தினம் ஒரு கதை - 103

தினம் ஒரு கதை - 103

தியேட்டரில் பகல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. வெளியே சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உள்ளே ஏ.சியை அதிகமாக வைத்திருந்தனர். அது ஜில்லென்ற குளிரைக் கொடுத்து, படம் பார்க்க வந்தவர்களை உற்சாகப்படுத்தியது. பகல் நேரமாதலால் குடும்பத்தோடு வருபவர்களை விட தனித் தனியான ஆண்கள் கூட்டம் அதிகமாய் இருந்தது. அவர்கள் ஏ.சியை அனுபவித்தபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இடைவேளை வந்தது. பாப்கார்ன், காபி குடித்து விட்டு வந்தார்கள். படம் மீண்டும் ஆரம்பமானது. ஏ.சியை அணைத்து வைத்திருக்கிறார்கள் என்பது ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே தெரிந்தது. அவர்கள் மேல் பட்டது முந்தைய பொழுதின் ஏ.சி குளிரின் மிச்சம்தானே தவிர புதுக் குளிர் வரவில்லை. ‘சரி, மறந்திருப்பார்கள். திரும்பவும் போடுவார்களாய் இருக்கும்’ என்று அமைதியாகப் படம் பார்த்தார்கள். ஆனால் ஏ.சி வரவில்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு புழுங்க ஆரம்பித்தது. மெல்ல பார்வையாளர்கள் தனித் தனியாக புலம்ப ஆரம்பித்தார்கள். ஒருவர் எழுந்து வெளியே சென்று பார்த்தார். திரும்ப உள்ளே வந்தார்.
‘‘ஏன் ஏ.சி போடலையாம்?’’ அவரிடம் இன்னொருவர் கேட்கிறார்.
‘‘தெரியல, யாரும் வெளிய இல்லை!’’
இப்போது மெல்ல மெல்ல அனைவரும் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
‘‘ஏ.சியைப் போடு… ஏ.சியைப் போடு’’ என்று தனித் தனியாக கத்தினார்கள். யாரும் வரவில்லை. ஏ.சி போடப்படவில்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் அனைவரும் எழுந்தார்கள். அணி சேர்ந்தார்கள். மொத்தமாக தியேட்டர் ஹாலை விட்டு வெளியே போனார்கள். அங்கே உணவு விற்குமிடத்தில் பார்த்தார்கள். மேனேஜர் அறைக்குப் போய்ப் பார்த்தார்கள். அங்கேயும் யாருமில்லை. அனைவருக்கும் மர்மமாய் ஆகிவிட்டது.
அப்போதுதான் ஒருவன் கவனித்தான். ‘‘அங்க பாருங்க… ஒருத்தர் ஓடுறாரு. அவர்தான் மேனேஜரா இருக்கணும்’’ என்றான். அங்கே 50 வயதைத் தாண்டிய மேனேஜர் ஓடிக் கொண்டிருந்தார். கூட்டம் அவரைத் துரத்தியது. அவர் இப்படி ஓடி சுற்றி ஆண்கள் டாய்லெட்டுக்குள் சென்று விட்டார். கூட்டமும் டாய்லெட்டுக்குள் போனது.
அங்கே மேனேஜர் புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தார். அருகே இன்னொருவரும் நின்று கொண்டிருந்தார்.
‘‘ஏன் சார் ஏ.சி வேலை செய்யலை? வெளிய வந்து பார்த்தா இப்படி ஓடி ஓடி எங்களைக் குழப்புறீங்க?’’
மேனேஜர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். அங்கே மொத்தம் எத்தனை சிறுநீர் கழிக்கும் ஜாடிகள் இருக்கிறது என்று எண்ணினார். இருபது ஜாடிகள் இருந்தன. இப்போது மேனேஜர் பேசினார்.
‘‘இதுல பாருங்க சார்… பபுள் கம் மென்னுட்டு யாரோ துப்பி வச்சிருக்காங்க. இப்படி பபுள் கம் மட்டும் மொத்தம் நாலு சிறுநீர் ஜாடில கிடக்குது. அது போக மூணு ஜாடில பான் பராக் போட்டு துப்பிட்டுப் போயிருக்காங்க. இதையெல்லாம் யார் சுத்தப்படுத்துவாங்கன்னு நினைக்கிறீங்க? இதோ இவர்தான். இவரு உங்களையும் என்னையும் போல ஒரு மனிதர்தானே. இவர் இந்த பபுள் கம்மை கைவைத்து எடுக்க வேண்டுமா. சொல்லுங்கள்?’’
மேனேஜர் அவரே போய் அந்த நாலு பபுள் கம்மையும் தன் கையால் எடுத்து உள்ளங்கையில் வைத்துக் காட்டினார். கூட்டம் அருவருப்பில் ஒதுங்கியது. ‘‘இதை இப்படி பார்க்கக்கூட உங்களுக்கு அருவருப்பா இருக்கே… அப்ப சுத்தம் செய்றவரு எப்படி கையால எடுக்க முடியும்? பான் பராக் துகள்கள் ஓட்டையில சிக்கிக்கும். அதையும் கையாலதான் சுத்தப்படுத்தணும். மனுஷனை மனுஷனா மதிக்கிறவங்க இப்படித் துப்பி வைக்க மாட்டாங்க’’ என்றார்.
இப்போது கூட்டத்தில் இருந்து பபுள் கம் மற்றும் பான் பராக் துப்பியவர்கள் முன்னால் வந்து, சுத்தம் செய்யும் தொழிலாளியின் கைகளைப் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டார்கள்.
மேனேஜர் தொடர்ந்தார்… ‘‘சாரி! இதை உங்களுக்குப் புரிய வைக்கணும்னுதான் ஏ.சியை அணைச்சேன். வேறு எப்படி சொன்னாலும் நமக்குப் புரிய மாட்டேங்குது சார். இப்படி ஒரு சூழ்நிலைக்கு உங்களைக் கொண்டு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதுக்காக உங்க நூறு பேருக்கும் இப்ப படம் பாக்கும்போது ஜூஸ் கொடுக்கச் சொல்றேன். நன்றி’’ என்றார்.
அவர்கள் நூறு பேரும் கலைந்து சென்றார்கள். இனிமேல் அவர்கள் வாழ்க்கை முழுவதும் சுகாதார ஊழியர்களின் உணர்வு புரிந்து நடந்து கொள்வார்கள் என்ற உணர்வு அவர்கள் முகத்தில் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu