உங்கள் மனைவியின் சகோதரி கணவரைவிட ஆயிரம் ரூபாயாவது அதிகம் சம்பாதிப்பதே வசதி என பொருள் கொள்ளப்படுகிறது. - மென்கென் பணத்தின் மதிப்பை அனுபவத்தில் உணர்ந்திருக்காவிட்டால், உங்களுக்குப் பணம் என்பது வெற்றுக் காகிதமே! - பர்னம் உலகத்தில் எல்லா நாடுகளும் கடன் வாங்கி இருக்கின்றன என்றால், எல்லா பணமும் எங்கே போயிருக்கிறது? - ஸ்டீவன் ரைட் உங்களுக்கு பணம் தேவையில்லை என நிரூபித்தால் மட்டுமே உங்களுக்குக் கடன் தரும் ஒரு நிறுவனத்தின் பெயர்தான், வங்கி! - பாப் ஹோப் […]
உடல் ஆரோக்கியமாக இருக்க, உணவில் எல்லா சத்துகளும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு என எல்லாமே அளவான விகிதத்தில் இருப்பது அவசியம். நமது சேமிப்பும் முதலீடும் இப்படி சரிவிகிதத்தில் இருந்தால்தான், பண விஷயத்தில் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பாதுகாப்பு, வளர்ச்சி, அவசரத்துக்குக் கைகொடுப்பது என்று பல அம்சங்கள் கொண்டதாக இந்த டயட் இருக்க வேண்டும். * புரோட்டீன்: தசைகளைக் கட்டமைத்து உடலை நன்கு வளர்ச்சி பெறச் செய்கிறது புரோட்டீன். இளமையாக இருக்கும்போது, […]
1. அதிகம் சேமிப்பேன் சேமிப்பின் அவசியம் நம்மில் பலருக்கும் தெரியும். ஆனாலும், ‘வரவுக்கும் செலவுக்கும் இழுபறியாக இருக்கும்போது எங்கே சேமிப்பது’ என்ற நினைப்பே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதனாலேயே நமது பட்ஜெட்டில் கடைசி இடம்தான் சேமிப்புக்கு ஒதுக்கப்படுகிறது. ‘சேமிப்பு என்பது மாசக்கடைசியில் மிச்சம் இருக்கும் பணத்தை எதிர்காலத் தேவைக்காக எடுத்து வைப்பது’ என்ற நினைப்பு உங்களுக்கு இருந்தால், இந்த ஆண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி நினைத்தால் எந்த மாதத்திலும் சேமிக்க உங்களிடம் ஒரு ரூபாய்கூட மிச்சம் இருக்காது. […]
குழந்தைகளுக்கு முதன்முதலில் முடிவெடுக்கும் வாய்ப்பைத் தருவது, பணம்தான்! இளம் வயதிலேயே பணத்தைக் கையாளும் வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுத் தந்துவிட்டால், அவர்கள் சம்பாதிக்கும் நாட்களில் தெளிவாக இருப்பார்கள். கடைகளுக்குச் சென்று செலவழிக்கும்போது மட்டும் குழந்தைகளைக் கூட்டிச் செல்வார்கள் சிலர். ஆனால் செலவைவிட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது சேமிப்பைத்தான்! எப்படி அவர்களுக்கு பணக்கல்வி கொடுப்பது? * குழந்தைகள் எண்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததுமே அவர்களுக்கு பணத்தை அறிமுகம் செய்யுங்கள். பார்த்தும், திரும்பத் திரும்ப கவனித்தும் ரூபாய் நோட்டுகளின் வித்தியாசத்தை குழந்தைகள் உணர்ந்து […]
ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்று, பாதுகாப்பற்ற சூழலில் பணத்தைப் பறிகொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. ‘பாதுகாவலர்கள் இல்லாமல் ஏ.டி.எம் மையங்கள் செயல்படக் கூடாது’ என காவல் துறை அறிவுறுத்தியதால், பல வங்கிகளின் ஏ.டி.எம்கள் இரவு நேரத்தில் மூடப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஏ.டி.எம் பயன்பாட்டுக்கு கட்டணமும் விதிக்கின்றன வங்கிகள். ஏ.டி.எம் மையங்களை எச்சரிக்கையோடு பயன்படுத்துவது எப்படி? * வங்கிக் கிளையோடு இணைந்துள்ள ஏ.டி.எம்மையோ, பெரிய வணிக மற்றும் அலுவலக வளாகங்களில் இருக்கும் ஏ.டி.எம்களையோ பயன்படுத்துங்கள். எப்போதும் மக்கள் நடமாட்டமும் […]
இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் வங்கி சேவை மகத்தான மாற்றங்களை அடைந்திருக்கிறது. பணம் எடுக்கவோ, வேறு ஒருவருடைய கணக்கில் பணம் செலுத்வோ, டிமாண்ட் டிராஃப்ட் வாங்கவோ மணிக்கணக்கில் க்யூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால் வங்கிக்கே போக வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு கடைசியாக எப்போது போனீர்கள் என யோசித்துப் பார்த்தால், மாதக்கணக்கில் ஆகியிருக்கும். நினைத்த நேரத்தில் ஏ.டி.எம்மில் போய் பணம் எடுக்கலாம்; கையில் ஒரு மொபைல் போன் இருந்தால் போதும்... யாருடைய […]
பண விஷயத்தைப் பொறுத்தவரை, கடந்து போன நாட்களில் செய்யாமல் விட்ட முதலீடுகள் மற்றும் சேமிப்புகளைப் பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருப்பது பலரின் இயல்பு. ‘‘கிரவுண்ட் ஒரு லட்ச ரூபாய்க்கு கூவிக் கூவி வித்தான். காடு மாதிரி இருக்கேன்னு தயங்கினேன். ஒரு ஸ்கூல் கட்டினதும் பத்து வருஷத்துல எல்லாம் மாறிப் போச்சு. இப்போ விசாரிச்சா அம்பது லட்சம் சொல்றான்’’ என ஆதங்கப்படும் குடும்பத் தலைவர்கள் நிறைய. இப்படி புலம்புவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இருபதில் ஓய்வூதியம்: […]
சி.முருகேஷ் பாபு ‘கையிலே வாங்கினேன்... பையிலே போடலை... காசு போன இடம் தெரியலை’ என்கிற ரேஞ்சில்தான் வருமானமும் செலவுகளும் இருக்கின்றன என்று சலித்துக் கொள்கிறீர்களா? வரவையும் செலவையும் எழுதிப் பார்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். எழுதிப் பார்த்துச் செலவழிக்க நாம் என்ன நிதியமைச்சர் ப.சிதம்பரமா என்று கேட்கிறீர்களா... அவர் நாட்டுக்கு நிதியமைச்சராய் இருந்தவர் என்றால் நீங்கள் வீட்டுக்கு நிதியமைச்சர்தான்! அதனால் நீங்கள் பட்ஜெட் போடுவதில் தவறில்லை! நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது அவருக்கு ஆலோசனை சொல்லப் பெரிய […]
வாங்கிவிட முடிகிற அத்தனைப் பொருட்களைவிடவும், பணமே அதிக ஆச்சரியங்கள் தருகிறது. தங்களிடம் இருப்பதை வைத்துச் சிக்கனமாக வாழ்ந்துவிடலாம் எனத் தீர்மானிப்பவர்கள், தங்களது கற்பனைத் திறனை இழந்துவிடுகிறார்கள். பணம் இல்லாமல் இருக்கும் நிலையே, எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர். பேசுவதற்குமுன் கவனி; எழுதுவதற்குமுன் யோசி; செலவழிப்பதற்குமுன் பணம் சேர்; முதலீடு செய்வதற்குமுன் புலனாய்வு செய்; விமர்சனம் செய்வதற்குமுன் பொறுமை காத்திரு; வழிபடுவதற்குமுன் மன்னித்து விடு; வேலையை விடுவதற்குமுன் முயற்சி செய்துகொள்; ஓய்வுபெறுவதற்குள் சேமித்துக் கொள்; இறப்பதற்குமுன் கொடுத்துவிடு! உங்கள் சந்தேகங்களைக் […]
அரசாங்கம் ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் போட்டு செலவழிப்பதைப் போலவே நாமும் வீட்டில் மாதா மாதம் பட்ஜெட் போட்டுச் செலவுகளைக் கண்காணிப்பது அவசியம். அரசாங்கம் போடும் பட்ஜெட்டைப் பார்க்கும்போது எது அவசியம், எது அநாவசியம் என நமக்குத் தெரிகிறது. நாம் அதை விமர்சனமும் செய்கிறோம். வீட்டு பட்ஜெட்டிலும் இதை நாம் பார்க்க வேண்டாமா?