வங்கிக்கட்டணங்கள் தெரியுமா?
வங்கிக்கட்டணங்கள் தெரியுமா?
இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் வங்கி சேவை மகத்தான மாற்றங்களை அடைந்திருக்கிறது. பணம் எடுக்கவோ, வேறு ஒருவருடைய கணக்கில் பணம் செலுத்வோ, டிமாண்ட் டிராஃப்ட் வாங்கவோ மணிக்கணக்கில் க்யூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால் வங்கிக்கே போக வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு கடைசியாக எப்போது போனீர்கள் என யோசித்துப் பார்த்தால், மாதக்கணக்கில் ஆகியிருக்கும். நினைத்த நேரத்தில் ஏ.டி.எம்மில் போய் பணம் எடுக்கலாம்; கையில் ஒரு மொபைல் போன் இருந்தால் போதும்... யாருடைய அக்கவுன்ட்டுக்கும் பணத்தை மாற்றலாம். எல்லா சேவைகளும் எலெக்ட்ரானிக்மயமாகிவிட்டது. ஆனால், இவை எல்லாமே இலவசம் இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவற்றுக்கான கட்டணங்கள் வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். அந்தக் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி-யும் உண்டு.
* உங்கள் வங்கி உங்களுக்குத் தரும் டெபிட் கார்டுக்கும் சேவைக் கட்டணம் உண்டு. முதல் ஆண்டுக்கு கட்டணம் இல்லை. அடுத்த ஒவ்வொரு ஆண்டுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். வங்கியைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடும். கார்டை தொலைத்துவிட்டு புதிது வாங்கினால், அதற்கும் கட்டணம் உண்டு.
* சும்மா அடிக்கடி நீங்கள் வங்கிக்கு வருவதை பல வங்கிகள் விரும்புவதில்லை. மூன்று மாத காலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் உங்கள் அக்கவுன்ட்டுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தால் கட்டணம் வசூலிக்கிறார்கள். பணம் சார்ந்த சேவைக்குத் தனிக் கட்டணமும், பணம் சாராத இதர சேவைகளுக்குத் தனிக் கட்டணமும் உண்டு.
* வங்கிக்குப் போனால்தான் பணம் தர வேண்டியிருக்கிறதே என ஏ.டி.எம் சேவையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஒரு மாதத்தில் உங்கள் வங்கியின் ஏ.டி.எம்-மையும், பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயன்படுத்தலாம். அதற்குமேல் அந்த சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.
* மொபைல் போனுக்கு வங்கிக் கணக்கு தொடர்பான அலெர்ட்களை அனுப்புவதற்கும் பல வங்கிகள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டன.
* பல வங்கிகள் பாஸ்புக்கைத் துறந்துவிட்டன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்டேட்மென்ட் மட்டும் அனுப்புகின்றன. இதைத் தாண்டி வேறு ஏதாவது லோன் வாங்குவதற்கோ, வருமான வரித் தேவைக்காகவோ கூடுதல் ஸ்டேட்மென்ட் கேட்டால் அதற்கும் கட்டணம் உண்டு. பாஸ்புக் தரும் வங்கிகளில், அதைத் தொலைத்துவிட்டு புதிது கேட்டாலும் கட்டணம் உண்டு. சில வங்கிகளில் பாஸ்புக்கில் போட்டோ ஒட்டி, கையெழுத்து, முகவரியை அட்டெஸ்ட் செய்வதற்கும் கட்டணம் உண்டு.
* இணையதளம் மூலம் ‘நெட் பேங்கிங்’கில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றவும் கட்டணம் உண்டு. ஒரு பணப் பரிமாற்றத்துக்கு ரூ.15 முதல் ரூ.50 வரை வசூலிக்கிறார்கள்.
* மொபைல் பேங்கிங் சேவைக்கும் கட்டணம் உண்டு. ரூ.10 முதல் ரூ.25 வரை வசூலிக்கிறார்கள். சில வங்கிகள் மொபைல் பேங்கிங் சேவைக்காக அப்ளிகேஷன்களை தருகின்றன. இதை போனில் பயன்படுத்த மாதாந்திரக் கட்டணமும் சில வங்கிகளில் உண்டு.
* பல மாதங்களாக ஒரு அக்கவுன்ட்டை பயன்படுத்த வில்லை, அது இனி தேவையும் இல்லை எனக் கருதினால் உடனடியாக அதை குளோஸ் செய்துவிடுங்கள். சில வங்கிகள் பயன்படுத்தாத கணக்குகளுக்கும் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கின்றன.
* சில வங்கிகள் கணக்கை ஆரம்பித்து ஒரு வருடத்துக்குள் மூடினால், அதற்கும் கட்டணம் வசூலிக்கின்றன.
* நீங்கள் யாருக்காவது கொடுத்த செக்கோ, யாரோ உங்களுக்குக் கொடுத்து உங்கள் கணக்கில் சேர்க்கச் சொன்ன செக்கோ, பணமில்லை என திரும்பினால் அதற்கும் அதிபயங்கர கட்டணம் உண்டு.
* யாருக்கோ நீங்கள் கொடுத்த செக் கலெக்ஷனுக்கு வரும்போது, பணம் எடுக்காமல் நிறுத்தி வைக்குமாறு நீங்கள் கேட்டுக்கொண்டால், அதற்கும் கட்டணம் உண்டு.
* ஒரு கணக்குக்கு இவ்வளவு செக்குகள்தான் தரலாம் என சில வங்கிகள் வரையறை வைத்திருக்கின்றன. அதற்குமேல் உங்களுக்கு செக் புத்தகம் தேவைப்பட்டால், அதற்கும் கட்டணம் உண்டு.
இப்படி இந்தப் பட்டியல் மளிகை லிஸ்ட் போல வெகு நீளம். பலரும் தங்கள் வங்கி ஸ்டேட்மென்ட்டை முறையாகப் பார்ப்பதில்லை என்பதால், வங்கிகள் இதையெல்லாம் பிடித்தம் செய்வது தெரியாமலேயே போய் விடலாம். ‘எல்லா வங்கிகளும் குறிப்பிட்ட சேவைகளுக்கு ஒரே மாதிரியான கட்டணங்களை வசூலிக்க வேண்டும்’ என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதேபோல, ‘சேவைக் கட்டணங்கள் தொடர்பாக வங்கிகள் தங்கள் கிளைகளில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ எனவும் உத்தரவிட்டிருக்கிறது.
இந்தக் கட்டணங்களைத் தெரிந்துகொண்டு, வங்கி சேவைகளை முறையாகவும் அளவாகவும் பயன்படுத்தி உங்கள் பணத்தை சேமித்துக் கொள்ளுங்கள்.
Share
Related Posts