தினம் ஒரு கதை - 99
தினம் ஒரு கதை - 99
கோடை விடுமுறையைக் கொண்டாட அந்த சிறுமி தன் நண்பர்களுடன் கடற்கரைக்குச் செல்லத் திட்டமிட்டாள். பேருந்தில் சென்று இறங்கிய அந்த சிறார் கூட்டம், கடற்கரையை அடைவதற்காக சாலையில் நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது சர்ரென்று மூன்று பைக்குகள் மிக வேகமாக அவர்களைக் கடந்து சென்றன. அவை ரேஸ் பைக். அந்த சாலையில் சென்ற மொத்த மக்களையும் அச்சுறுத்துவது போல பைக்கை ஓட்டிச் சென்றார்கள். கடற்கரை சாலையில் இங்கும் அங்கும் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர் ஒருவர் அவர்களை விசாரித்தார். ஆனால், அவர்கள் அதிகாரமிக்க பணக்கார வீட்டு நபர்களாக இருந்ததால், அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
மூன்று பைக்குகளில் வந்த ஆறு இளைஞர்களும் பைக்கில் கூக்குரலிட்டுக் கொண்டு சென்றார்கள். அங்குள்ளவர்களை இடிப்பது போல சென்று நின்று சிரித்தார்கள். மொத்தத்தில் மிக மிக ஆணவமாக, அடுத்தவர் உணர்வை முற்றிலும் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டனர்.
இந்த சிறுமியைப் பார்த்து, ‘‘ஏய் பாப்பா! வேகமா காற்று அடிச்சதுன்னா பறந்திருவ. நீ எல்லாம் ஏன் பீச்சுக்கு தனியா நண்பர்களோட வர்ற?’’ என்று கிண்டல் செய்தார்கள். மற்றவர்கள் மொத்தமாக சிரித்தார்கள். இச்சிறார் கூட்டம் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் கால் நனைத்து விளையாடும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் அவ்விளைஞர்கள் கடலோடு விளையாடி ஓலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் இருட்டத் தொடங்கிற்று. திடீரென்று அவர்கள் ஆறு பேரும் அங்கிருந்து தலை தெறிக்க மக்கள் நடமாட்டம் உள்ள இடத்துக்கு வந்தார்கள். அவர்களால் பேச முடியவில்லை. அவர்கள் முகம் வெளுத்திருந்தது.
ஒருவன் மட்டும் கத்தினான். ‘‘பே… பே… பேய்… பேயீ… அங்க பேயீ இருக்கு.’’
இதைக் கேட்டு சிறார்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். அச்சிறுமி கேட்டாள். ‘‘அண்ணா, நிதானமா சொல்லுங்க. பேயெல்லாம் கிடையவே கிடையாது. நீங்க அங்க என்ன பாத்தீங்கன்னு சொல்லுங்க!’’
‘‘ஐயோ… பயமா இருக்கு!’’
‘‘பயப்படாதீங்கண்ணா, சொல்லுங்க!’’
‘‘ஒரு குழந்தையோட தலை அங்க தனியா இங்கேயும் அங்கேயும் உருண்டுக்கிட்டு கிடக்கு!’’
‘‘எங்கே?’’
‘‘அங்கே. அது பேய்தான். ஐயோ… எங்களால முடியலை.’’
அவர்கள் கிட்டத்தட்ட மயக்கத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு குடிக்க நீர் கொடுத்தார்கள். சூடான அவித்த சோளம் வாங்கிக் கொடுத்தார்கள். அதுவரை மொத்த மக்களையும் கலவரப்படுத்திக் கொண்டிருந்த அந்த ஆறு இளைஞர்களும் ஐந்து நிமிடத்தில் பச்சிளங்குழந்தைகளாக சோளம் சாப்பிட்டுக் கொண்டிருந்தைப் பார்க்க சிறுமிக்கு சிரிப்பாகவும் இருந்தது, பாவமாகவும் இருந்தது.
அவர்கள் பேய் பேய் என்று சொன்ன இடத்துக்கு அவள் சிலரை அழைத்துக் கொண்டு போனாள். திரும்பி வரும்போது அவள் கையில் அந்தக் குழந்தையின் தலை இருப்பதை இளைஞர்கள் பார்த்து பயந்து ஓட எழுந்தார்கள்.
அவள் கத்தினாள். ‘‘அண்ணா, பயப்படாதீங்க’’ என்று அருகில் வந்தவள் தொடர்ந்தாள். ‘‘அண்ணா, இது குழந்தை தலை இல்ல. இது பெரிய குழந்தை பொம்மையோட தலை. யாரோ கடற்கரையில விளையாடும்போது போட்டுட்டுப் போயிருக்காங்க!’’
‘‘இல்லையே! இந்தத் தலை கடற்கரையில அங்கேயும் இங்கேயும் உருண்டுக்கிட்டு இருந்துச்சே?’’
அவள் பொம்மையின் கழுத்தைத் தாழ்த்தி அவர்களிடம் காட்டினாள். உள்ளே இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு நண்டு இருந்தது.
‘‘அண்ணா, இதோட பேரு துறவி நண்டு. ஆங்கிலத்துல Hermit crabனு சொல்லுவாங்க. இது தன்னைப் பாதுகாத்துக்கிறதுக்காக காலியா இருக்கிற பெரிய சங்குகள் உள்ள போய், அதை மேல ஓடு மாதிரி வச்சிக்கிட்டு தண்ணிக்குள்ள போகும். கடற்கரையில் இருந்த குழந்தை பொம்மை தலையைப் பார்த்த உடனே, இந்த துறவி நண்டு அதுவும் ஒரு வகை சங்குதான்னு நினைச்சு உள்ளே ஏறி நகர்ந்திருக்கு. அது இருட்டுல குழந்தை தலை நகர்ந்த மாதிரி உங்களுக்குத் தோணியிருக்கு. அதைப் பார்த்து பேய்னு பயந்துட்டீங்க.’’
அந்த இளைஞர்களில் ஒருவன் பேசினான். ‘‘ரொம்ப நன்றிம்மா. நாங்க எங்க கிட்ட நிறைய பணம் இருக்கு, அதிகாரம் இருக்கு, உலகத்துல வாழ்றதுக்கு அது போதும்னு நினைச்சோம். ஆனா சரியான அறிவில்லாம போனதால சின்ன துறவி நண்டைப் பார்த்து பேய்ன்னு பயந்துட்டோம். உன்னோட அறிவுதான் எங்கள பயத்துல இருந்து விடுதலை செய்தது. நாங்க உங்களை இத்தனை கஷ்டப்படுத்தினாலும், எங்களுக்கு பிரச்னை வரும்போது எங்களுக்காக உன் அறிவைக் கொடுத்த உன் கருணை பெரியது!’’
‘‘உலகத்துல எல்லா மனிதர்களுக்கும் அறிவும், கருணையும், சமூகப்பார்வையும் இருந்துட்டா இந்த உலமே சொர்க்கம்தாண்ணா!’’ என்று சொன்ன சிறுமி, அந்த துறவி நண்டு இருக்கும் குழந்தை பொம்மை தலையை கடற்கரையில் விட்டாள்.
அது அழகாக உருண்டு உருண்டு கடலுக்குள் சென்றது. எதைப் பார்த்து பேய் என்று அலறினார்களோ, அதையே இப்போது ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த இளைஞர்கள்.
அவர்கள் ஆணவம் எல்லாம் மறைந்தது. திரும்பிப் பார்த்தார்கள். சிறுமி தன் கூட்டத்துடன் தூரத்தில் டாட்டா சொன்னபடி போய்க் கொண்டிருந்தாள்.
Share