வீட்டு பட்ஜெட்டும் நாட்டு பட்ஜெட்டும்!

வீட்டு பட்ஜெட்டும் நாட்டு பட்ஜெட்டும்!

அரசாங்கம் ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் போட்டு செலவழிப்பதைப் போலவே நாமும் வீட்டில் மாதா மாதம் பட்ஜெட் போட்டுச் செலவுகளைக் கண்காணிப்பது அவசியம். அரசாங்கம் போடும் பட்ஜெட்டைப் பார்க்கும்போது எது அவசியம், எது அநாவசியம் என நமக்குத் தெரிகிறது. நாம் அதை விமர்சனமும் செய்கிறோம். வீட்டு பட்ஜெட்டிலும் இதை நாம் பார்க்க வேண்டாமா?

  • முன்பெல்லாம் பட்ஜெட் நடைமுறைகள் அமலுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில்தான் வரிகள் உயரும்; சில பொருட்களின் விலைகளும் ஏறும். அதைப் பொறுத்து வீட்டு பட்ஜெட்டைத் திட்டமிடுவது எல்லோருக்கும் வசதியாக இருந்தது. ஒருமுறை திட்டமிட்டுவிட்டால், எல்லாம் சீராகப் போய்க் கொண்டிருக்கும். தீபாவளி, பொங்கல் எனப் பண்டிகை நேரங்களில் மட்டும் பட்ஜெட் இடிக்கும். போனஸ், அட்வான்ஸ் என ஏதாவது உபரி வருமானம் வந்து அதைச் சமாளிக்க வழிகாட்டும். இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. பெட்ரோல் விலை மாதத்துக்கு இரண்டு முறை உயர்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய் என எல்லாவற்றின் விலையிலும் தாறுமாறான ஏற்ற இறக்கங்கள் வந்திருக்கிறது. அதனால் ஒவ்வொரு மாதமும் குடும்ப பட்ஜெட்டைக் கச்சிதமாகக் கண்காணிப்பது அவசியம்.
  • அரசின் பட்ஜெட் செலவு சார்ந்தது. ஒவ்வொரு திட்டங்களையும் தீர்மானித்துவிட்டு, அதற்கு எவ்வளவு செலவிடுவது என்பதையும் முடிவு செய்துவிட்டு, அதன்பிறகே ‘வரும் ஆண்டில் வருமானம் எவ்வளவு இருக்கும்’ என கணக்கிடுவார்கள். ஆனால் வீட்டு பட்ஜெட்டை இப்படிப் போட முடியாது. நமக்கு எவ்வளவு மாத வருமானம் இருக்கிறது என முதலில் பார்த்துவிட்டு, அதற்குள் செலவுகளைத் திட்டமிட வேண்டும்.
  • அரசாங்கம் போடும் பட்ஜெட், மக்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாததாகவே இருக்கிறது. ‘தேச மக்களுக்கு எதிர்காலத்தில் இதெல்லாம் தேவை’ என முடிவுசெய்து, அதற்காக எந்த முதலீட்டையும் அரசாங்கம் செய்வதில்லை. ஆனால் குடும்ப பட்ஜெட்டில் நாம் அப்படி அசட்டையாக இருக்க முடியாது. நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சேமிப்புக்கும் பட்ஜெட்டில் ஒரு பங்கை ஒதுக்க வேண்டும்.
  • வருமானம் தராத, சொத்து சேர்க்காத, எந்த நேரடிப் பலனும் தராத செலவுகளை அரசாங்கம் செய்யலாம். ஆனால் குடும்ப பட்ஜெட்டில் அதைச் செய்ய முடியாது. வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கடன், உணவு, பயணச் செலவு போன்றவை தவிர்க்க முடியாத அத்தியாவசிய செலவுகள். குழந்தைகளின் கல்வி, உடல்நலன் சார்ந்த மருத்துவத் தேவைகள் அனைத்தும் நீண்ட காலப் பலன் தரக்கூடிய செலவுகளாகக் கருதப்படும். மூன்றாவது செலவு, கேளிக்கை என்ற வரையறைக்குள் வரும். சினிமா, பீச், பார்க், சுற்றுலா எனப் போவது, ஹோட்டலில் சாப்பிடுவது எல்லாம் இந்த ரகம். தினம் தினம் கணக்கு எழுதிப் பார்க்காவிட்டாலும், குடும்ப வருமானத்தில் இந்த மூன்று வகைச் செலவுகளும் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
  • ஆடம்பரச் செலவுகளுக்கும் அவசியச் செலவுகளுக்கும் இடையே முரண்பாடில்லாமல் வாழப் பழக வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டும் என்று எல்லாக் கேளிக்கைகளுக்கும் தடைபோடக்கூடாது; அதேபோல அவசியச் செலவுகளிலும் கைவைக்கக்கூடாது. விலை குறைவாக இருக்கிறது என வழக்கமாக வாங்கும் அரிசியைவிடத் தரம் குறைந்த வேறு அரிசியை வாங்கி சமைத்து, குழந்தைகளைச் சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது.
  • செலவுகள் மட்டும் பட்ஜெட்டில் இருந்தால், எதிர்காலப் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இருக்காது. மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகள் செய்துகொள்வது அவசியம். குறைந்த பிரீமியத்தில் அதிகக் காப்பீடு தரும் திட்டங்கள் பாதுகாப்பானவை. அதோடு குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்காக பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்து சேமிக்க வேண்டும்.
  • அரசாங்கம் பற்றாக்குறை பட்ஜெட் போடலாம்; அது கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்து சமாளித்துக் கொள்ளும்; அல்லது சர்வதேச வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும், வரிகளை அதிகமாக்கும்; இப்படி எதை வேண்டுமானாலும் அரசாங்கம் செய்யலாம். ஆனால் வீட்டு பட்ஜெட்டில் வரவுக்கு அதிகமாக ஒரு ரூபாய் செலவழித்தால்கூட, அது கடன் சிக்கலில் தள்ளிவிடும். எதிர்காலத்தில் வருமானம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை திடமாக இருந்தால், கடன் வாங்குவது தவறில்லை. அதேபோல எதிர்கால வசதிக்காக வீடு, மனை எனச் சொத்துக்கள் வாங்கும்போது கடன் நல்லதே. ஆனால் அந்தக் கடன்களுக்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டியிருக்கும், அது குடும்ப பட்ஜெட்டை எத்தனை ஆண்டுகள் பாதிக்கும் என்பதை எல்லாம் தெளிவாகத் திட்டமிட வேண்டும்.
  • குடும்ப பட்ஜெட்டில் ஒரு தொகையை ஒதுக்கி, அவசரத் தேவைகளுக்காக எனக் கையிருப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
.
  • அரசாங்கத்தின் பட்ஜெட் வெளிப்படையானது; பொருளாதார நிபுணர்கள் பலர் அதை விமர்சனம் செய்வார்கள். குடும்ப பட்ஜெட் ரகசியமானது. ஆனாலும் அதைக் குடும்பத்தில் எல்லோரும் மாதத்தில் ஒருநாள் உட்கார்ந்து படித்துப் பார்த்து ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வது நல்லது. எந்தெந்தச் செலவுகளைக் குறைக்கலாம், சேமிப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுமா எனக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லலாம். நிதி நிர்வாகத்தைத் திட்டமிட யாராவது நிபுணர்களிடமும் ஆலோசனை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu