ஓர் உயிருக்குள் இன்னோர் உயிர் வளர்கிற அந்த பத்து மாதங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் புது ஜென்மம்; ஒவ்வொரு தாய்க்கும் மறு ஜென்மம். முந்தைய தலைமுறை பாட்டிகள் எல்லாம் தங்கள் வாழ்நாளில் சாதாரணமாக ஏழெட்டு மறு ஜென்மங்களை எடுத்திருப்பார்கள். மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல், ஸ்கேன், செக்கப், கவனிப்பு எதுவும் இன்றி இயல்பான வாழ்க்கை முறையில் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் அனைத்துமே சுகப்பிரசவம்தான். ‘சிசேரியன்’ என்கிற வார்த்தையைப் பெரும்பாலான பாட்டிகள் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கடந்த முப்பது, நாற்பது வருடங்களில் […]
இந்தியாவின் விவாகரத்து தலைநகரமாக இருக்கிறது தமிழகம். தேசத்திலேயே விவாகரத்தானவர்கள்/ துணையை இழந்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் தமிழகம்தான். இங்கு பலருக்கு திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; திருமணத்துக்குப் பிறகு புகுந்த வீட்டில் சொர்க்கமும் நிச்சயமில்லை. ஆனால் குடும்ப நீதிமன்றத்தில் காத்திருப்பது விதியாகி விடுகிறது. அமெரிக்க வாழ்க்கைமுறை பழகிப் போய்விட்ட நமக்கு, அங்கிருக்கும் விவாகரத்து விகிதங்களும் பழகிவிடும் போலிருக்கிறது. அங்கு நடக்கும் திருமணங்களில் பாதி விவாகரத்தில் முடிகின்றன. ‘மனைவி குறட்டை விடுகிறார்’, ‘அவள் பூனை வளர்க்கிறாள். அது எனக்கு பிடிக்கவில்லை’, […]
பெரும்பாலான பெண்கள் கையில் ஹேண்ட்பேக் எடுக்காமல் வாசலைத் தாண்டுவதில்லை. உங்கள் ஹேண்ட்பேக்கில் என்ன இருக்கிறது? செல்போன், குட்டி பர்ஸ், கர்ச்சீப், ஃபேஷியல் க்ரீம், மஸ்காரா, லிப்ஸ்டிக், ஸ்டிக்கர் பொட்டு, ஐ லைனர், மேக்கப் பெட்டி என ஏகப்பட்ட அயிட்டங்கள் அதில் அடைந்து கிடக்கும். இதையெல்லாம் தாண்டி இன்னொரு ஆபத்தையும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், ‘ஒரு டாய்லெட்டில் இருப்பதைவிட அதிக அளவு கிருமிகள் பெண்களின் ஹேண்ட்பேக்கில் இருக்கின்றன’ என நிரூபித்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி. […]