காந்தி சினிமா!

காந்தி சினிமா!

காந்தி சினிமா!

தன் வாழ்நாள் முழுக்க சினிமாவை வெறுத்த காந்தியின் வாழ்வைப் பற்றி மூன்று முக்கியமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பற்றிய முதல் படத்தை எடுத்தவர் ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர், ஏ.கே.செட்டியார். 1937ம் ஆண்டு தொடங்கி பல நாடுகளைச் சுற்றி, ஏராளமான தகவல்களையும் துண்டு துண்டு சலனப்படங்களையும் சேர்த்து ‘காந்தி’ படத்தை உருவாக்கிய இவருக்கு அதனாலேயே ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்ற பெயர் கிடைத்தது. ஏ.கே.செட்டியார் ஒருமுறைகூட காந்தியிடம் நேரடியாக பேசியதில்லை. ஆனாலும் காந்தியின் பக்தர்.
காந்தி நிகழ்த்திய உரைகள், தலைவர்களுடனான சந்திப்புகள் என தனிப்பட்ட முறையில் சிலர் படம் பிடித்து வைத்திருந்ததை எல்லாம் சேகரித்து தமிழிலும் தெலுங்கிலும் அவர் இந்தப் படத்தை உருவாக்கினார். படத்தை வெளியிடும் நேரத்தில் பிரிட்டிஷ் அரசு இதைப் பறிமுதல் செய்ய முயன்றது. ரகசியமாகப் பதுக்கி வைத்து பிறகு இதை ரிலீஸ் செய்தார் செட்டியார்.
சென்னை, காரைக்குடி, சிதம்பரம் என பல நகரங்களில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தை, இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் டெல்லியில் திரையிட்டார் செட்டியார். அன்று காந்தி கொல்கத்தாவில் இருந்ததால், இந்தப் படத்தைப் பார்த்துதான் தேசத் தலைவர்கள் திருப்தி அடைந்தார்கள்.

  • இன்னொரு படம், ‘காந்தியைப் பற்றிய ஒரு சிறந்த திரைப்படத்தை வெள்ளைக்காரரால்தான் எடுக்க முடியும்’ என்ற கருத்தை ஏற்படுத்திய ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’. மகாத்மா வாழ்நாள் முழுக்க எதிர்த்த பிரிட்டனில் பிறந்தவர் அட்டன்பரோ. காந்தியின் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியால் 20 ஆண்டுகள் போராடி இந்தப் படத்தை அவர் எடுத்தார். பென் கிங்ஸ்லி என்ற நடிகர் இந்தப் படத்தில் காந்தியாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் காந்திய சிந்தனைகள் மீண்டெழ அவருடைய ‘காந்தி’ படம் ஒரு கருவியாக இருந்தது. எட்டு ஆஸ்கர் விருதுகளை இந்தப் படம் பெற்றது.
    ‘கையில் குச்சி ஊன்றிக் கொண்டிருக்கும், உடம்பில் ஏதோ ஒரு துணியை சுற்றிக் கொண்டிருக்கும் இந்தச் சிறிய பழுப்பு நிற மனிதனைப் பற்றி அறிந்துகொள்ள எவருக்கு ஆர்வமிருக்கும்?’ என மேற்கத்திய பட நிறுவனங்கள் நிராகரித்தபோது, 5 கோடி ரூபாய் நிதியுதவி செய்து இந்தப் படத்தை எடுக்க இந்திரா காந்தி உதவினார். ‘‘இது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை முழுமையாகச் சொல்லும் திரைப்படம் அல்ல. காந்தி எனும் மகத்தான எளிய மனிதரின் வாழ்க்கையை மூன்று மணி நேரத்தில் திரையில் காட்டும் முயற்சி மட்டுமே’’ என அட்டன்பரோ சொன்னார்.
  • ஷ்யாம் பெனகலின் ‘தி மேகிங் ஆஃப் மகாத்மா’ திரைப்படம், காந்தியின் 21 ஆண்டு கால தென் ஆப்ரிக்க வாழ்க்கையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்கிறது. ரஜித் கபூர் என்பவர் இதில் காந்தியாக நடித்திருந்தார். காந்தியின் நகைச்சுவை உணர்வையும் இந்தப் படம் காட்டுகிறது. ‘‘நமது போராட்டத்தால் என்ன பயன்? நாம் சொல்வது அரசாங்கத்தின் காதுகளில் விழுவதே இல்லை’’ என தொண்டர்கள் பலர் விரக்தியோடு புலம்பும்போது, ‘‘என்ன செய்வது? என் குரல் அப்படி!’’ என்று சிரிக்கும் காந்தியை இந்தப் படத்தில் பார்க்கலாம். ‘‘ஒரு சத்தியாக்கிரகி தனக்கு எதிர்நிலை கொண்டவனை நம்பவேண்டும். அவன் தன்னை இருபது முறைகள் ஏமாற்றினாலும் கூட’’ என்று அகிம்சைப் போராட்டத்தின் இலக்கணம் சொல்லும் காந்தி, இதில் நிறைந்து நிற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu