தினம் ஒரு கதை - 108

தினம் ஒரு கதை - 108

புதிதாய் திருமணம் ஆன மகளைப் பார்க்க திடீரென்று அப்பா வந்திருந்தார். அதுவும் மதியம் 12 மணிக்கு வந்திருந்தார். அவர் ஊரிலிருந்து மகளின் ஊருக்கு வர 8 மணி நேரம் ஆகும். அதிகாலையில் கிளம்பி இருப்பார் போல!

விடுமுறை நாள் என்பதால் மகளும் மருமகனும் மாமனாரை வரவேற்று உபசரித்தார்கள். உணவு வேளை வந்தது. அப்பா முந்திக் கொண்டு, ‘‘நானும் மருமகனும் சாப்பிடுறோம். நீ பரிமாறும்மா’’ என்று மகளிடம் சொல்லிவிட்டார்.

மருமகனும் இதை ஆச்சரியமாகப் பார்த்தார். மூவரும் சேர்ந்தே பரிமாறி சாப்பிடலாம். ‘ஏன் மாமா இப்படி அந்தக் காலத்து மனிதர் போல பெண்களை இரண்டாம்பட்சமாக நினைக்கிறார்’ என்று மெலிதான கோபம் வந்தது. அப்பா சொல்லைத் தட்டாமல் மகள் இருவருக்கும் பரிமாறினார். மாமனாரின் செயல் மருமகனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன், ‘‘எனக்கு ஒரு வேலை இருக்கு மாமா. நைட் தங்கிட்டுப் போங்க’’ என்று மருமகன் கிளம்பினார். அதற்கு மாமனார், ‘‘இல்லைங்க, நான் இப்போ கிளம்பிடுவேன். உங்களை எல்லாம் பாக்க ஆசையா இருந்துச்சுன்னு வந்தேன்’’ என்றார். மருமகன் அதிருப்தியாய் முகத்தை வைத்துக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டார்.

இரவு ஏழு மணிக்கு அவர் திரும்பியபோது, ‘‘அப்பா கிளம்பிட்டாரு’’ என்று சொன்ன மனைவியின் கண்கள் கலங்கியிருந்தன.

‘‘ஏன் அழுற. அப்பா ஞாபகமா?’’

‘‘நீங்க போனதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?’’

‘‘சொல்லு!’’

‘‘அப்பா என்னை சாப்பிடச் சொன்னாங்க…’’

‘‘ம்ம்ம்…’’

‘‘என்னை உட்கார வைச்சி, தட்டு வைச்சி கூட்டு பொரியல் எல்லாம் வைச்சி அவரே எனக்குப் பரிமாறுனாரு. நான் சாப்பிட சாப்பிட அப்பா ‘இப்படி சாப்பிடு, அப்படி சாப்பிடு’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க!’’

‘‘அப்படியா?’’ மருமகன் வியந்தார்.

‘‘‘ஆமா, நான் சின்ன வயசா இருக்கும்போது எட்டாம் வகுப்பு படிக்கும் வரையில அப்பா சில சமயம் மதிய உணவு எடுத்துட்டு வருவாங்க. அவ்வளவு பெரிய பொண்ணா இருந்தாலும், ஸ்கூல்ல எல்லோரும் பாத்தாலும், அப்பாதான் கை கழுவி விடுவாங்க. விட்டுட்டு…’’ மகள் கண்கலங்கினார்.

‘‘சொல்லு!’’

‘‘பக்கத்திலேயே இருந்து ‘சோறு கொஞ்சம் எடுத்துக்க, அந்த பொரியல்ல கொஞ்சம் வைச்சிக்க, ஆம்லெட்ல ஒரு துண்டு கூட வைச்சிக்க, நல்லா சாப்பிடு’ன்னு சொல்வாங்க. அப்பா அப்படி சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் முழுசும் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் அப்படி சலிக்காம எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பாரு. அந்தக் குரல்ல அன்பு மட்டும்தான் தெரியும்.’’

‘‘ம்ம்ம்…’’

‘‘இன்னைக்கும் அதே மாதிரி நான் சாப்பிடும்போது ‘பொரியல் எடுத்துக்க, கீரை சாப்பிடு’னு பக்கத்துல இருந்து ஒவ்வொரு வாய் சோறு சாப்பிடவும் கூட இருந்து சொல்லிக்கிட்டே இருந்தாங்க…’’

மருமகனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன் மகளுக்கு அப்படி கூட இருந்து வார்த்தையாலே உணவு ஊட்டுவதற்காகத்தான் மாமனார் மதிய உணவில் அவளைத் தவிர்த்திருக்கிறார். அவரைப் போய் தப்பாக நினைத்துவிட்டோமே என்று வருந்தினார். மனைவியிடம் கேட்டார்.

‘‘வேற என்ன சொன்னாங்க மாமா?’’

‘‘நான் சாப்பிட்டு முடிச்சதும் அப்பா கிளம்பிட்டாங்க. நைட் திடீர்னு என் நினைவு வந்துச்சாம். அப்பாவால வீட்ல இருக்க முடியலையாம். அம்மா கிட்ட சொல்லிட்டு உடனே பஸ் ஏறிட்டாங்களாம். ரெண்டு மணி நேரம் என்னைப் பாக்குறதுக்கு எட்டு மணி நேரம் பயணம் செய்து, எனக்கு சோறூட்டிட்டு மறுபடி எட்டு மணி நேரம் பயணம் செய்து வீடு போய். அப்பா என் அப்பா. என்னோட அன்பான அப்பா…’’ என்று மகள் அழுதாள். அந்த அழுகையில் ஆனந்தம் தெரிந்தது.

நள்ளிரவு மாமனாரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது. ‘‘நான் நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டேன். இந்நேரம் என் செல்ல மகள் உங்களிடம் அனைத்துமே சொல்லி இருப்பாள். ஆம். சில சமயம் மிக நெருங்கிய உறவுகளிடத்தில் இப்படி எல்லாம் அன்பு பொங்கிவிடுகிறது. அப்படி பொங்குவதை ஏன் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்? அது குழந்தைத்தனமாக இருந்தாலும் வெளிப்படுத்த வேண்டும்தானே!’’

மருமகன் அதைப் படித்துவிட்டு, இதயம் இதயம் இதயம் இதயம் என்று கணக்கிட முடியாத இதய எமோஜிகளை பதிலாக அனுப்பினார்.

தன் மாமானாருக்கு வாழ்க்கையில் முதன்முதலில் அப்படி இதயம் அனுப்புகிறோம் என்று நினைத்து தனக்குள்ளே சிரித்தும் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu