மகாத்மா மொழிகள்!

மகாத்மா மொழிகள்!

 • அகிம்சையிலும் சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.
 • பொய்யால் எந்தப் பெருமையும் இல்லை; உண்மையால் எந்தச் சிறுமையும் இல்லை!
 • சுய மனக்கட்டுப்பாடுகளை உருவாக்கிக்கொள்பவரே உண்மையில் சுதந்திரமானவர்.
 • ஒருவன் தனக்குத் தேவையற்றதை விலைக்கு வாங்கினால், அது அவன் பணத்தை அவனே திருடுவதற்குச் சமமாகும்.
 • பலவீனர்கள் பிறரை மன்னிக்க மாட்டார்கள்; மன்னிப்பது என்பது வலிமையுடையோரின் குணம்.
 • மனதின் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அதே சமயம், காற்றில் நமது கால்கள் அடித்துக்கொண்டு போய்விடக்கூடாது. - மகாத்மா காந்தி.
 • மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம், நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்.
 • வெறும் ‘உண்மை’ என்ற வார்த்தைக்கு மதிப்பு இல்லை. உண்மையை மனிதர்கள் பின்பற்றி, அவர்களிடம் அது மாற்றத்தை ஏற்படுத்தி, அதை நிலைநாட்ட அவர்கள் தங்களையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதுதான் உண்மை.
 • எது முழுமையாகவும் உண்மையானதாகவும் இல்லாமல் இருக்கிறதோ, அதை எந்தப் பெயர் சொல்லி அழைப்பதிலும் பயனில்லை.
 • எல்லாவற்றிற்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.
 • தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது, தரையில் தூசுகளை அகற்றும் துடைப்பத்தின் செயல் போன்றது. அதனால், மனம் சுத்தமாவதுடன் பிரகாசமடையும்.
  -
 • நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும், உண்மை உண்மையாகத்தான் இருக்கும்!
 • உண்மை என்பது சுய ஆதாரம் கொண்டது. அதை மூடியிருக்கும் அறியாமை என்ற மூடியை விலக்கி விட்டால், உண்மை பளீரெனப் பிரகாசிக்கும்.
 • நீ மேற்கொள்ளும் செயல் உண்மையானதாக இருந்தால் அது எந்த காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
 • எத்தகைய ஆதரவுப் பிரசாரம் நடந்தாலும், பொய்மை எப்போதும் உண்மையாகாது; பிறர் கவனிக்கவில்லை என்றாலும் உண்மை எந்த நேரத்திலும் பொய்மையாகாது.
 • உண்மை பொய்மையைக் கொல்கிறது. அன்பு கோபத்தை வெல்கிறது. தன்னை வருத்துதல் வன்முறையை அறுக்கிறது. இந்த உயரிய கொள்கைகள் துறவிகளுக்கானதல்ல; நமக்கானது.
 • அகிம்சையும் வாய்மையும் எனது இரு நுரையீரல்கள் போன்றவை.
 • எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால், வகுப்புவாதத்தையும், மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக் கூடிய எல்லா எழுத்துக்களையும் தீண்டத்தகாதவையாக அறிவிப்பேன்.
 • மதம் பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும். கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக்கூடும். மரமாக இருக்கும் மதம் என்னவோ ஒன்றுதான்.
 • நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது.
 • நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; நீங்கள் செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஏனெனில், நீங்கள் செய்யவில்லை என்றால், உங்களுக்காக எவரும் அதைச் செய்ய மாட்டார்கள்.
 • நமது செயல்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாம் அறிய முடியாது. ஆனால் ஒன்று, எதையுமே செய்யவில்லை என்றால் எதுவுமே விளையாது.
 • உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பும் நாம் முதலில் மாற வேண்டும். நீ எந்தவிதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அதுபோலவே நீ மாறு. பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, முதலில் அதுபோல நீ மாறு.
 • உங்களிடம் வேடிக்கை உணர்வு இல்லையென்றால், நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்.
 • தீர்மானம் மிக்க மன உறுதியும், எந்தச் சூழ்நிலையிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு குழுகூட வரலாற்றின் போக்கையே மாற்றும் திறன் படைத்தது.
 • செயல்தான் முக்கியம்; செயலின் பலனல்ல. நீ சரியானதைத்தான் செய்ய வேண்டும். உன் செயல்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது உனக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால், நீ ஒன்றுமே செய்யாமலிருந்தால் எந்தப் பலனுமே கிடைக்காது அல்லவா!
 • குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. அந்தக் குறிக்கோளை அடைவதில் இல்லை.
 • திருப்தி முயற்சியில் இருக்கிறது; முழுமையில் அல்ல. முழுமுயற்சிதான் முழுவெற்றி.
 • ஒரு டன் அளவுக்கு போதனை செய்வதை விட ஒரு துளி அளவு பின்பற்றுதலே சிறந்தது.
 • ஒருவன் தான் மேற்கொள்ளும் செயலின் முடிவை அறிந்துகொள்வதில் கவலையாக இருந்தால், அவனுக்கு தடைகளும் எதிர்ப்புகளும்தான் அதிகம் தென்படும்.
 • மகிழ்ச்சியற்ற நிலையில் மேற்கொள்ளும் எந்தச் செயலும், அதைப் பெறுபவருக்கோ வழங்கும் நமக்கோ எந்தப் பயனும் அளிக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu