘இல்லடா தம்பி, சயின்ஸ் என்ன சொல்லுதுன்னா பூ தொடுத்தா இந்த விரல்ல கனெக்ட் ஆகுற நரம்புகள் எல்லாம் மூளையோட செரிபெல்லத்துல போய் அங்க உள்ள சுரப்பிகளை ஆக்டிவேட் செய்து...’’

அவன் குறுக்கிட்டு, ‘‘அப்ப நீங்க எல்லா பூவையும் தொடுத்திருங்கப்பா’’ என்றான்.

போன் வந்தது. சித்தி வருவதாகச் சொன்னார். ‘‘சித்தி! நீங்க குடும்பத்தோட எப்ப வேணும்னாலும் வாங்க. ஆனா உங்க வீட்டு வாண்டுகளை என் பெட்ரூம்ல போய் விளையாடச் சொல்லாதீங்க. என் பெட்ரூம் என் பிரைவசி. சரியா?’’ என்றான்.

மறுநாள் காலை சித்தி ‘வர முடியவில்லை’ என்று மெசேஜ் அனுப்பினார். இவன் மனைவிக்கு முந்தி எழுந்து மொத்தமாக சேர்த்து அனைவருக்கும் பொங்கலும் சட்னியும் வைத்துவிட்டு ஆபீஸ் கிளம்பிச் சென்றான்.

அவன் அடிக்கடி எடுத்துப் பேசும் தன் குடும்ப ஆல்பத்தை எல்லாம் தூக்கி பரணில் போட்டான். மனைவியிடம், ‘‘வீட்ல சும்மா இருக்காதே. ஏதாவது வேலை தேடு’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அவனுக்கு ஒரு தனிச்செய்தி மனைவியிடமிருந்து வந்தது. அதில் ஒரு பறவை ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்தது. அருகில் இரண்டு இதய எமோஜிகள் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu