கனவுகளைத் துரத்துங்கள்
கனவுகளைத் துரத்துங்கள்
கனவுகளைத் துரத்துங்கள்
ஒரு கனவு, ஒரு இலக்கு, ஒரு லட்சியம், ஒரு பார்வை, ஒரு வேட்கை... வெற்றியை விரும்பி உழைக்கும் எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. பிளஸ் 2-வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண், ஐ.ஏ.எஸ் தேர்வில் டாப் இடம், வேலை செய்யும் அலுவலகத்தில் இருப்பதிலேயே உயர்ந்த பதவி, செய்யும் தொழிலில் அந்த ஊரிலேயே முதன்மையான அந்தஸ்தைப் பெறுவது... இப்படி கனவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானவை. ஆனால், உழைப்பில் உத்வேகம் காட்டும் பலரும் வழியில் எங்கேயோ இந்த எல்லா விஷயங்களையும் மறந்துவிடுகிறார்கள். ‘கனவு காணுங்கள்’ என்றார் கலாம். ஆனால் கனவு என்பது, அதன்பின் மறந்துவிட வேண்டிய ஒன்றில்லை. அந்தக் கனவைத் துரத்திக்கொண்டே இருக்க வேண்டும். இந்தப் புதிய ஆண்டில் நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்...
எதற்காக?
- வாழ்க்கையின் ரகசியமே பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது. உங்கள் கனவுகளைத் துரத்தி ஜெயிக்கும்போது, மதிப்புள்ள ஒரு வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையை, உங்கள் முன்மாதிரியை, உங்கள் வாழ்வின் அர்த்தத்தை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதைவிட இனிமையான ஒரு விஷயம் உலகில் என்ன இருந்துவிட முடியும்?
- கனவுகளைத் துரத்தி ஜெயிக்க முனையும்போது உங்களுக்குள் அபார மன உறுதி பிறக்கும். அந்த மன உறுதி, நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகளை உங்கள் காலடியில் கொண்டுவந்து சமர்ப்பிக்கும்.
- குழந்தைகளாக இருந்தபோது நாம் கனவுகளையும் மாயாஜாலங்களையும் நேசித்தோம். நீங்கள் எந்த வயதில் இருந்தாலும், உங்கள் கனவை நிஜமாக்கும் மாயாஜாலத்தை நிகழ்த்த முடியும் என நம்புங்கள். இளமைத் துடிப்பும் வாழ்க்கை மீதான பிடிப்பும் தானாகக் கிடைத்துவிடும்.
- உங்கள் வாழ்க்கையில் நிகழும் எதிர்மறையான சம்பவங்கள் உங்களைப் பாதிக்காமல் காப்பாற்றுவது லட்சியக் கனவுகளே! இந்த நிகழ்வுகள் முக்கியமா, கனவு முக்கியமா என எடை போட்டுப் பார்த்து லட்சிய நெருப்பை அணையாமல் பாதுகாப்பது, கனவைத் துரத்தும் உங்கள் பயணமே!
- மனதையும் கவனத்தையும் குவித்து ஒரு விஷயத்தைச் செய்யும்போது, நிச்சயம் அதில் ஜெயிக்க முடியும் என்பதற்கு ஒரு ரோல் மாடலாக நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு இருப்பீர்கள். உதாரண புருஷர்களை வெளியில் தேடவேண்டிய அவசியமில்லை.
- கனவுகளைத் துரத்தும்போது நிறைய தோல்விகளை நீங்கள் சந்திப்பீர்கள். ‘வெற்றியும் தோல்வியும் இரண்டு வெவ்வேறு எல்லைகள் அல்ல; வெற்றியை அடையும் வழியில் குறுக்கிடும் விஷயமே தோல்வி’ என்ற உண்மையை அப்போது உணர்வீர்கள். கடைசியில் வெற்றியை ருசிக்கும்போது, ‘தோல்வி என்பது அப்படி ஒன்றும் மோசமான விஷயம் இல்லை’ என்ற நிம்மதி உணர்வு பிறக்கும்.
- ‘வருத்தம்’ என்பது துயரம் தரும் ஒரு உணர்வு. அதை உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்காதீர்கள். ‘கனவைத் துரத்தி முயற்சி செய்திருக்கலாமே’ என எதிர்காலத்தில் வருந்தி வேதனைப்படாமல் இருக்க, இப்போதே கனவைத் துரத்துங்கள்.
- கனவுகளைத் துரத்தும் பயணத்தில் வயது என்பது வெறும் நம்பர்தான். எந்த வயதிலும் நீங்கள் நினைப்பதைச் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கலாம்.
- உங்கள் கனவுகளைத் துரத்தும்போது, நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு சுவாரசியமான மனிதராகி விடுவீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இலக்கும் இருப்பதை மற்றவர்களுக்கு நீங்கள் உணர்த்த முடியும்.
- ‘இதெல்லாம் சாத்தியமா?’ என உலகம் உங்களை வேடிக்கையோடு பார்க்கும். அப்படி உங்களைக் கிண்டல் செய்யும் அத்தனை பேரின் செய்கையும் முட்டாள்தனமானது என நீங்கள் வாதிடுவது வேஸ்ட்! ஜெயித்துக்காட்டி அவர்களை வேடிக்கை மனிதர்கள் ஆக்குவதைவிட, வேறு சுவாரசியமான விளையாட்டு இந்த உலகத்தில் கிடையாது.
- இந்தப் பயணத்தில் அடிக்கடி உங்களுக்குச் சின்னதாகப் பயம் வரும். ‘இது சரிதானா?’, ‘நாம் செய்வதற்கு நல்ல ரிசல்ட் கிடைக்குமா’ என எழும் கேள்விகளும், அவை தரும் பயங்களும் அர்த்தமுள்ளவை. சவால்களைச் சமாளிக்கவே நாம் வாழ்கிறோம் என்ற உணர்வை இவை தரும்.
- உலகம் நீங்கள் விளையாடுவதற்கு ஒரு மைதானம் கொடுத்து, அதன் எல்லைகளை வரையறுத்து வைத்திருக்கிறது. நீங்கள் ஜெயிக்க ஜெயிக்க, அந்த எல்லைகள் விரிந்துகொண்டே செல்லும். முயற்சி செய்பவனுக்கு எல்லாமே சாத்தியம் என்ற புரிதலை அது ஏற்படுத்தும்.
- உங்கள் கனவை நீங்கள் சாத்தியமாக்கும் போது, அதைக் கண்களால் பார்க்கும் முதல் ரசிகனாகவும் நீங்களே இருப்பீர்கள். உங்கள் வாயால் உலகம் அதைக் கேட்கப் போகிறது. நினைத்துப் பாருங்கள்... நாளை ரிலீஸ் ஆகப் போகும் சூப்பர் சினிமாவை, இன்றைக்கே ஒரு பெரிய அரங்கில் தனி ஆளாக நீங்கள் மட்டுமே முதலில் பார்க்கும் உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்!
- பெரியதோ, சிறியதோ... உங்கள் கனவை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். அதற்கு எல்லைகள் இல்லை. நீங்கள் கற்பனை காணும் ஒரு விஷயத்தை, நீங்களே சாத்தியமாக்குவது எவ்வளவு பெருமிதமான விஷயம்!
- உங்கள் கனவுதான் உங்களை வடிவமைக்கிறது. அதை அடைந்த பிறகு, உங்கள் அடையாளமாக அதுவே இருக்கப்போகிறது. அடையாளத்தை இழந்துவிடாமல் இருக்க, கனவுகளைத் துரத்துங்கள்!
Share
Related Posts