காந்தி எனும் அதிசயம்!
காந்தி எனும் அதிசயம்!
மகாத்மா காந்தியே ஒரு அதிசயம். அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விஷயங்கள் அபூர்வமானவை; அதிசயமானவை. அவரைப் பற்றிய நூல்களிலும், அவர் எழுதிய நூல்களிலும் காணக் கிடைக்கும் தகவல்களைத் தாண்டி, அவரோடு பழகிய பலர் தந்திருக்கும் அந்த விஷயங்கள் இங்கே…
- மகாத்மா தன் வாழ்வில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 18 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறார். இது கிட்டத்தட்ட இந்த உலகத்தை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.
- மகாத்மா தனது வாழ்நாளில் எப்போதும் விமானப் பயணம் மேற்கொண்டதில்லை.
- நடப்பதில் ஆர்வம் கொண்டவர் அவர். ‘உடற்பயிற்சிகளின் இளவரசன் நடைபயிற்சி’ என்று அவர் குறிப்பிடுவது வழக்கம். பள்ளிக்காலத்திலிருந்தே அவருக்கு நீண்ட தூரம் நடப்பது பிடிக்கும். லண்டனில் சட்டம் படித்தபோது, வீட்டிலிருந்து கல்லுரிக்கு நடந்து செல்வார். ‘‘தினமும் நீண்ட தூரம் நடந்ததால் என் உடல் வலுப்பட்டது’’ என்று குறிப்பிடுகிறார். இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நீண்ட தூரம் நடந்ததால்தான், தனது 60வது வயதில் தண்டி யாத்திரை மேற்கொண்டு 241 மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.
- வராத பணத்தை ‘காந்தி கணக்கு’ என கிண்டல் செய்கிறோம். ஆனால் அதன் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா? மகாத்மா உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்கள். ‘‘நேரடியாக எங்களால் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால் எங்கள் ஆதரவு உங்கள் போராட்டத்திற்கு உண்டு. இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். பணம் தர வேண்டாம். ‘காந்தி கணக்கு’ என்று தொண்டர்கள் சொன்னால் போதும். நாங்கள் புரிந்துகொள்கிறோம்’’ என்றார்கள் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.
- மகாத்மா நோபல் விருது பெற்றதில்லை. ஆனால் அவரைப் பின்பற்றிய ஐந்து பேர் பெற்றனர். அமெரிக்க கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், தலாய் லாமா, மியான்மரின் ஆங் சான் சூ கியி, தென் ஆப்ரிக்க விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா மற்றும் அர்ஜென்டினாவின் அடோல்போ பெரஸ் எஸ்க்யுவெல் ஆகியோரே அவர்கள்.
- உலகின் நான்கு கண்டங்களில் இருக்கும் 12 நாடுகளில் மக்கள் விடுதலைப் போராட்டம் நடத்துவதற்கு மகாத்மா காந்தி உந்துசக்தியாக இருந்திருக்கிறார்.
- எந்த பிரிட்டனை எதிர்த்து அவர் போராடினாரோ, அந்நாடு அவர் இறந்து 21 ஆண்டுகள் கழித்து அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது.
- இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக ஹிட்லருக்கு மகாத்மா ஒரு கடிதம் எழுதினார். ‘மனிதகுலத்தை துன்பத்தில் ஆழ்த்தப் போகும் போரைத் தடுக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். போரில் நீங்கள் அடையப் போகும் வெற்றிக்கு இதுதான் விலையா?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார் காந்தி.
- இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15ம் தேதி, பிரதமர் நேரு கொண்டாட்டங்களுக்கு நடுவே உரையாற்றினார். அப்போது காந்தி டெல்லியில் இல்லை. மதக் கலவரங்களைத் தடுக்க கொல்கத்தாவில் உண்ணாவிரதம் இருந்தார்.
- மகாத்மா மீது பற்று கொண்டவர், ‘ஆப்பிள்’ நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதனாலேயே காந்தி போல வட்டக் கண்ணாடி அணிந்தார் அவர்.
- இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கே தலைமை தாங்கியவர் என்றாலும், காந்தி இளம் வயதில் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டராக இருந்துள்ளார். பிறருடன் பேச வெட்கப்பட்டு, பள்ளியிலிருந்து சீக்கிரமே வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்.
- காந்தி எப்போதும் ‘ஹே ராம்!’ என்பார். காந்தியின் வாழ்வில் ராமன் புகுந்த கதை சுவாரசியமானது. காந்தியின் வீட்டில் பணிபுரிந்த தாதி ரம்பா பாயி என்பவர்தான் அவரை சிறுவயதில் வளர்த்தவர். இருளைக்கண்டு பயப்படும் காந்திக்கு தைரியம் தருவதற்காக அவர் சொன்ன உபாயம்தான் ராம நாமம். பதற்றம், பயம் தவிர்க்க எப்போதுமே அவருக்கு ராம நாமம் உதவியிருக்கிறது. அது அனிச்சை செயலாக ஆயுள் முழுக்க தொடர்ந்தது.
Share
Related Posts