இந்தக் கணத்தில், இந்த நிமிடத்தில் நீங்கள் படைக்கிறீர்கள்... உங்கள் வாழ்வின் அடுத்த கணத்தை நீங்கள் படைக்கிறீர்கள். இதுதான் உண்மை! -சாரா பேட்டிஸன்
யாரும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது. தண்ணீரில் போட்ட பூசணிக்காய் போல... ஒன்றை உள்ளே அழுத்தினால், இன்னொன்று மேலே வந்துவிடும். சீனப் பழமொழி
பிஸியாக இருப்பது முக்கியம் இல்லை; எறும்புகள் எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன. என்ன வேலையில் நாம் பிஸியாக இருக்கிறோம் என்பதே முக்கியம். ஹென்றி டேவிட் தோரோ
சாதாரண மக்கள் நேரத்தைச் செலவழிப்பதைப் பற்றி யோசிக்கிறார்கள்; நேரத்தைப் பயன்படுத்துவது பற்றி யோசிப்பவர்களே ஜெயிக்கிறார்கள். யாரோ
நாம் அதிகம் ஆசைப்பட்டுக் கேட்பது நேரத்தைத்தான்; வீணாக அதிகம் செலவழிப்பதும் அதைத்தான்! - வில்லியம் பென்
நேரம்தான் உங்கள் வாழ்க்கை; நேரத்தை வீணடிப்பது உங்கள் வாழ்க்கையை வீணடிப்பது போன்றது! ஆலன் லேகெயின்
அனுபவத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறவர்கள், எப்போதுமே நேரத்தை விரயம் செய்வதில்லை. -ரோடின்
நேரம் என்ற பள்ளியில்தான் நாம் எல்லோரும் படிக்கிறோம்; நேரம் என்ற நெருப்பில்தான் நாம் எல்லோரும் எரிகிறோம். -டெல்மோர் ஷ்வார்ட்ஸ்
ஒரு நிமிடம் தாமதமாக வருவதைவிட, மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவதில் தவறில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியர்