மதிப்பிற்குரியவர்களுக்கு...15

வணக்கம். ‘பிறை நிலாவைப் பார்த்து, இரண்டு பக்கமும் குறுகி இருக்கிறது என்கிறார்கள். இல்லை, அது இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கிறது’ என்று இக்பால் என்கிற கவிஞர் எழுதி இருந்தார். ரொம்ப நேரம் மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்த சிந்தனை இது. எல்லாமே நாம் பார்க்கிற பார்வையில்தான் இருக்கு. ‘கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் அங்கு இல்லை.. கடவுள் மட்டும் தெரிந்தால் அது கல்லாய் இருக்க வாய்ப்பில்லை’னு நம் முன்னோர்கள் தெளிவாச் சொல்லிட்டுப் போன விஷயம்தான்.   எந்த விஷயத்திலேயும் நல்லதும் […]

Read More
கனவுகளைத் துரத்துங்கள்

கனவுகளைத் துரத்துங்கள் ஒரு கனவு, ஒரு இலக்கு, ஒரு லட்சியம், ஒரு பார்வை, ஒரு வேட்கை... வெற்றியை விரும்பி உழைக்கும் எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. பிளஸ் 2-வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண், ஐ.ஏ.எஸ் தேர்வில் டாப் இடம், வேலை செய்யும் அலுவலகத்தில் இருப்பதிலேயே உயர்ந்த பதவி, செய்யும் தொழிலில் அந்த ஊரிலேயே முதன்மையான அந்தஸ்தைப் பெறுவது... இப்படி கனவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானவை. ஆனால், உழைப்பில் உத்வேகம் காட்டும் பலரும் வழியில் எங்கேயோ இந்த […]

Read More
அதிகாலையில் விழித்தால் அனைத்திலும் ஜெயிக்கலாம்!

'வைகறை துயிலெழு’ என ஔவையார் சொன்னார். வைகறை என்பது அதிகாலை 2 முதல் 6 மணி வரை. சூரிய உதயத்துக்கு முன்பாக வைகறையின் மையத்தில் - அதாவது காலை நான்கு மணிக்கு எழுவது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். உடல் ஆரோக்கியம், செல்வம், அறிவு எல்லாம் தரும் இந்த இயற்கை சார்ந்த தூக்க முறையால் நமக்குப் பத்து நன்மைகள் கிடைக்கின்றன...

Read More
இன்று ஒன்று நன்று!

ஒரு நிமிடம் தாமதமாக வருவதைவிட, மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவதில் தவறில்லை.

Read More
நேர நிர்வாக டிப்ஸ்

1. நேர நிர்வாகம் என்பது நேரத்தைத் திட்டமிடுவது இல்லை. உங்களைத் திட்டமிடுவது! எவ்வளவுதான் திட்டமிட்டு உழைப்பவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். அந்த நேரத்தில் நீங்கள் எப்படி செயல்படுவது என்பதையே திட்டமிடுகிறீர்கள். 2. எந்த விஷயத்தில் நமது நேரம் பயனற்ற வகையில் நீண்ட நேரம் செலவழிகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். நண்பர்களுடன் அரட்டை, செல்போன் பேச்சு, டீக்கடை மீட்டிங், டி.வியில் கிரிக்கெட் மேட்ச்… என எல்லாவற்றுக்கும் வாழ்க்கையில் பங்கு இருக்க வேண்டும். பொழுதுபோக்கு […]

Read More
சச்சினிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர், ஒரு நீண்ட சகாப்தம் படைத்தவர். கிரிக்கெட் என்ற விளையாட்டை அறியாதவர்களும் வெறுப்பவர்களும்கூட சச்சினை அறிவார்கள். தன் விளையாட்டுத் திறமையால் மட்டுமின்றி, தனிமனித ஒழுக்கத்தாலும் இந்தியர்கள் அனைவரின் நல்மதிப்பையும் பெற்றவர். உதாரண புருஷர்களுக்கு வறட்சி நிலவும் தேசத்தில், இரண்டு தலைமுறை இளைஞர்கள் மனதில் நம்பிக்கை மிக்க ரோல்மாடலாக உருவெடுத்தவர். தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபலங்கள் இங்கே குறைவு. அதிலும் இந்தக் காலத்தில் புகழேணியின் உச்சியில் யாரும் பல காலம் நிலைத்திருக்க முடிவதில்லை. […]

Read More
தினம் ஒரு கதை - 131

கல்லூரியில் படித்து முடித்து விட்டு வேலை தேட ஊரிலிருந்து சென்னை வந்திருந்தான் அந்த இளைஞன். சென்னையில் அவன் தாய் மாமா மளிகைக்கடை வைத்திருந்தார். வேலை தேடப் போகும் நேரம் போக மற்ற நேரங்களின் மாமாவின் கடையில் உதவி செய்தான். அது சின்ன கடைதான். பல சரக்கு சாமான்களும் காய்கறிகளும் விற்கும் சில்லரை வியாபாரக் கடை. மாமாவும் அத்தையும் கடையை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆரம்பப் பள்ளி செல்லும் குழந்தைகளும் உண்டு. கடையில் இருக்கும்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த […]

Read More
தினம் ஒரு கதை - 130

ஜப்பான் தேசத்தில், நூறு வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறுவன் வகுப்பறையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு வயது எட்டுக்குள் இருக்கும். அந்த வயதில் அவனுக்கு பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் மிகப்பெரிய வெறுப்பு இருந்தது. ஆசிரியர்கள் என்றாலே பயமுறுத்தும் உயிரினங்கள் என்றே அவன் அகராதியில் இருந்தது. அன்று புது ஓவிய ஆசிரியர் டாய்ச்சிகோவா வருகிறார் என்று அனைவரும் பரபரப்பாக இருந்தனர். இவனும் டாய்ச்சிகோவாவை பயத்துடன் எதிர்பார்த்திருந்தான். ஆசிரியர் டாய்ச்சிக்கோவா உள்ளே வந்தார். மாணவர்கள் எழுந்து பணிந்தார்கள். அனைவரையும் அவர் அமரச் […]

Read More
தினம் ஒரு கதை - 129

இரண்டு நண்பர்கள் வயல்வெளியைப் பார்த்துக்கொண்டே நடந்து வந்து அமர்ந்தனர். அவர்கள் இருவரும் தங்களை அறிவுப்பூர்வமாக விவாதம் செய்யும் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள் மட்டும்தான். வயல்வெளியில் விவசாயி கடுமையாக உழைப்பதை பார்த்துக் கொண்டே பேசினார்கள். ‘‘விதை இல்லாமல் ஏது நெற்கதிர்கள்? நெற்கதிர்கள் இல்லாமல் நெல் ஏது? நெல் இல்லாமல் அரிசி ஏது? அரிசி இல்லாமல் உணவு ஏது? உணவில்லாமல் நீயும் நானும் ஏது? நான் இல்லாவிட்டால் உலகு ஏது?’’ என்று ஒருவர் வியாக்கியானமாய் […]

Read More
தினம் ஒரு கதை - 128

பதின் பருவத்தில் நுழைய இருக்கும் அந்தப் பள்ளிச் சிறுமி அன்று முழுவதும் டி.வி பார்த்துக்கொண்டே இருந்தாள். காலை முதல் மாலை வரை டி.வி.யில் ஒரு நிகழ்ச்சியைக்கூட விடவில்லை. புதிதாய் சேர்ந்திருக்கும் பேஸ்கட் பால் பயிற்சிக்குக்கூட மாலையில் போகவில்லை. அம்மா இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவர் ஏதும் கேட்கவில்லை. ஆனால் இரவிலும் மகள் டி.வி பார்த்துக் கொண்டிருப்பதை அவரால் தாங்க முடியவில்லை. ‘‘ஏன்மா இன்னைக்கு விளையாடவே போகலை?’’ ‘‘இனிமே எனக்கு விளையாட்டு செட் ஆகாதும்மா’’ என்றாள் மகள். ‘‘ஏன்?’’ ‘‘நேத்து […]

Read More
1 2 3 27
crossmenu