தினம் ஒரு கதை - 107

தினம் ஒரு கதை - 107

ஒருவன் காட்டு வழியே நடந்து செல்லும்போது பாம்பு ஒன்று நகரமுடியாமல் சுருண்டு படுத்திருந்ததைப் பார்த்தான்.

அங்கிருந்த பச்சிலைகளை வைத்து பாம்பைக் காப்பாற்றினான். பிழைத்த பாம்பு அவனைப் பிடித்துக் கொண்டது. ‘‘உன்னைக் கொத்தப் போகிறேன்’’ என்றது.

அவனுக்கு அதிர்ச்சி. ‘‘நான் உன்னை உயிர் பிழைக்க வைத்தேன். என்னையா கொத்தப் போகிறாய். நல்லது செய்தவருக்கு பதிலுக்கு நல்லது செய்வதுதானே முறை’’ என்றான். அதற்கு பாம்பு, ‘‘இல்லை, இந்தக் காட்டில் நல்லது செய்தால் அவர்களுக்குத் தீமை செய்வதுதான் முறை’’ என்றது. இந்த விதி எப்படி வந்தது என்று கேட்டான் அவன். ‘‘எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் பிறந்ததிலிருந்து இந்த விதியைத்தான் காட்டில் பின்பற்றுகிறார்கள்’’ என்றது பாம்பு.

‘‘சரி, நீ என்னைக் கொல்வதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், இந்த விதி எப்படி வந்தது என்பதைத் தெரிந்து வருகிறேன். அதன் பிறகு கொன்று விடு’’ என்றான் அவன். பாம்பு சம்மதித்தது.

அவன் பல காட்டு உயிரினங்களிடம் போய்க் கேட்டான். வயதான யானை ஒன்று அதைச் சொல்ல முன்வந்தது. ‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு உன்னைப் போல ஒரு வழிப்போக்கன் குளிர் காலத்தில் காட்டைக் கடக்க முயற்சி செய்தான். அவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். இங்கே இருந்த வாசனையான மரம் ஒன்று, அதன் பொந்தில் அவனைத் தங்கச் சொன்னது. அவன் அதில் தங்கி ஓய்வெடுத்து, மரத்துக்கு நன்றி சொல்லிச் சென்றான். அவன் ஊருக்குச் சென்று ஒரு வாரம் ஆகியும் மரத்தின் வாசனை அவன் உடலை விட்டுப் போகவில்லை. அவ்வளவு வாசம் அந்த மரம். இதை வெட்டி விற்றால் நல்ல பணம் கிடைக்குமே என்று நினைத்து அவன் பெரிய படையோடு வந்து அந்த வாசனை மரம் அனைத்தையும் வெட்டிச் சென்று விட்டான். இப்போது மொத்த காட்டுக்கும் சேர்த்து இரண்டு வாசனை மரங்களே உள்ளன. அவை பட்டும் போகவில்லை; அதே நேரத்தில் சரியாக வளர்ந்து காய், கனி எதுவும் கொடுக்கவும் இல்லை. அதைப் பார்த்த காட்டுயிர்கள் அனைத்தும், ‘நல்லது செய்தால் பதிலுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விதியை மறப்போம். நல்லது செய்தால் அந்த மனிதன் போல கெட்டது செய்ய வேண்டும்’ என்று விதியை மாற்றிக் கொண்டன’’ என்றது யானை.

இந்தக் கதையைக் கேட்டவன் யானையை அழைத்துக் கொண்டு அந்த வாசனை மரங்களைப் பார்க்கச் சென்றான். அவை இரண்டும் எந்த பலனும் கொடுக்காமல் ஆனால் அழியாமல் நின்று கொண்டிருந்தன. இவன் அவற்றின் அருகிலேயே ஒரு குடிசை போட்டு தங்கினான். இரண்டு நாட்கள் அம்மரங்களையே ஆராய்ந்தான் அதன் வேர்களில் வளர்ச்சி குறைவாக இருப்பதைக் கண்டுகொண்டான். அவனுக்குத் தெரிந்த சிகிச்சைகள் அனைத்தையும் செய்து, அடுத்த நான்கு மாதங்களில் மரத்தை துளிர்க்கச் செய்தான். அவை பூ பூத்து காய்த்து விதை கொடுக்க ஆரம்பித்தன. அந்த விதைகளை காடெங்கும் தூவினான். வாசனை மரங்கள் வளர ஆரம்பித்து காடெங்கும் வாசனை கொடுக்க ஆரம்பித்தன.

இரண்டு வருடங்கள் கழித்து தான் வாக்குறுதி கொடுத்திருந்த பாம்பிடம் சென்றான். ‘‘என் வேலை முடிந்துவிட்டது இப்போது காட்டின் விதிப்படி என்னை நீ கொத்தலாம்’’ என்றான்.

அதற்கு பாம்பு, ‘‘இல்லை, நீ கெட்டது செய்யப் போன எங்களுக்கு நல்லதே செய்திருக்கிறாய். பல ஆண்டுகளுக்குப் பிறகு காட்டை வாசனையாக்கி இருக்கிறாய். உன்னால் எங்கள் காட்டின் விதி மாறிவிட்டது. இனிமேல் நாங்கள் நல்லது செய்பவருக்கு நல்லதே செய்வோம். நீ போகலாம்’’ என்றது. இவன் பாம்பை வணங்கி விடைபெற்றான்.

காட்டில் நடந்து வரும்போது, ‘‘தனி மனிதன் அறத்தை மீறும்போது, அவன் இந்த சமுதாயத்தின் சிந்தனையே குழப்பி பெரும் கஷ்டம் கொடுக்கிறான்’’ என்று நினைத்தான். வீட்டை அடைந்தான். அங்கே படுக்கையில் இருந்த தன் முதிய தந்தையிடம் சென்றான். ‘‘அப்பா, நீங்கள் எந்த வாசனை மரங்களை அழித்தீர்களோ, அவற்றை நான் வளரச் செய்துவிட்டேன். அதோடு இல்லாமல் அக்காட்டின் சட்டத்தையும் நல்லவிதமாக மாற்றிவிட்டேன்’’ என்றான்.

கண்ணீர் வழிய அவர் எழுந்து உட்கார்ந்து, ‘‘என் மனம் சரியாகிவிட்டது. இனி உடலும் சரியாகிவிடும்’’ என்று சொன்னபடி மகன் தோள்மேல் சாய்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu