தினம் ஒரு கதை - 106

தினம் ஒரு கதை - 106

‘‘இரவு உணவாக எனக்கு மசாலா தோசை வாங்கிட்டு வர்றீங்களா’’ என்று கர்ப்பிணி மனைவியிடமிருந்து போன் வந்தது.

அவன் ஆச்சர்யமாக, ‘‘சரிம்மா, ஆனா மதியம்தானே ஆகுது. இப்பவே எதுக்கு கேக்குற?’’ என்றான்.

அவர் சிரித்தபடி போனை வைத்து விட்டார்.

அவர்கள் புதிதாக திருமணம் ஆன தம்பதியினர். இருவருக்கும் உறவினர்கள் யாரும் கிடையாது. ஏழ்மையான வாழ்க்கைதான். அவன் அரசுத் தேர்வுகளை எழுதிக் கொண்டே ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் குறைவான வருமானத்துக்கு வேலை பார்க்கிறான். மாதக்கடைசி என்பதால் அவனிடம் காசு சுத்தமாக இல்லை. முதலாளியிடம் கேட்கலாம். ஆனால் அவரிடம் ஏற்கனவே கேட்டாகிவிட்டது. என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனுக்கு போன் வந்தது. தெரிந்தவர் ஒருவருடைய போன். ‘‘தம்பி, என் மகளுக்கு நாளைக்கே புராஜெக்ட் ரிப்போர்ட் கொடுக்கணுமாம். நீ வீட்டுக்கு வந்து கொஞ்சம் டைப் பண்ணி படம் வரைஞ்சு கொடுக்கறியா? 200 ரூபாய் தர்றேன். சின்ன வேலைதான்’’ என்றார்.

இவனுக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. 200 ரூபாய் இருந்தால், அதில் மனைவி கேட்ட மசால் தோசை வாங்கிவிடலாமே என்று நினைத்து அதற்கு ஒப்புக் கொண்டான். இதற்கிடையில் மாலை ஒருமுறை மனைவியிடம் இருந்து மசால் தோசை நினைவுபடுத்தல் போன் வந்தது.

‘வயிற்றில் பிள்ளை இருந்தால் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் சாப்பிட்டே ஆகவேண்டும். அந்த துடிப்பெல்லாம் ஆணாகிய எனக்கு புரியவா போகிறது’ என்று அவனுக்குள்ளே சொல்லிக் கொண்டான். ‘‘கட்டாயம் வாங்கி வருவேன், நீ காத்திரு’’ என்று சொன்னான்.

மாலை அவர் வீட்டுக்குப் போனால், இரண்டரை மணி நேரம் சரியான வேலை. அனைத்தையும் முடித்துக் கொடுத்து விட்டு, அவரிடம் 200 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு நல்ல ஹோட்டலுக்குப் போனான். அங்கே மசால் தோசை விலை பார்த்தான். ஒரு தோசை எழுபது ரூபாய். இரண்டு தோசை பார்சல் கேட்டான்.

பார்சல் கட்டும் இடத்தில் சென்று, ‘‘மசால் தோசை சுவையாக இருக்கட்டும், அது என் கர்ப்பிணி மனைவிக்கு’’ என்று பணிவுடன் சொன்னான். மாஸ்டர் சிரித்தபடி வழக்கத்தைவிட பெரிய சைஸில் தோசை போட்டு, மசாலா கூடுதலாக வைத்துக் கொடுத்தார். ஒரு பேப்பர் கவரில் வாங்கி தன் சைக்கிளின் முன்பக்கம் போட்டுக் கொண்டான். அப்போதும் மனைவியிடம் இருந்து போன். மசாலா தோசை வாங்கிவிட்டதாக சொன்னான்.

வீட்டருகே வரும்போது ஒரு பழக்கடை இருந்தது. ‘சரி, செவ்வாழைப் பழம் இரண்டு வாங்கலாம்’ என்று சைக்கிளை நிறுத்திவிட்டு பழம் வாங்கப் போகும்போதுதான் அது நடந்தது. எங்கிருந்தோ வந்த மாடு ஒன்று அவன் சைக்கிளில் தொங்க விட்டிருந்த மசாலா தோசைகளை அப்படியே கவ்வியது. வாய்க்குள் போட்டு மென்றது. இவன் ஓடி வந்து தடுப்பதற்குள் மாடு ஓடிவிட்டது. அவன் மனைவிக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த மசால் தோசை ஒரு நொடியில் இல்லாமல் போய்விட்டது.

வீட்டுக்கு சோர்வுடன் வந்தான். ஆசையோடு அவன் கைகளைப் பார்த்த மனைவிக்கு வெறுங்கையை விரித்தான். நடந்ததைச் சொன்னான். மனைவியும் சோர்ந்தார். இவன் உடனே தனக்குத் தெரிந்த கஞ்சி ஒன்றை வைத்து மனைவிக்குக் கொடுத்துவிட்டு, அவனும் சாப்பிட்டான். தலை வலித்தது. அப்படியே போய்ப் படுக்கையில் படுத்தான்.

மனைவி அருகில் வந்து சிரித்துக்கொண்டே, ‘‘அது காளை மாடா, பசு மாடா?’’ என்றார்.

‘‘ஆமா, இது ரொம்ப முக்கியம்’’ என்றான் இவன்.

‘‘காளை மாடுன்னா உங்களை மாதிரி அதுவும் கர்ப்பிணி பசுவுக்கு தோசை தேடி அலைஞ்சதா நினைச்சிக்கோங்க. பசு மாடா இருந்தா, அது வயித்துல கன்னுக்குட்டி இருக்கிறதா நினைச்சிக்கோங்க. அப்போ எரிச்சல் வராது’’ என்றார் சிரித்தபடி.

‘‘ம்ம்ம். சரியா போச்சு போ!’’

‘‘மாட்டை அடிச்சீங்களா?’’

‘‘இல்லை.’’

‘‘இப்பதான் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பசிக்குதானே தோசை தின்னிருக்கு, விடுங்க!’’

‘‘இல்ல, நீ ரொம்ப ஆசைப்பட்டியே!’’

‘‘இருந்துச்சுதான். ஆனா உங்க அன்பு எல்லாத்தையும் சரியாக்கிடுச்சு. என்ன உங்க நெற்றி இப்படி சுடுது. நான் இப்படி உள்ளங்கையை வைச்சிக்கிறேன். தூக்கம் வரும்.’’

மனைவி தன் உள்ளங்கையை கணவன் நெற்றியில் வைக்க, அவன் ஒரு குழந்தை மாதிரி தூங்கிப் போனான். ‘குறையொன்றுமில்லை குறையொன்றுமில்லை’ என்று மகிழ்ச்சியுடன் மனதுக்குள் முனகிக் கொண்டே மனைவியும் தூங்கிப் போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu