தினம் ஒரு கதை - 117

தினம் ஒரு கதை - 117

மகளின் கைகளில் லேசான சூட்டுத் தழும்பைப் பார்த்த அப்பா பதறிவிட்டார்.
‘‘என்னம்மா இது?’’
‘‘அது ஒண்ணுமில்லப்பா. அடுப்புல லேசா கை பட்டுடுச்சி.’’

‘‘நீ சமைச்சியா? ஏன், அதைத்தான் அம்மா பாத்துப்பாங்களே!’’
‘‘ஆமாப்பா, நான் தோசை சுட்டேன்பா!’’
‘‘நீ ஏன் அதையெல்லாம் செய்யறே?’’

‘‘நான் செய்யலேன்னா அம்மாவுக்கு யாரு தோசை சுட்டுக் கொடுப்பாங்க?’’

‘‘அதை அவங்களே சுட்டு சாப்பிட்டுக்கலாம்தானே!’’
‘‘அப்பா, நீங்க சின்ன வயசுல இருக்கும்போது உங்களுக்கு யார் தோசை சுட்டுத் தருவாங்க?’’
‘‘உன் பாட்டிதான் சுட்டுத் தருவாங்க!’’

‘‘நல்லா சாப்பிடுவீங்களா?’’
‘‘நல்லா சாப்பிடுவேன்மா!’’
‘‘நீங்க சாப்பிட்டுட்டு பாட்டிக்கு பதிலுக்கு சுட்டுக் கொடுத்திருக்கீங்களா?’’

அப்பா யோசித்து, ‘‘இல்லையேம்மா’’ என்றார்.

‘‘சரி, கல்யாணம் ஆன பிறகு அம்மா உங்களுக்கு தோசை சுட்டுக் கொடுப்பாங்களா?’’
‘‘ஆமாம்மா. நல்லா நெய் எல்லாம் விட்டு அவ சுட்டுத் தரும்போது இன்னும் ரெண்டு கூடுதலா சாப்பிடலாம்மா!’’

‘‘நீங்க பதிலுக்கு ஒருநாள் தோசை சுட்டுக் கொடுத்திருக்கீங்களா?’’
அப்பா அமைதியானார்.

‘‘இல்லம்மா, காலையில ஆபீஸுக்கு வேகமா போகணும் இல்லையா? அதனால சுட்டுக் கொடுக்க நேரம் இருக்காது.’’

‘‘ஏன், லீவு அன்னைக்கு சுட்டுக் கொடுக்கலாமே?’’
‘‘வெளியே எதாவது வேலை இருக்கும்மா”
‘‘சரி, நைட் சுட்டுக் கொடுக்கலாமே?’’
‘‘நைட் அப்பாவுக்கு சாப்பிட்ட உடனே அஞ்சு நிமிஷம் படுக்கணும்மா, அதான்!’’

‘‘சரி, அஞ்சு நிமிஷம் கழிச்சி வந்து அம்மாவுக்கு சுட்டுக் கொடுக்கலாமே!’’
‘‘இனிமே சுட்டுக் கொடுக்குறேன்மா!’’
‘‘அம்மாவுக்கு உங்களை விட இரண்டு வயசுதான் கம்மி. பத்தாம் வகுப்புல கிட்டத்தட்ட ஒரே மார்க்தான். ஆனா நீங்க எப்படி தோசை சாப்பிட்டுட்டு மட்டும் இருக்கிற இடத்துக்கு வந்தீங்க. அம்மா எப்படி தோசை சுட்டு மட்டும் கொடுத்து இருக்கிற இடத்துக்கு வந்தாங்கன்னு யோசிச்சீங்களா?’’
‘‘சரியா யோசிக்கலம்மா!’’

‘‘நான் சொல்றேன். நீங்க பத்தாம் வகுப்பு படிச்ச உடனே கணித குரூப் எடுத்தீங்க. கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு எதுக்கு படிப்புன்னு அம்மாவை ஹிஸ்டரி குரூப் எடுக்க வைச்சாங்க. நீங்க என்ஜினியரிங் படிச்சீங்க, அம்மாவை படிக்கவே வைக்காம எம்பிராய்டரி, குக்கிங் கிளாஸ் அனுப்பினாங்க.’’
‘‘ம்ம்ம்...’’

‘‘நீங்க நல்ல வேலைக்குப் போனீங்க. சுயமா சம்பாதீச்சிங்க. அம்மா வேலைக்குப் போகலை, சுயமா சம்பாதிக்கல. அம்மாவை நீங்க கல்யாணம் செய்தீங்க. அம்மா உங்களுக்கு தோசை சுட்டு தந்தாங்க. நீங்க அதை நல்லா நடு ஹால்ல உக்காந்து சாப்பிட்டீங்க.’’
‘‘ம்ம்ம்...’’

‘‘இப்படி ஓர் உயிர் இன்னொரு உயிரை அடக்கி வைக்கிறதுக்கு இந்த சமூகமே உதவி செய்யுதே. இதை எல்லாம் பாத்து உங்களுக்கு வெக்கமாவே இல்லையாப்பா .? இதை மாத்தணும்னு உங்களுக்குத் தோணலையா? 

என் கையில இருக்கிற சூட்டு வலியை விட, உங்களை மாதிரி ஆண்கள் இப்படி இதை கண்டுக்காம இருக்கிறதுதாம்பா எனக்கு வலிக்குது.’’
அப்பா நிலைகுலைந்து விட்டார். அமைதியாக போய்விட்டார். 

மறுநாள் அம்மா தோசை சுட்டுக் கொடுத்தார். அப்பா சாப்பிட்டார். சாப்பிட்டு எழுந்து, ‘‘சரி, நீ சாப்பிடு. நான் சுடுறேன்’’ என்றார்.
“என்ன இது புதுப்பழக்கம்?” என்று அம்மா கேட்டார்.

“உனக்கும் சுடச் சுட தோசை சாப்பிட ஆசை இருக்கும்னு எனக்கு இத்தனை நாள் புரியாம போச்சு’’ என்று அப்பா மாவை எடுத்து தோசைக்கல்லில் வட்டமாகப் பரவ விட்டார். 

தனக்கு சரியான பாடம் சொல்லித் தந்த அன்பு மகளின் முகம் அந்த தோசையில் தெரிந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu