தினம் ஒரு கதை - 40
தினம் ஒரு கதை - 40
அரசன் ஒருவன் பக்கத்து நாட்டைத் தாக்கி மக்களை சிறைபிடித்து அடிமையாக்கி வைத்திருந்தான். அவர்களை சித்திரவதை செய்து கடுமையாக வேலை வாங்கினான்.
அந்த நாட்டுக்கு ஒரு ஞானி வந்தார். ஞானியை மதிப்புடன் வரவேற்று அரசன் உபசரித்தான்.
ஞானியோ, ‘அடிமையாக மக்களைப் பிடித்து வைத்திருப்பது தவறு’ என்று புத்திமதி சொல்லி அரசனைத் திருத்தப் பார்த்தார்.
ஆனால் அரசன் திருந்தவே இல்லை. ‘யாரையும் விடுதலை செய்ய முடியாது’ என்று பிடிவாதமாக சொல்லிவிட்டான்.
இதைக் கேட்ட ஞானி, அரசன் சிறைப் பிடித்து வைத்திருக்கும் பக்கத்து நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டார். அரசன் அனுமதித்தார். அங்கே அடிமையாக்கப்பட்ட ஒருவன் அழுது கொண்டே இருந்தான்.
ஞானி விசாரிக்க, ‘‘என் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்றான். அவன் துன்பம் கண்டு இரங்கிய ஞானி, அவன் உடைகளை அவர் அணிந்து கொண்டு, அவர் உடையை அவனுக்கு அணிவித்து, ‘‘தப்பிப் போ. நான் இங்கு இருக்கிறேன்’’ என்று சொன்னார். அவனும் நன்றி சொல்லி, ஞானி வேடத்தில் தப்பிப் போனான்.
ஞானி இங்கே அடிமையாகக் கடுமையாக உழைத்தார். உடல் தேய்ந்தார். ஒருநாள் தற்செயலாக உலா வந்த அரசன், ஞானியை அடையாளம் கண்டு கொண்டான்.
நடந்ததை அறிந்து ஞானிக்காக துடித்தான். ‘‘ஏன் இப்படிச் செய்தீர்கள் ஐயா?’’ என்று அரசன் கேட்க, ‘‘அரசே! உன் மனதை மாற்றினால் ஆயிரக்கணக்கான அடிமைகள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள் என்று நினைத்தேன். பேசிப் பார்த்தேன். நீ மனம் மாறுவதாக இல்லை. அதற்காக நான் பின்வாங்க எண்ணவில்லை. என்னால் முடிந்த வேலையாக, ஒரே ஒரு அடிமையை விடுவித்தேன். அவனாவது சுதந்திரமாக வாழட்டும். தனி மனித சுதந்திரத்தைப் போல முக்கியமானது எதுவுமில்லை’’ என்றார்.
இதைக் கேட்ட அரசன், தன் தவறை உணர்ந்து அனைத்து மக்களையும் விடுதலை செய்தான்.
ஞானி தான் கொண்ட குறிக்கோளின் பெரிய காரியத்தை சாதிக்க முயன்றார். அது இயலவில்லை. ஆனாலும் அவர் குறிக்கோளை விடவில்லை. அதில் சிறியதாகவேனும் ஒரு காரியத்தை செய்து முடித்தார். அவரது விடா முயற்சியும் நம்பிக்கையும் செயலுமே பல்லாயிரக்கணக்கான மக்களின் விடுதலைக்குக் காரணமானது.
அரசன் அவரின் உறுதியைப் புகழ்ந்து நாட்டின் தலைமை ஆலோசகராக அவரை நியமித்தான்.
Share