தினம் ஒரு கதை - 96

தினம் ஒரு கதை - 96

விடுமுறை தினத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் சினிமா பார்க்கத் திட்டமிட்டார்கள். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம் என்றால், அந்த இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை. ‘சரி, நேரில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்’ என்று தியேட்டருக்குப் போகிறார்கள்.

அங்கே காலைக் காட்சிக்கு டிக்கெட் இல்லை. மதியம் மூன்று மணிக் காட்சிக்குத்தான் இருக்கிறது. ‘‘அதுவரைக்கும் நாம என்ன செய்யறது? பேசாம திரும்பிப் போயிடலாம்’’ என்று இருவர் சொல்ல, ஒரு பெண் மட்டும் மூன்று மணிக் காட்சிக்கே மூவருக்கும் டிக்கெட் எடுத்தாள். ‘‘இன்னும் நாலு மணி நேரம் நாம எங்க பொழுது போக்குறது?’’ என்று மற்ற இருவரும் புலம்ப, டிக்கெட் எடுத்த பெண் தன் ஸ்மார்ட் போனில் ஏதோ தேடினாள். அவள் முகம் மலர்ந்தது.

சட்டென்று ஒரு ஆட்டோ பிடித்து அவர்கள் இருவரையும் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றாள். அது கன்னிமரா நூலகம். பழமையான அரிய புத்தகங்களை எல்லாம் அன்று அங்கு கண்காட்சியாக வைத்திருந்தார்கள். அதை மூவரும் ஆர்வமாகப் பார்த்தார்கள். ஒவ்வொரு புத்தகத்தையும் எவ்வளவு சிரத்தையாக 300, 400 வருடங்களுக்கு முன்பே அச்சிட்டிருக்கிறார்கள் என்று பார்த்தார்கள். இந்தியாவில் உள்ள விலங்குகளையும், பறவைகளையும், மீன்களையும் எப்படி படமாக வரைந்து புத்தகம் அச்சிட்டிருக்கிறார்கள் என்பதை வியந்து பார்த்தார்கள். இப்படி ஒவ்வொரு புத்தகமாக பார்க்கப் பார்க்க, பொழுது போவதே தெரியவில்லை.

மதிய உணவை முடித்து அதே வளாகத்தில் இருந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். அங்கே அவர்கள் புதிதாய் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருந்தன. அவர்களுக்கு மறுபடியும் பழைய புத்தகங்களைப் பார்க்க ஆசையாய் இருந்தது. நூலகம் வந்து அரிய நூல்களை மீண்டும் பார்த்தனர். ‘‘உனக்கு எப்படி இந்த யோசனை வந்தது? நாங்க இந்த நாலு மணி நேரத்தைக் கடத்துறது ரொம்ப போரடிக்கும்னு நினைச்சோம்’’ என நூலகத்துக்கு அழைத்து வந்த பெண்ணிடம் மற்ற இருவரும் கேட்டார்கள்.

‘‘அதுக்கு நீங்க மகாத்மா காந்தியோட வாழ்க்கை சம்பவம் ஒன்று கேட்கணும்!’’

‘‘அது என்ன சம்பவம்?’’

‘‘ஒருமுறை மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து பம்பாய்க்கு வந்தார். வழியில் அலகாபாத் நகரத்தில் ரயில் நின்றது. ‘ரயில் 45 நிமிடம் நிற்கும்’ என்று அறிவித்தார்கள். காந்திக்கு மருந்து வாங்க வேண்டியிருந்ததால், அருகில் இருந்த மருந்துக் கடைக்குச் சென்றார். கடைக்காரர் மருந்து எடுத்துக் கொடுக்க நேரமாக்கிவிட்டார். கூட்டத்தைக் கடந்து ரயில் நிலையத்துக்கு வந்து பார்த்தால் ரயில் சென்று விட்டது. ஆம், மகாத்மா காந்தி ரயிலைத் தவற விட்டுவிட்டார்.’’

‘‘அச்சச்சோ, அப்புறம் என்னாச்சு?’’

‘‘காந்திக்கு கொஞ்சம் கவலைதான். மறுநாள்தான் ரயில். ஆகையால் அங்கேயே ஒரு தங்கும் அறை வாடகைக்கு எடுத்தார். குளித்துத் தயாராகிவிட்டு, அலகாபாத் நகரில் இயங்கி வரும் ஓர் ஆங்கிலேய ஆதரவு பத்திரிகையின் ஆசிரியரைப் பார்க்கப் போனார். ‘நீங்கள் இந்தியர்களின் உணர்வையும் இனிமேல் உங்கள் இதழ்களில் வெளியிட வேண்டும்’ என்று ஒரு கோரிக்கையை நட்பாக வைத்தார். காந்தியின் எளிமையான… ஆனால், நேரடியான அணுகுமுறையைக் கண்டு அவர் வியந்தார். காந்தியை உபசரித்து, அவர் கோரிக்கையை ஏற்பதாகச் சொல்லி அனுப்பினார் அந்தப் பத்திரிகையாளர்.’’

‘‘ஆஹா, அருமை. காந்தியடிகள் ரயிலைத் தவறவிட்டதைக்கூட தடங்கலாகப் பார்க்காமல், அந்த நேரத்தையும் வீணடிக்காமல் பத்திரிகையாளரை பார்க்க உபயோகப்படுத்தி விட்டாரே!’’

‘‘ஆமாம். அந்த சம்பவம்தான் உங்களை இந்த அரிய வகை நூல் கண்காட்சிக்கு என்னை அழைத்து வரச் செய்தது. வாழ்க்கையில் ஏற்படும் சின்னச் சின்ன தடங்கல்களைக் கண்டு சோர்ந்து போகாமல், மகாத்மா காந்தி வழியில் அதை நன்மையாக மாற்றிக் கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வந்து விட்டால் உலகம் இன்னும் சிறப்பு பெறும்.’’

‘‘ஹேய், காந்தி பத்தி பேசிக்கிட்டே காந்தி சிலைக்கு பக்கத்துல் வந்து விட்டோம் பார். நாம் மூவரும் காந்தியோடு சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்வோமா?’’

‘‘இங்கே செல்ஃபி எடுக்க அனுமதி உண்டா என்று தெரியவில்லையே!’’

‘‘அப்படி ஒரு தடங்கலா, இதையும் சமாளிப்போம்’’ என்று மூவரும் அங்கிருந்த நூலக அதிகாரியிடம் சென்றார்கள்.

‘‘சார், எங்கள் மூவரையும் காந்தி சிலைக்கு அருகே நிற்பது போல ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுங்கள்’’ என்றார்கள்.

அவர் சிரித்தபடியே புகைப்படம் எடுத்துக் கொடுத்தார். தடங்கலை நன்மையாக மாற்றிய பெருமிதத்தில், படம் பார்க்கச் சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu