உலகம் கொண்டாடிய காந்தி!

உலகம் கொண்டாடிய காந்தி!

உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் நமது தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளன. உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. உலக நாடுகளில் காந்திஜிக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் எண்ணிக்கை சுமார் 300.

இந்தியாவில் காந்திஜிக்கு முதல் அஞ்சல் தலை அவரது 80வது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு 4 தபால் தலைகளுக்கான வடிவமைப்புப் பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக தனது 80வது பிறந்த நாளுக்கு 8 மாதங்களுக்கு முன்பே காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது 80வது பிறந்த நாளில் வெளியிட முடிவு செய்யப்பட்ட தபால் தலைகள், அவரது நினைவாக ஆகஸ்ட் 15, 1948ல் முதல் சுதந்திர தினத்தில் வெளியிடப்பட்டு தேசத்தந்தை கௌரவிக்கப்பட்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. அவர் தனது அதிகாரபூர்வமான தேவைகளுக்கு காந்திஜியின்
அஞ்சல் தலைகளைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்தார். எனவே, அரசு தேவைகளுக்காக உபயோகப்படுத்தப்படும் அஞ்சல் தலைகளில் சேவை என்று அச்சிடப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அந்த அஞ்சல் தலைகளில் ரூபாய் 10 மதிப்பு கொண்ட சேவை முத்திரை இடப்பட்ட 100 அஞ்சல் தலைகளே அச்சிடப்பட்டன. இதுதான் இந்தியாவின் மிகவும் அரிதான அஞ்சல் தலையாக இன்று வரை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

காந்திஜிக்கு முதன்முதலில் அஞ்சல் தலை வெளியிட்ட வெளிநாடு, அமெரிக்கா. 1961ம் ஆண்டு ஜனவரி 26 அன்று இரண்டு தபால் தலைகளை வெளியிட்டு கௌரவப்படுத்தியது. இரண்டாவதாக காங்கோ 1967ம் ஆண்டு வெளியிட்டது.

எந்த பிரிட்டனை எதிர்த்து அவர் போராடினாரோ, அந்நாடு அவர் இறந்து 21 ஆண்டுகள் கழித்து அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது. 1969ம் ஆண்டு காந்திஜியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நினைவாக பிரிட்டன் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அஞ்சல் தலை வெளியிட்டு மகாத்மாவை கௌரவப்படுத்தின.

காந்திஜி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நினைவாக, பூடான் மற்றும் சோமாலியா நாடுகள் வெளியிட்ட ஐந்து அஞ்சல் தலைகளும் இந்தியாவின் நாசிக் பாதுகாப்பு அச்சகத்தில் அச்சிடப்பட்டவை ஆகும்.

சுதேசியாகவே வாழ்ந்து மறைந்த மகாத்மாவின் உருவம் இடம்பெற்ற இந்தியாவின் முதல் அஞ்சல் தலை சுவிட்சர்லாந்தில் அச்சடிக்கப்பட்டது என்பதுதான் ஆச்சரியம். இன்று வரை வெளிநாட்டில் அச்சிடப்பட்ட ஒரே இந்திய அஞ்சல் தலை காந்திஜியின் அஞ்சல் தலைதான். அதன்பிறகுதான் நாசிக் நகரில் அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சிட அச்சகம் நிறுவப்பட்டது.

காந்திஜிக்கு முதன்முதலில் அஞ்சல் அட்டை வெளியிட்ட வெளிநாடு போலந்து.

காந்திஜிக்கு முதன்முதலில் நினைவுஉறை வெளியிட்ட இந்தியா அல்லாத முதல் வெளிநாடு ருமேனியா.

காந்திஜிக்கு முதன்முதலில் அஞ்சல் அட்டை வெளியிட்ட வெளிநாடு மியான்மர். அதையடுத்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் லக்சம்பர்க் நாடுகள் அஞ்சல் முத்திரை வெளியிட்டு கௌரவப்படுத்தின.

காந்திஜியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்து காந்திஜிக்கு மகுடம் சூட்டியது. மேலும் 2009 அக்டோபர் 2 அன்று அஞ்சல் தலையையும் வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

இந்தியா இதுவரை 48க்கும் மேற்பட்ட காந்திஜி அஞ்சல் தலைகளும் 200க்கும் மேற்பட்ட சிறப்பு முத்திரைகளைக் கொண்ட தபால் உறைகளையும் மற்றும் அஞ்சல் அட்டைகளும் வெளியிட்டு தேசத்தந்தை கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu