காந்தி வேட்டி!

காந்தி வேட்டி!

காந்தி வேட்டி!

காந்தி வேட்டி!

இந்திய சுதந்திரம் குறித்து பேசும் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, நடுக்கும் குளிரில் பிரிட்டன் தலைநகரம் லண்டனுக்கு ஒற்றை வேட்டியை கம்பீரமாக அணிந்தபடி சென்றார் மகாத்மா காந்தி. பிரிட்டிஷ் மகாராணியையும் மன்னரையும் சந்தித்துப் பேசிவிட்டு பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியில் வந்த காந்தியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்… ‘‘மன்னர் அணிந்திருந்த ஆடம்பரமான உடைகளைப் பார்த்ததும், குறைவாக உடுத்தியிருக்கிறோம் என உங்களுக்குத் தோன்றியதா?’’
காந்தி சிரித்தபடியே சொன்னார்… ‘‘எங்கள் இரண்டு பேருக்கும் போதுமான அளவு உடையை அவர் அணிந்திருந்தார்!’’

அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இந்த சந்திப்பை கடுமையாக விமர்சித்தார். ‘அரை ஆடை அணிந்த பக்கிரி’யை அரச குடும்பம் சந்தித்துப் பேசியது பிரிட்டிஷ் மரபுக்கு இழுக்கு என்பது அவர் வாதம். ஆனால் இந்த அரை ஆடை அணிந்த மனிதரை இந்திய மக்கள் மட்டுமில்லை, பிரிட்டன் மக்களும் ஆராதித்தனர்.
தான் எந்த வகை ஆடை அணிந்தாலும் அதைப் பெருமிதமாகக் கருதிய காந்தியை, ஒற்றை வேட்டி மட்டுமே போதும் என முடிவெடுக்க வைத்தது தமிழ் மண்தான்.

இளம் வயதில் பாரம்பரிய குஜராத்தி உடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த காந்தி, லண்டனில் சட்டம் படிக்கச் சென்றபோது கோட் & சூட், பட்டுத் தொப்பி, கையில் பிரம்பு என ஒரு கனவான் தோற்றத்துக்கு மாறினார். அந்த நாளில் ஐரோப்பிய கல்வி பயின்ற இந்திய மேல்தட்டு வர்க்கத்தினர் கோட் & சூட்டை விடுவதில்லை. தென் ஆப்ரிக்காவுக்கு வழக்கறிஞர் பணி செய்யச் சென்றபோதும் அதை மாற்றவில்லை அவர். ஆனால் தனது இந்திய அடையாளமாக தலையில் தலைப்பாகை வைத்துக்கொண்டார். அந்த தலைப்பாகையுடன் நீதிமன்றத்திற்கு வந்த காந்தி, நீதிமன்ற மரபை மீறிவிட்டதாகக் கருதினார் நீதிபதி. காந்தியிடம், ‘‘தலைப்பாகையைக் கழற்றி வைக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும்’’ என ஆணையிடுகிறார். தலைப்பாகையைக் கழற்ற மறுத்த காந்தி, ‘‘நீங்கள் ஆணையிட்டதால் அதை ஏற்றுக்கொண்டு வெளியேறுகிறேன்’’ என்று சொல்லி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். உடையை தனது அடையாளமாகக் கருதிய காந்தி, அதை நீதிமன்ற மரபுகளுக்காக மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
அதே கோட்டும், சூட்டும் அணிந்த நவ நாகரிக மனிதராகவே தென் ஆப்ரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய மகாத்மா, சுதந்திரப் போராட்டக் கனலை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சுற்றி வந்தார். 1921ம் ஆண்டு செப்டம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் அவர் மேற்கொண்ட மதுரைப் பயணம்தான், ஒற்றை வேட்டியை மகாத்மாவின் அடையாளம் ஆக்கியது.

மதுரை மேல மாசி வீதியில் இருந்த ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கிய அவர், மதுரையைச் சுற்றிய கிராமங்களுக்குச் சென்று ஏழை மக்களின் வாழ்வை தரிசித்தார். பலரும் உடுத்த சரியான ஆடையின்றி குளிரில் வாடுவதைக் கண்டார். கோவணத்துடன் வயல்களில் வேலை செய்த ஏழை விவசாயியைப் பார்த்து அதிர்ந்தார். ‘ஒரு துணிக்கும் அதிகமாக இரண்டாவது துணி வாங்கவும் இயலாத நிலையில் நாட்டில் பெரும்பான்மை மக்கள் இருக்க, தனக்கு மட்டும் ஏன் இந்த ஆடம்பரம்’ என அவருக்குள் உறுத்தல் எழுந்தது.

அன்றிரவே காந்தி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்தபோது இடுப்பில் ஒற்றை வேட்டி அணிந்து, மேலே சட்டை ஏதும் அணியாமல், மேலாடை போர்த்தியபடி மேடையில் தோன்றினார். இப்படி அவரது ஆடை மாற்றம் தமிழகத்தில்தான் நிகழ்ந்தது. அன்று முதல் கைராட்டையும் வேட்டியுமே அவரது அடையாளங்களாயின. குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் வேட்டியைத் தவிர மேலாடை எதுவும் அணியவில்லை.

‘அந்நியத் துணிகளைப் புறக்கணிக்க வேண்டும்’ எனச் சொல்லி அவர் சுதேசி இயக்கத்தைத் துவக்கியதன் நோக்கங்கள் இரண்டு. ஒன்று, இந்தியாவின் ஏழை நெசவாளர்கள் வாழ்வு பெற வேண்டும் என்பது; இரண்டாவது, விவசாயிகளின் துணைத் தொழிலாக நெசவு ஆக வேண்டும்; அதன்மூலம் அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பது.

‘சுதேசி என்று நான் கருத்தில் கொண்டிருப்பது இந்தியாவின் தேவைகளுக்குப் போதுமான துணியை உற்பத்தி செய்வதேயாகும்; உள்நாட்டில் உற்பத்தியைத் தூண்டி விடுவதற்காக மக்கள் சுதேசித் துணியை மட்டுமே பயன்படுத்த உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பெண்கள் உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளின் கிராக்கிக்காகவும் நூல் நூற்றார்கள். அவர்கள் முரட்டு நூல்களை மட்டுமின்றி உலகிலேயே மிக மெல்லிய நூலையும் நூற்றார்கள். நமது முன்னோர்கள் நூற்றது போன்ற மெல்லிய நூலை எந்த இயந்திரமும் இன்று வரை நூற்க முடியவில்லை. அப்போது நம்முடைய துணி அனைத்தையும் நாமே உற்பத்தி செய்தோம்.

நமது பெண்கள் தங்கள் குடிசையில் மிக நேர்த்தியான நூல் நூற்றார்கள். அதன் மூலம் கணவரின் வருமானத்துக்கு ஒரு துணை வருமானம் தேடித் தந்தார்கள். கிராமத்து நெசவாளர்கள் அந்த நூலை நெய்தார்கள். விவசாய வேலை பார்த்த பெண்கள், தங்களுடைய ஓய்வு நேரத்தை மிக இயற்கையான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு அது உதவியது. இன்று நமது மகளிர் தங்கள் கைத்திறனை இழந்து விட்டார்கள். கோடிக்கணக்கான மக்கள் கட்டாயமாக சோம்பி இருப்பதால் நாடு வறுமையடைந்துவிட்டது. கலைத்திறன் மிக்க நெசவாளர் இனத்தில் பாதிப் பேர் மறைந்து போயினர். கையால் நூற்ற மெல்லிய நூல் இல்லாத காரணத்தால், மீதிப்பேர் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நூலை நெசவு செய்து கொண்டிருக்கிறார்கள்’ என நூறு ஆண்டுகளுக்கு முன்பு வருத்தத்தோடு சொன்னார் காந்தி.
இந்த நிலையை அவர் மாற்ற முயன்றார். நமது தேசத்தில் உருவான ஆடைகளை அணிவதே நமக்கு கண்ணியம் தரும்; நமது தன்மானத்தின் அடையாளம் அதுதான் என நம்பினார் அவர்.

1921ம் ஆண்டு பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது மகாத்மா காந்தியின் தலைமையில் டெல்லியில் மாபெரும் தீ வளர்த்து விலையுயர்ந்த ஆடைகள் எரிக்கப்பட்டன. அதைப் பார்த்து வேதனைப்பட்ட காந்தியின் ஆங்கிலேயே நண்பர் சி.எஃப்.ஆண்ட்ரூஸ், ‘‘இந்தத் துணிகளை எரிப்பதற்கு பதிலாக ஏன் அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்கக்கூடாது?’’ என்று கேட்டார். அதற்கு காந்தி சொன்ன பதில்… ‘‘எங்கள் ஏழைகளுக்குக்கூட தன்மானம் உண்டு!’’. காந்தி இந்தியாவின் அடையாளம் என்றால், இந்தியத் தயாரிப்பான ஆடைகளும் வேட்டியும் தன்மானத்தின் அடையாளம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu