காந்திய சிந்தனைகள்!

காந்திய சிந்தனைகள்!

 • பிரார்த்தனை அல்லது இறை வணக்கம் என்பது, வீட்டில் உள்ள பாட்டியின் பொழுதுபோக்கல்ல. சரியாகச் செய்தால் மிகச் சிறந்த ஆயுதம் அது.
 • ஒருவனுக்கு எந்த அளவுக்கு உள்ளொளி இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் பிரார்த்தனை அவனிடம் இருக்கும்.
 • எவனொருவன் தினமும் இறை வணக்கத்தில் ஈடுபடுகிறானோ அவன் தினம் தினம் புதியதைச் சேர்க்கிறான். அந்தப் புதிய விஷயங்களை எதனுடனும் ஒப்பிட முடியாது.
 • மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு செயல் எதுவாக இருக்கும் என்றால், அது தலைவணங்கிச் செய்யப்படும் இறைவணக்கமே. ஆயிரம் பேர் தலை வணங்குவதை விட ஒருவர் செய்யும் இறைவணக்கமே பெரிது.
 • பிரார்த்தனை என்பது இறைஞ்சுவதல்ல. அது ஆன்மாவின் ஏக்கம். ஒருவனின் பலவீனத்தின் தினப்படியான வெளிப்பாடு. அதனால்தான் பிரார்த்தனையின்போது வார்த்தைகளை விட இதயம் அதிகமாகப் பயன்படுகிறது.
 • கவலையைப் போல உடம்பை அரிப்பது வேறு ஒன்றும் இல்லை. நீ கடவுளை நம்புவதாக இருந்தால் வீணாக ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? கவலைகளை அவரிடம் விட்டு விடு.
 • இரவு படுக்கச் செல்லும் முன்பு கோபத்தைக் கைவிட வேண்டும்.
 • சில நேரங்களில் ஒரு உயரிய அழைப்பிற்கு நீங்கள் செவி மடுத்திருக்க முடியும். அந்த அழைப்பின் பெயர் மனசாட்சி. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதற்காக நீங்கள் கொடுத்த விலை கசப்பான கண்ணீராக இருந்திருக்கும், அதற்கும் மேலானதாக இருந்திருக்கலாம். வாழ்வில் எதை அரிதாக நினைத்தீர்களோ அதைக்கூட இழந்திருக்கலாம். ஆனாலும் மனசாட்சியின் குரலுக்குப் பணிவதுதான் மனிதகுலச் சட்டம்.
 • உங்கள் உள்ளே இருக்கும் மனசாட்சி நண்பன் இதைச் செய் என்று கூறும்போது, பிற நண்பர்கள் கூறுவதைக் கேட்க வேண்டாம்.
 • மனசாட்சியின் மெல்லிய குரல் எட்டிப் பார்க்கும் இடத்திற்கு, மனிதர்களின் சாதாரண குரல்கள் எட்டிப் பார்க்காது.
 • எல்லா நீதிமன்றங்களையும் விட உயர்ந்தது மனசாட்சி எனும் நீதிமன்றம்தான்.
 • இறைவணக்கம், காலையின் சாவி; மாலையின் பூட்டு.
 • எப்போதுமே உங்கள் சிந்தனைகளை சுத்தமாக வைத்திருந்தால் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்.
 • கோபமும் சகிப்புத்தன்மையின்மையும் சரியான புரிதலின் எதிரிகள்.
 • நாளை மரணிப்போம் என்பதை போல வாழுங்கள்; தனக்கு மரணமே இல்லை என்பதைப் போல நினைத்துப் படியுங்கள்.
 • ஒவ்வொருவரும் அமைதியை அவர்களுக்குள்தான் காண வேண்டும். அந்த அமைதி உண்மையானதாகவும் வெளிப்புறச் சூழல்களால் பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.
 • பலம் உடல் திறனால் அமைந்ததல்ல. மாறாக, அசைக்க முடியாத மனஉறுதியிலிருந்து வெளிப்படுவது.
 • நேரான பாதையிலிருந்து விலகியவன் ஒருபோதும் தன் இலக்கை அடைய மாட்டான்.
 • சுயமரியாதை இருக்கும் இடத்தில் எந்தவித பரிசீலனைக்கும் இடமில்லை.
 • எல்லா விதத்திலும் ஒத்துப்போவது நட்பல்ல. இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதை தாங்கிக் கொள்வதுதான் உண்மையான நட்பு.
 • இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும் போதுமான அளவுக்கு வளம் உள்ளது. ஆனால் ஒருவனின் பேராசை அளவுக்கு வளங்கள் இங்கில்லை.
 • உண்மையான செல்வம், நல்ல உடல்நலம்தான். அது தங்கம், வெள்ளி அல்ல.
 • சுயமரியாதை கொண்ட மனிதனின் காலில் தங்கத்தால் போடப்பட்ட கால் விலங்கையும் அவன் இரும்பு விலங்காகத்தான் நினைப்பான். தங்கத்தில் இருந்தாலும், இரும்பில் இருந்தாலும், விலங்கு விலங்குதானே!
 • நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, என்ன சொல்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்கும்போதுதான் மகிழ்ச்சி கிடைக்கிறது.
 • நம் பேச்சாலோ அல்லது எழுத்தாலோ பிறரை நம் வசம் இழுக்க வேண்டும் என்ற தேவையில்லை. நம் வாழ்வின் மூலம்தான் அதை அடைய முடியும். பிறர் எளிதாகப் படிக்கும் வகையில் நம் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்தால் அது எளிதாகும்.
 • மனித குலத்தை அன்பு என்ற விதிதான் ஆள்கிறது. வெறுப்பு போன்ற வன்முறை போன்றவை நம்மை ஆண்டால், நாம் காட்டுமிராண்டிகளாகி விடுகிறோம். எனினும், இந்தச் சோகம், இந்த நாகரிக உலகத்திலும் தொடரத்தான் செய்கிறது.
 • எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.
 • அன்பு செலுத்துவதன் ஒரே தண்டனை, கஷ்டத்தை அனுபவிப்பதுதான்.
 • அன்பு கொடுக்கும் நீதி, சரணடைவது போன்றது. சட்டம் மூலம் பெறும் நீதி, தண்டனை பெறுவது போன்றது.
 • அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது. அன்பு எங்கிருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu