தினம் ஒரு கதை - 55
தினம் ஒரு கதை - 55
மார்க்கெட்டிங் பயிற்சி கொடுக்க அவர் வந்திருந்தார். அவர் பேசினார்.
‘‘இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வாடிக்கையாளர் சேவை பற்றி ஒரு கதை கூறப் போகிறேன். அது வேடிக்கையான கதைதான். ஆனால், அதில் சிந்திக்கவும் பல விஷயங்கள் இருக்கின்றன.
நகரத்தில் புகழ்பெற்ற கேக் கடை ஒன்று இருந்தது. என்னமாதிரியான கேக் கேட்டாலும் அவர்கள் செய்து தருவார்கள். அது சுவையாகவும் தரமாகவும் இருக்கும். ஒருநாள் ஏழ்மையான உடையில் ஓர் இளைஞன் வந்து, ‘எனக்கெல்லாம் கேக் செய்து கொடுப்பீர்களா?’ என்று கேட்டான்.
‘இங்கே யாருக்கு வேண்டுமானாலும் கேக் செய்து கொடுப்போம். சொல்லுங்கள், உங்களுக்கு என்ன மாதிரி வேண்டும்?’’ என்று கேட்டார்கள்.
‘‘எனக்கு ஆங்கில எழுத்து ‘டி’ வடிவில் ஒரு கேக் வேண்டும்’’ என்று கேட்டான்.
‘நாளை வாருங்கள், செய்து வைத்திருக்கிறோம்’ என்றார்கள்.
மறுநாள் காலையில் அவன் வந்தான். கடைக்காரர்கள் இன்முகத்தோடு கேக்கைக் காட்டினார்கள்.
அவன் முகம் இருண்டது. ‘நான் பெரிய ‘டி’ வடிவில் கேட்கவில்லை. சிறிய ‘டி’ வடிவில் கேட்டேன். இது வேண்டாம்’ என்றான் இளைஞன்.
கடைக்காரர்கள் திகைத்தார்கள். அந்த இளைஞன் பெரிய ‘டி’யா அல்லது சிறிய ‘டி’யா என்று சொல்லாவிட்டாலும். அதைக் கேட்டு தெளிவுபடுத்தாமல் விட்டது தங்கள் தவறுதான் என்று நினைத்தார்கள்.
அவர்கள் மன்னிப்பு கேட்டு, அன்று மாலையே சிறிய ‘டி’ வடிவில் கேக் செய்து அவனுக்குக் கொடுத்தார்கள்.
‘சார், இதை எப்படி பார்சல் செய்யட்டும்?’ என்று இளைஞனிடம் கேட்டார்கள்.
‘பார்சல் எல்லாம் வேண்டாம். தட்டில் வைத்துக் கொடுங்கள், இப்போதே சாப்பிட வேண்டியதுதான்’ என்று வாங்கி சாப்பிட ஆரம்பித்தான் இளைஞன்.
இது வேடிக்கைக் கதை என்றாலும், வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கத் தூண்டும் கதையாகும்’’ என்று சொல்லி முடித்தார் அவர்.
Share