தினம் ஒரு கதை - 115 

தினம் ஒரு கதை - 115 

‘கொக்கி குமாரி’ என்று அந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை வகுப்பில் அனைவரும் கிண்டல் செய்தார்கள். பெண்கள் மட்டுமே படிக்கும் அப்பள்ளியில் யாருக்காவது உடையின் கொக்கி எனப்படும் ஹூக் கழன்றிருந்தால், இவள் ஆர்வமுடன் அதைச் சரி செய்வாள். தானே முன்வந்து, ‘‘ஏய், உனக்குப் பின்னாடி சரியா மாட்டவில்லை பாரு’’ என்று சரி செய்வாள்.

பல மாணவிகள் இவளுடைய இந்த ஆர்வத்தால் பயனடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் கொடுப்பது பள்ளிச் சிறார்களின் வழக்கம்தானே. அதன் அடிப்படையில் இவளை அனைவரும் ‘கொக்கி குமாரி’ என்று கிண்டல் செய்தனர்.

இப்படி கிண்டல் செய்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் ஆசிரியரே விளையாட்டுக்கு, ‘‘உன் பேரு கொக்கி குமாரியாம்மா?’’ என்று கேட்க, இவளால் தாங்கமுடியவில்லை. அங்கே சிரித்து வைத்து விட்டு, வீட்டுக்கு வந்ததும் ‘இனிமேல் பள்ளிக்கே போகக்கூடாது’ என்று முடிவு செய்தாள்.

அன்று காலை எழுந்திருக்காமல் கட்டிலிலேயே படுத்திருந்தாள். அம்மா குளிக்கச் சென்றிருந்தார். அப்போது அம்மாவின் போன் ஒலித்தது. ‘‘அம்மா, போன்’’ என்று இவள் கட்டிலில் படுத்தபடியே கத்தினாள். அம்மாவுக்குக் கேட்கவில்லை. எரிச்சலுடன் போனை பார்த்தாள். அது அம்மாவின் தோழியுடைய எண். எடுத்து, ‘‘ஹலோ’’ என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

பதில் சொன்னது யாரென்றே கவனிக்காத உற்சாகக் குரல் மறுமுனையில் கேட்டது. ‘‘ஏய் திக்கி! என்ன பண்றே? போன் போட்டா எடுக்க மாட்டியா?’’

‘‘ஆன்ட்டி... அம்மா இல்ல. நான்தான்’’ என்றாள் இவள். அம்மாவின் தோழி அசடு வழிந்து போனை வைத்து விட்டார்.

அம்மா வந்தவுடன் மகள் கேட்டாள். ‘‘அம்மா, உங்க பெயரு திக்கியா?’’

‘‘உனக்கு எப்படித் தெரியும்?’’

‘‘இப்ப உன் ஃப்ரெண்ட் போன்ல நீங்கன்னு நினைச்சி என்னை அப்படிக் கூப்பிட்டாங்க. ஏன் ‘திக்கி’ன்னு கூப்பிடுறாங்க?’’

‘‘ஏன்னா, சின்ன வயசுல எனக்கு வாய் அதிகம் திக்கும்.’’

‘‘அம்மா, நீங்க இப்ப பட்டிமன்றத்துல எல்லாம் பேசுறீங்க. உங்களுக்கு வாய் திக்குமா? நம்பவே முடியலை.’’

‘‘ஹா... ஹா... ஆமா. ரொம்ப திக்கும். வகுப்புல என் நண்பர்கள் எல்லாம் என்னை ‘திக்கி’ன்னு கிண்டல் பண்ணுவாங்க. நான் ஸ்கூலுக்கே போக மாட்டேன்னு சொன்னேன். அப்புறம் என் அப்பாதான் என்னை ஊக்கப்படுத்தி, அந்த கிண்டலையே சவாலா எடுத்துக்கன்னு சொன்னார். நானே பயிற்சி எடுத்துக்கிட்டு பேச்சாளர் ஆனேன்.’’

‘‘கிரேட்மா நீங்க!’’

‘‘பட்டப்பெயர் வைக்கிறதுங்கிறது சாதாரண மனித ஆர்வம். இந்த உலகத்துல எல்லா மனுஷனுக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அதுக்கெல்லாம் கவலைப்பட்டா வாழவே முடியாது. ஜாலியா எடுத்துக்கணும். நம்மளை கிண்டல் செய்றதுல இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு ஜாலியா யோசிக்கணும். அதையெல்லாம் ரொம்ப மன வேதனையா எடுத்துக்கக்கூடாது’’ என்று அம்மா சொன்னார்.

இவள் உற்சாகமாகி பள்ளிக்குக் கிளம்பிச் சென்றாள். எதிரே அவள் தோழி வந்து கொண்டிருந்தாள். அவள் இவளைப் பார்த்து ‘கொக்கி குமாரி’ என்று அழைக்கும்முன் இவள் முந்திக் கொண்டாள்.

‘‘நேத்து மேட்ச்ல வில்லியம்சன் எப்படி விளையாடினார் பாத்தியா? சவுத் ஆப்ரிக்காவை திணறடிச்சிட்டாரே’’ என்றாள். தோழி கிரிக்கெட் ரசிகை என்பதால் கொக்கி குமாரியை மறந்துவிட்டு கிரிக்கெட் பற்றியே பேசினாள். அடுத்து வந்த தோழிக்கு அவள் அண்ணன் பற்றிப் பேச பிடிக்கும். அவளிடம் பேசும்போது, ‘‘உன் அண்ணன் பேட்மின்டன்ல பரிசு வாங்கினாரா?’’ என்று கேட்டாள். அவள் உற்சாகமாகிப் பேசினாள்.

காலையில் அவசர அவசரமாக மூச்சிரைக்க வந்த தோழியிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டி, ‘‘நீ முதல்ல தண்ணி குடி. அப்புறம் என்னை கொக்கி குமாரின்னு சொல்லு’’ என்றாள். அவள், ‘‘ச்சே! உன்னை அப்படி இனி எப்பவும் கூப்பிட மாட்டேன்’’ என்றாள். இப்படி தன் அன்பாலும் அறிவாலும் அதிகப்படியான கிண்டலில் இருந்து தப்பித்தாள்.

மனிதர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த தன் அம்மாவுக்கு மனதுக்குள் நன்றி சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu