தினம் ஒரு கதை - 111

தினம் ஒரு கதை - 111

அந்த வீட்டில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். வீட்டு வேலை செய்யும் 60 வயது பெண்மணி, அந்த வீட்டுக்காக உற்சாகமாக உழைத்தார். விருந்துக்கு வருபவர்களுக்காக ஒற்றை ஆளாய் நின்று ஏராளமான சப்பாத்திகளை தேய்த்து சுட்டுக் கொடுத்தார். அந்தக் குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி.

வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு நல்ல சேலை அணிந்து வருவதாகக் கூறிச் சென்றார். வீடு சென்று குளித்து தன்னிடம் இருப்பதில் நல்ல சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டார். பூ வைத்துக் கொண்டார். மகன் வைத்திருந்த வாசனை திரவியத்தை போட்டுக் கொண்டார். உற்சாகமாய் நடந்து வந்தார்.

அந்த சிறிய சாலையில் ஓரமாக நின்றிருந்த ஒரு காரைக் கடக்கும்போது அவர்மீது ஏதோ பட்டது. திரும்பிப் பார்த்தால் சிறுவன் ஒருவன் பாக்கை மென்று காருக்கு வெளியே துப்பிக் கொண்டிருந்தான். அது இவர் மேல் பட்டது. கையிலும் ப்ளவுஸிலும் பட்டுவிட்டது.

‘‘ஏன் இப்படிச் செய்தாய்?’’ என்று சலித்துக் கொண்டார்.

சிறுவன் பதறிவிட்டான். ‘‘பாட்டி! சாரி பாட்டி, நான் கவனிக்கலை.’’

‘‘உன் அப்பா அம்மா யாருமில்லையா?’’

‘‘அப்பா அருகில் உள்ள கடைக்குச் சென்றிருக்கிறார்.’’

‘‘சரி, கவனமாய் இரு. இப்படி அடுத்தவரை தொந்தரவு செய்யாதே. பொது இடங்களில் எதையும் துப்பாமல் கவனமாக இரு’’ என்று சொல்லிவிட்டு நடந்தார்.

ஒரு நிமிடத்தில், ‘‘அம்மா, நில்லுங்கம்மா’’ என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், இவர்மீது தெரியாமல் துப்பிய சிறுவனும், அவன் அப்பாவும் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். நின்றார்.

அருகில் வந்ததும், ‘‘அம்மா! நான்தான் இந்தப் பையனோட அப்பா. என் பையன் உங்க மேல துப்பிட்டான்னு சொன்னான். அதான் ஓடிவந்தேன்.’’

‘‘பரவாயில்லைங்க! அவன் தெரியாமதானே செய்தான்.’’

‘‘இல்லம்மா! அவன் தெரியாம செய்திருக்கலாம். அதுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கலாம். ஆனா ஒரு தப்பை செய்துட்டு அதை நிவர்த்தி பண்ற வழி இருந்தும், சரி செய்யாம வெறுமே மன்னிப்பு கேக்கிறது சரியில்லைம்மா. அதை அவனுக்குப் புரிய வைக்கத்தான் கூட்டி வந்தேன்.’’

இப்போது அந்த சிறுவன் தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அப்பெண்மணியின் கையில் ஊற்றினான். தேய்த்து கழுவினான். இன்னும் கொஞ்சம் நீரை விட்டு அவர் கையையும் உடையையும் சுத்தமாக்கினான். சுத்தம் செய்ததும், அவன் அப்பா கையில் தயாராய் வைத்திருந்த டவலைக் கொடுத்தார். பெண்மணி துடைத்துக் கொண்டார்.

‘‘என் பையன் செய்ததுக்கு இன்னொரு தடவை மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா’’ என்றார் அந்த அப்பா.

வசதியாக இருந்தாலும், அவர்கள் திமிராக நடக்காமல் பணிவு காட்டியதைப் பார்த்து வணங்கினார் அந்தப் பெண்மணி. பிறகு பிறந்த நாள் விழாவுக்கு அவசரமாக நடை போட்டார்.

விழா ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த வீட்டுக்காரர், ‘‘எங்க முதலாளி வந்துட்டாரு’’ என்று வாசலுக்கு ஓடினார்.

தனக்கு சம்பளம் தரும் முதலாளிக்கு சம்பளம் தரும் முதலாளியைப் பார்க்க ஆர்வமுடன் வாசலை எட்டிப் பார்த்தார் பெண்மணி.

அவர் வேறு யாருமல்ல, தன் மீது துப்பிய மகனை தண்ணீர் விட்டு துடைக்க வைத்து தனக்கு துண்டும் கொடுத்த நபர்தான் வந்து கொண்டிருந்தார். ‘அவர்தான் முதலாளியா’ என்று ஆச்சர்யப்பட்டார்.

‘எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எப்படி பிறரை மதித்து நடக்கிறார்’ என்று நெகிழ்ந்தார். ‘இப்படி பிறர் மனதைப் புரிந்து நடப்பதால்தான் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்’ என்றும் நினைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu