தினம் ஒரு கதை - 97
தினம் ஒரு கதை - 97
தொழிலதிபர் ஒருவர் கடற்கரையில், கடல் அலைகள் தன் கால்களில் பட நடந்து கொண்டிருந்தார்.
அவர் மனம் குழம்பிப் போய் இருந்தது. அவர் நடத்தி வரும் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று அவருக்கு தெரிகிறது. ஆனால் அது எது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக நன்றாக செயல்பட்ட நிறுவனம் திடீரென்று தேக்கநிலை அடைந்துள்ளது என்று மட்டும் அவரால் உணரமுடிகிறது. என்ன பிரச்னை என்று துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நினைப்புடன் அவர் நடந்து கொண்டிருந்தபோது கடற்கரையில் நம்ப முடியாத ஒன்றைக் கண்டார். ஒரு ஸ்டார் ஃபிஷ் என்ற நட்சத்திர மீன் தனது ஐந்து கால்களையும் வைத்து நடந்து நடந்து கடலுக்குள் போக முயற்சி செய்து கொண்டிருந்தது. இவர் ஓடிப் போய் நட்சத்திர மீனை ஒரு குழந்தை மாதிரி பார்த்தார். அவ்வளவு வயதானாலும் அவருக்கு இன்றுதான் நட்சத்திர மீன் காலால் நடக்கும் என்பது தெரியும்.
அதை வாய்விட்டே சொன்னார். ‘‘நீ நடப்பாய்னு எனக்கு இன்னைக்குத்தான் தெரியும்!’’
‘‘எப்பவும் தொழில் தொழில்னு பொது அறிவை வளர்த்துக்காம இருந்தா இப்படித்தான் ஆச்சர்யமா இருக்கும்’’ என்று நட்சத்திர மீன் பேசியது.
‘‘நீ பேசுவியா?’’ தொழிலதிபர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
‘‘வெண்மை இணையதள பக்கத்தில் ‘தினம் ஒரு கதை’ பகுதியில வர்ற எல்லா உயிரினங்களுமே கதைக்குத் தேவைப்பட்டால் பேசும்தான். அது தெரியாதா உங்களுக்கு?’’ என்றது நட்சத்திர மீன்.
‘‘வேடிக்கைதான். எப்படி நீ நட்சத்திர வடிவில் இருந்து கொண்டு நகர்கிறாய். எனக்கு சொல்ல முடியுமா?’’
‘‘சொல்கிறேன். நான் நட்சத்திர வடிவில் இருக்கும் உயிர். பெரும்பாலும் எங்களுக்கு ஐந்து கால்கள்தாம் உண்டு. நாற்பது கால்கள் வரையுள்ள நட்சத்திர மீனெல்லாம் இருக்கிறது. எனக்கு ஐந்து கால்கள்.’’
‘‘நீ எப்படி நகர்கிறாய்?’’
‘‘ஐந்து கால்களும் சேருமிடத்தில் இருக்கும் நடுப்பகுதியில் ஓர் உறிஞ்சு குழாய் இருக்கும். அதில் நீரை உறிஞ்சி, அதற்குரிய பைகளில் சேமித்து வைத்திருப்பேன். என் ஐந்து கால்களின் கீழும் சிறு சிறு நுண்ணிய குழாய்கள் உண்டு. அந்த குழாய்கள் மூலமாக நீரைப் பீய்ச்சி அடிப்பேன்.’’
‘‘நாங்கள் ஷவரில் குளிக்கும்போது ஷவரில் வருவது போல உன் காலில் இருந்து நீர் வருமா?’’
‘‘ஆம், நான் அப்படித்தான் பீய்ச்சியடிப்பேன். அப்படிச் செய்யும்போது கால்கள் உயரும். இப்போது என் நகர்தலுக்கு ஏற்றாற் போல கால்களை இங்கும் அங்கும் அசைத்து நகர்வேன்.’’
‘‘அருமை… அருமை…’’
‘‘அப்படிப் பீய்ச்சியடிக்கும்போது ஒரு காலில் அதிகமாகவோ, இன்னொரு காலில் குறைவாகவோ நீரைப் பீய்ச்சியடித்தால் என்னால் நகர முடியாது. அனைத்து கால்களுக்கும் ஒரே மரியாதையைக் கொடுத்து நடத்தினால்தான் என்னால் நகர முடியும்’’ என்று சொல்லி, வேகமாக ஒரு கடல் அலையைப் பற்றிக்கொண்டு கடலுக்குள் சென்று மறைந்தது.
நட்சத்திர மீன் சொன்னதை தன் நிறுவனத்துடன் ஒப்பிட்டு நினைத்துப் பார்த்தார் தொழிலதிபர். அங்கே நிறைய ஏற்றத்தாழ்வு இருந்தது. சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு என்பது இருக்கும்தான். ஆனால், வேலை பார்க்கும் நாற்பது பேரில் இரண்டு மேனேஜர்கள் மிக சொகுசான வாழ்க்கையை வேலை செய்யுமிடத்தில் அனுபவித்தார்கள். எட்டு சூப்பர்வைசர்கள் அதற்கடுத்த சொகுசை அனுபவித்தார்கள். முப்பது தொழிலாளர்களும் மூன்றாம் கட்ட வசதியைத்தான் அனுபவித்தார்கள். டீ குடிப்பதாகட்டும், மதிய உணவாகட்டும், பர்மிஷன் எடுக்கும் சலுகையாகட்டும்… எல்லாவற்றிலும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் கண்டார்.
எப்படி நட்சத்திர மீன் தன் ஐந்து கால்களுக்கும் ஒரே அளவு நீரை பீய்ச்சுகிறதோ, அது போல தன் நிறுவனத்திலும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே தொழிலாளர்கள் உற்சாகமாய் பணியாற்றுவார்கள் என்பதை உணர்ந்துகொண்டார்.
அதன்படியே அனைவருக்கும் ஒரே வசதியைச் செய்து கொடுத்தார். தொழிலாளர்கள் ஓய்வறைக்கும் ஏ.சி வசதி கொடுத்தார். இப்படியான சமத்துவத்தைப் பின்பற்றி அடுத்த ஆறு மாதங்களில் நிறுவனம் பெரிய வளர்ச்சியைக் கண்டது. பெயரும் புகழும் கொண்டார்.
தனக்கு இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்த நட்சத்திர மீனுக்கு நன்றி சொல்லலாம் என்று அவரும் கடற்கரை ஓரம் நடந்து அதன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அது வரவே இல்லை.
ஒரு நாள் நிச்சயம் வரும், அப்போது அவர் நன்றி சொல்வார்.
Share