தினம் ஒரு கதை - 101

தினம் ஒரு கதை - 101

பணக்காரர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். வெயில் அதிகமான அந்த மதிய வேளையில் கார் ரிப்பேர் ஆகி வழியிலேயே நின்றது. கார் மெக்கானிக்கிற்கு போன் செய்தார். ‘‘வர ஒரு மணி நேரம் ஆகும்’’ என்றார் அவர்.

அந்த இடத்தில் ஆட்டோவும் கிடைக்கவில்லை. வேறு காரில் லிஃப்ட் கேட்கவும் வெட்கம். புதிதாய் ஒரு கார் வாடகைக்கு அமர்த்தினாலும், வர முக்கால் மணி நேரமாவது ஆகக்கூடிய ஒதுக்குப்புறமான இடம் அது. ‘வேறு வழியில்லை. மெக்கானிக் வந்து ரிப்பேர் செய்யும்வரை காத்திருப்போம்’ என்று அங்கொரு வேப்ப மரத்தடியில் ஓய்வெடுக்க நினைத்தார்.

அங்கே ஓர் இளம்பெண் பதநீர் விற்றுக் கொண்டிருந்தார். அருகே ஒரு சிறிய கட்டிலில் குழந்தை அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு கிளாஸ் பதநீர் சொல்லிவிட்டு மரத்தடியில் அமர்ந்தார்.

பதநீர் வாங்கிக் குடித்து விட்டு, ‘‘இது உன் பாப்பாவாமா?’’ என்றார்.

‘‘ஆமா சார், நேத்து வரைக்கும் காய்ச்சல். அசந்து தூங்குது.’’

‘‘காய்ச்சலா? ஜலதோஷம் இருந்துச்சாம்மா? டாக்டர் கிட்ட காட்டுனியா?’’

‘‘அது ஒரு பெரிய கதை. எல்லோரும் என்ன ஏமாத்திட்டாங்க சார்!’’

‘‘என்னம்மா சொல்றே? விளக்கமா சொல்லு! இன்னொரு கிளாஸ் பதநீர் கொடு.’’

அந்தப் பெண் பதநீர் கொடுத்துக் கொண்டே சொன்னாள். ‘‘போன வாரம் தங்கச்சி வீடு சென்னையில இருக்குன்னு போனேன் சார். பாப்பாவுக்கு நாலு வயசு ஆகுது. திடீர்னு காது வலி. வலி அதிகமாகவே பக்கத்துல இருந்து பாலி ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனேன். அது கொஞ்சம் பெரிசு!’’

‘‘பாலி ஹாஸ்பிடலா? ஓ… பாலி க்ளினிக்கை சொல்றியா. பாலின்னா தமிழ்ல ‘பலதரப்பட்ட’ன்னு அர்த்தம். ஒரு மருத்துவமனையில பல ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் வந்து சிகிச்சை கொடுத்தா அதுதான் பாலி க்ளினிக்.’’

‘‘என்னவோ சார்! அங்க அழைச்சிக்கிட்டு போனேன். காதுல அழுக்கு இருக்குன்னு சொன்னாங்க. ஒரு மருந்து கொடுத்து ஊற வெச்சி கொண்டு வாங்கன்னு சொன்னாங்க. அப்படி சொன்னதுக்கு 400 ரூபாயாம். மருந்து விலை 70 ரூபாயாம். வாங்கி மூணு நாள் ஊத்தி ஊற வெச்சி கொண்டு போனேன். காதுல சிரிஞ்சாட்டம் ஒண்ண வெச்சி தண்ணியடிச்சி அழுக்கெடுத்தாங்க.’’

‘‘ஓஹோ!’’

‘‘அதுக்கு 700 ரூபாயாம். ஏன் இவ்ளோ காசுன்னு கேட்டேன் சார். இப்படி உடம்புல கைவைச்சி சிகிச்சை கொடுத்தாலே 700 ரூபாயாம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இருக்கிற காசு எல்லாம் எடுத்து கொடுத்தேன். அப்புறம் ஒரு மருந்து எழுதிக் கொடுத்தாங்க. அதோட விலை 50 ரூபாய். ‘இரண்டு நாள் இதைக் காதுல விடும்மா’ன்னு சொன்னாங்க. ‘அதுதான் காதுல அழுக்கு எடுத்தாச்சே, இதுக்கே இவ்வளவு காசு பிடுங்கிட்டாங்களே. இன்னும் ஏன் மருந்தை விடணும்’னு நான் வாங்கி விடலை சார். அப்புறம் காதுல ஏதோ கிருமி தொற்றி காய்ச்சல் வந்துச்சு. பயங்கர காய்ச்சல். அதுக்காக இன்னொரு ஆஸ்பத்திரிக்குப்-போனேன். அங்க ஊசி போட்டு 300 ரூபாய் வாங்கிட்டாங்க. அப்ப செலவு எவ்ளோ…’’
‘‘400 + 70 + 700 + 300. எல்லாம் சேர்த்து 1,470 ரூபாய் ஆச்சும்மா.’’

‘‘வருஷம் முழுக்க இந்த வெயில்ல பதநீ வித்துட்டு இருப்பேன் சார். என் புருஷனும் தவறிட்டாரு. நாலு நாள் சென்னைல இருக்கிற தங்கச்சி வீட்ல தங்கி பீச், வள்ளுவர் கோட்டம், அப்புறம் ஒரு சினிமா பாத்துட்டு வர்றது மட்டும்தான் சார் எனக்குப் பொழுதுபோக்கு. ஆனா இந்த ஆஸ்பத்திரிகாரங்க அதிக காசு வாங்கினதால அந்த பொழுதுபோக்கும் போச்சு. ஏன் சார்… நாங்க ஏழைங்க எப்பவும் உழைச்சிட்டே இருக்கணுமா? வேலை செய்து செய்து அழிஞ்சி போயிடணுமா. இரண்டு நாள் கூட சந்தோஷமா இருக்க இந்த சமூகம் எங்களை விடாதா? மொத்த காசையும் பிடுங்குது இந்த சென்னை.’’

‘‘பாவம்மா நீ!’’

‘‘ஏதோ தோணுச்சி சார், சொல்லிட்டேன்!’’

‘‘பரவாயில்லம்மா, நீ சொல்றது எல்லாமே சரி’’ என்று சொல்லிவிட்டு காசு கொடுத்தார்.

‘‘சார், 2000 ரூபாய்க்கு என்கிட்ட சில்லறை இல்ல சார்!’’

‘‘இல்லம்மா, அந்த நோட்டே உனக்குதான். நீ சொன்ன அந்த பாலி க்ளினிக்கை வச்சு நடத்துறது நான்தான். நீ சொல்லும்போதுதான் நான் எவ்வளவு தப்பு பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கே தெரியுது. இதை வேணும்னு நான் செய்யலை. மருத்துவமனை பிரபலம் ஆகும்போது, அதோட மருத்துவ செலவும் அதிகமாகிருது. இனிமே ஏழைகளும் மருத்துவம் பாக்குறது மாதிரி சிஸ்டத்தை மாத்தி அமைக்கிறேன்மா. இதை எனக்குக் கற்றுக்கொடுத்தது நீதான். அதுக்கான குருதட்சணை இது. இதை வாங்கிக்கம்மா!’’

‘‘தப்பா எடுத்துக்காதீங்க டாக்டர்! இப்ப நான் இதை வாங்கிட்டேன்னா, பாதிக்கப்பட்டவங்களுக்கு மேற்படி அதிகமா 500 ரூபாய் கொடுத்துட்டோம்னு உங்க பணக்கார புத்தி மாறினாலும் மாறிடும். எனக்கு பதநீர் காசு கூட வேண்டாம். ஆனா மாற்றம் கொண்டு வாங்க. இல்லன்னா நாங்க ஏழைகள் அம்பது ரூபாய் கொடுத்து மெடிக்கல் கடைக்காரங்ககிட்ட ரகசியமா ஊசி போட்டுக்கிட்டுதான் வரணும். அது எவ்வளவு ஆபத்து’’ என்றாள்.

டாக்டர் நிலைகுலைந்து நின்றார். அப்போது மெக்கானிக் தன் உதவியாளரோடு வந்து, ‘‘15 நிமிஷத்துல சரி பண்ணிடலாம் சார்’’ என்றார்.

‘‘சரி பண்ணி எடுத்துட்டு வாங்க. நான் இப்படி நடந்து போயிட்டு இருக்கேன். பிக் அப் பண்ணிக்கோங்க’’ என்றார் டாக்டர். மனதில் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி வெப்பத்துக்கு, அந்த சூரிய வெப்பம் பெரிதாய் அவரை வாட்டவில்லை.

வியர்வை வழிய நடந்து கொண்டிருந்தார். அவர் கையில் அந்த 2,000 ரூபாய் நோட்டு அப்படியே அசைந்து கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu