குழந்தைகளுக்கு பணக்கல்வி கொடுங்கள்!
குழந்தைகளுக்கு பணக்கல்வி கொடுங்கள்!
குழந்தைகளுக்கு முதன்முதலில் முடிவெடுக்கும் வாய்ப்பைத் தருவது, பணம்தான்! இளம் வயதிலேயே பணத்தைக் கையாளும் வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுத் தந்துவிட்டால், அவர்கள் சம்பாதிக்கும் நாட்களில் தெளிவாக இருப்பார்கள். கடைகளுக்குச் சென்று செலவழிக்கும்போது மட்டும் குழந்தைகளைக் கூட்டிச் செல்வார்கள் சிலர். ஆனால் செலவைவிட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது சேமிப்பைத்தான்! எப்படி அவர்களுக்கு பணக்கல்வி கொடுப்பது?
* குழந்தைகள் எண்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததுமே அவர்களுக்கு பணத்தை அறிமுகம் செய்யுங்கள். பார்த்தும், திரும்பத் திரும்ப கவனித்தும் ரூபாய் நோட்டுகளின் வித்தியாசத்தை குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள்,
* குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு பணத்தின் மதிப்பை உணர்த்துங்கள். முக்கியமாக அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது... எப்படி சேமிப்பது, எப்படி பணத்தை வளரச் செய்வது, எப்படி புத்திசாலித்தனமாக செலவு செய்வது ஆகிய மூன்றையும்!
* தேவைகள், விருப்பங்கள், ஆசைகள் ஆகிய மூன்றுக்கும் இருக்கும் வித்தியாசங்களை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவுங்கள். தேவைகள் இல்லாமல் வாழ முடியாது; கையிருப்பைப் பொறுத்து விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். மிதமிஞ்சிய பணம் இருக்கும்போது ஆசைகளைப் பூர்த்தி செய்யலாம். இந்த வித்தியாசம் புரிந்தால், அவர்கள் செலவு முடிவுகளைத் தெளிவாக எடுப்பார்கள்.
* இலக்குகளை நிர்ணயித்து நிறைவேற்றிக் கொள்வதை அவர்களின் பழக்கமாக மாற்றுங்கள். ஒரு காஸ்ட்லி பொம்மை, விளையாட்டுப் பொருள் என எது வாங்குவதாக இருந்தாலும், அவர்களுக்குக் கொடுக்கும் ‘பாக்கெட் மணி’யை சேமித்து வாங்கச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். இது சேமிக்கும் பழக்கத்தையும், இலக்குகளை எட்டும் குணத்தையும் அவர்களுக்குக் கொடுக்கும்.
* சேமிக்கும் பணம் எப்படி வட்டி ஈட்டுகிறது என்ற கணக்கை அவர்களுக்குப் புரிய வையுங்கள். நம் பணம், நமது முயற்சி இல்லாமலே தானாக வட்டி சம்பாதித்து, காலப்போக்கில் அந்த வட்டிக்கும் வட்டி கிடைக்கும் கூட்டு வட்டி தத்துவத்தைப் புரிய வையுங்கள். எளிய சேமிப்புத் திட்டங்களில் அவர்கள் பெயரில் முதலீடு செய்து இதைப் புரிய வைக்கலாம்.
* குழந்தைகளுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து, சேமிக்கச் செய்யுங்கள். மாதம் நூறு ரூபாய் தருகிறீர்கள் என்றால், அதைச் சில்லறையாகக் கொடுங்கள். ஒரு பகுதி சேமிக்க, ஒரு பகுதி செலவழிக்க என அவர்களே பிரித்து வைத்து முடிவெடுப்பார்கள்.
* பத்து வயதுக்கு முன்பே குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி விடுங்கள். அவர்களது பாக்கெட் மணியை அதில் சேமிக்க ஊக்கப்படுத்துங்கள். ஏதாவது முக்கியத் தேவைக்கு அதிலிருந்து பணம் எடுக்க வேண்டும் எனக் கேட்டால், தாராளமாக எடுக்க அனுமதியுங்கள். இல்லாவிட்டால், குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வம் போய்விடும். எடுக்க முடியாத பணத்தை தங்கள் பணமாக அவர்கள் நினைக்க மாட்டார்கள்.
* சேமிக்கும் பணத்தின் கணக்கைச் சொல்ல வங்கி பாஸ் புத்தகம் இருக்கிறது. செலவு செய்வதைத் தனியாகக் கணக்கு எழுதச் சொல்லுங்கள். இப்படிச் செய்யும்போது பண நிர்வாகம் அவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும்.
* வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்கும்போது குழந்தைகளை கூட்டிச் செல்வார்கள் பலர். முதலில் இப்படிப் பழகுவதுபோல, எல்லா பொருட்களை வாங்கும்போதும் அவர்களைக் கூட்டிச் செல்லுங்கள். எதற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை உணர்ந்துகொள்ளும் குழந்தைகள், எதையும் வீணாக்க மாட்டார்கள். அதோடு தரத்தையும் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்து பொருட்களை வாங்குவது எப்படி, விலை அதிகமான பொருட்களைத் தவிர்ப்பது ஏன், எக்ஸ்பயரி தேதி, வாரன்ட்டி என பர்ச்சேஸ் தொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.
* கடைகளில் அவர்கள் எதையாவது வாங்க விரும்பினால், அங்கு வைத்து அவர்களைக் கண்டிக்காதீர்கள். அவர்கள் வாங்கிய விதம் சரியா என வீட்டுக்கு வந்தபிறகு விவாதியுங்கள். நல்ல முடிவு என்றால் பாராட்டலாம்; தப்பான முடிவு என்றால் திருத்தலாம்.
* ஒரு பொருளைப் பற்றி அந்த பிராண்டின் விளம்பரங்கள் சொல்லும் தரத்தையும் விலையையும் எப்படிப் பார்ப்பது என்பதையும் புரிய வையுங்கள். தள்ளுபடிகள் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
* வட்டி என்பதை வளர விட்டால் எவ்வளவு வேகமாக நம் பணம் பறிபோகும் என அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களுக்கு ஏதாவது வாங்குவதற்கு நீங்களே வட்டிக்குப் பணம் கொடுங்கள். பிறகு அவர்களிடம் வட்டியோடு சேர்த்து அதைக் கறாராக வசூலித்து விடுங்கள். வட்டிக்கு வாங்கி செலவழிப்பது ஆபத்தானது என்பது அவர்கள் மனதில் பதிந்துவிடும்.
* அவர்கள் சம்பாதிக்கத் தொடங்கும்வரை, கிரெடிட் கார்டு வாங்க அனுமதிக்காதீர்கள். கல்லூரி வயதில் கிரெடிட் கார்டு வாங்கும் பலர், அதை அவசரத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தாமல், எல்லா தேவைகளுக்கும் தாறுமாறாகப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கிரெடிட் கார்டு என்பதை பர்ஸில் இருக்கும் பணமாக நினைக்கும் மனோபாவம் இங்கு இருக்கிறது. அதுவும் கடன்தான் என்பதை உணர்த்துங்கள்.
* விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது, பணம் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். பணம், செக், டெபிட் கார்டு, தங்கம் விலை, வீட்டு வாடகை என எல்லாம் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். சேமிப்பு, முதலீடு, அவற்றின் வளர்ச்சி, குடும்ப பட்ஜெட் என்றெல்லாம் வளர வளர கற்றுக் கொள்ளும் குழந்தைகள், பெரியவர்கள் ஆனதும் உங்களுக்கே பொருளாதாரப் பாடம் எடுப்பார்கள்!
Share
Related Posts