தினம் ஒரு கதை - 91
தினம் ஒரு கதை - 91
ஓர் இளவரசனுக்குத் திருமண வயது வந்தது. பல பெண்கள் அவனைத் திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டார்கள். அவனுக்கு ஏனோ யாரையும் பிடிக்கவில்லை. ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டான். தன் குதிரையில் ஏறி தோன்றிய திசையில் அலைந்து திரியலானான்.
அப்படி ஒரு காட்டுக்குள் போனபோது அங்கே ஒரு குடியிருப்பு இருந்தது. அதில் சில பழங்குடி மக்கள் இருந்தார்கள். அவர்களிடம் உணவு வாங்கி அவன் சாபிட்டபோது, அவனைப் போலவே குதிரையில் அங்கே ஓர் இளம்பெண் வந்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.
இளவரசன் ஆர்வத்துடன், ‘‘அவளிடம் பேச வேண்டும். என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள்’’ என்றான்.
அவர்களோ, ‘‘அது முடியாது. அவள் ஊமையில்லை என்றாலும் யாரிடமும் பேசமாட்டாள். யாரையும் பார்ப்பதும் இல்லை’’ என்றார்கள். இளவரசனுக்கு இன்னும் ஆர்வமாகிவிட்டது.
அவனும் அவள் தங்கும் குடில் அருகே ஒரு குடிலில் தங்கிக் கொண்டான். யாருமில்லாதபோது அவள் குடில் உள்ளே எட்டிப் பார்த்தான். அவள் மௌனமாக காட்டு மரங்களில் கிடைக்கும் வண்ண விதைகளைத் துளையிட்டுக் கோர்த்து மாலையாக்கிக் கொண்டிருந்தாள். அப்படி விதவிதமாய் மாலைகள் செய்து கொண்டிருந்தாள். இங்கே அங்கே திரும்பவில்லை. அவளுக்கு யாராவது உணவு மட்டும் கொடுத்துவிட்டுப் போவார்கள். பின் அவள் எப்போது தூங்குகிறாள், எப்போது எழுகிறாள் என்று யாருக்கும் தெரியாது.
இளவரசனுக்கு அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆசை வந்தது. பேரழகான பெண்ணுக்கு அப்படி என்ன பிரச்னை இருக்க முடியும் என்று குழம்பினான். அவளிடம் பேசிப் பார்க்கலாமா என்று நினைத்தான். ‘அவள் மனதில் என்ன இருக்கிறது என முதலில் கண்டுபிடிப்போம். அதற்குப் பொறுமையாகக் காத்திருப்போம்’ என்று முடிவு செய்தான்.
முடிவில் ஒரு பௌர்ணமி மாலைப் பொழுதில் அவள் வீட்டை விட்டு வெளியே வந்தாள். இங்கும் அங்கும் பார்த்தாள். இளவரசன் மறைந்து கொண்டான். அவள் நடந்தாள். இவன் பின் தொடர்ந்தான்.
பக்கத்தில் ஒரு குளம் இருந்தது. அது நிலவு வெளிச்சத்தில் மினுமினுத்தது. அருகில் ஒரு மரம் இருந்தது. அம்மரத்தின் உயரத்தில் ஏறி ஒரு குச்சியை உடைத்தாள். அத்துடன் குளத்துக்குள் மூழ்கிய அவள் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் மேலே வரவில்லை. இளவரசன் பயந்து விட்டான். ஆனால் பிறகு வெளியே வந்தவள், இங்கும் அங்கும் பார்த்தபடி தன் குடிலுக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் போனதும் இளவரசன் அக்குளத்துக்குள் மூழ்கினான். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.
மறுநாள் காலையில் குளத்துக்குள் மூழ்கினான். குளத்தின் தரைப்பகுதியில் குறிப்பிட்ட இடம் மட்டும் கலையாமல் தெளிவாக இருந்தது. அந்த சேற்றில் பல கோட்டு சித்திரங்களை அப்பெண் வரைந்திருந்தாள். இவனால் அதிக நேரம் உள்ளே இருக்க முடியாவிட்டாலும், அங்கே என்ன படங்கள் வரையப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டான்.
பறவைகள் குஞ்சுகளோடு இருக்கின்றன. வல்லூறு வந்து தாக்குகிறது.
மான் குட்டிகளோடு இருக்கிறது. புலி வந்து தாக்குகிறது.
இப்படி குடும்பமாக பல உயிரினங்கள் இருப்பதாகவும், அவற்றை மற்ற உயிரினங்கள் தாக்குவதாகவும் படங்கள் இருந்தன.
‘இந்தப் பெண் குடும்பத்தை நினைத்து அதிகம் கவலைப்படுகிறாள். குடும்பம் என்று வந்தாலே இப்படியான ஆபத்து அவர்களுக்கு வந்து விடும் என்று பயப்படுகிறாள்’ என்பதை அவன் புரிந்து கொண்டான்.
அவள் பறித்த அதே மரத்தில் ஏறி ஒரு குச்சியை உடைத்த அவனும் குளத்தில் மூழ்கினான்.
புலி மானை அடித்து தன் புலிக்குட்டிகளுக்கு உணவாகக் கொண்டு செல்வதை வரைந்தான்.
வல்லூறு பறவைகளைப் பிடித்து தன் குஞ்சுகளுக்கு உணவாகக் கொண்டு செல்வதை வரைந்தான்.
ஒரு கப்பல் கரையில் பாதுகாப்பாய் இருப்பதை வரைந்தான். ஒரு கப்பல் கடலில் தத்தளிப்பதை வரைந்தான். ஆனால் தத்தளிக்கும் கப்பலே மறுகரையை அடைய முடிந்ததையும் வரைந்தான்.
மொத்தத்தில் ‘வாழ்க்கை சவாலானதுதான். அதற்காக அதை வாழாமல் இருக்கக் கூடாது’ என்று புரியும்படி பல சித்திரங்கள் வரைந்தான்.
அடுத்த மாதம் பௌர்ணமி இரவில் அப்பெண் வந்து குளத்தில் மூழ்கி வெகுநேரம் வெளியே வரவில்லை.
மறுநாள் காலை இளவரசன் அவள் குடிலுக்குச் சென்றான். குளத்தில் தான் வரைந்த ஓவியத்தின் ஒரே ஒரு கோட்டை கரிக்கடையால் தரையில் வரைந்தான். அவள் முகம் மலர்ந்து, ‘‘என் மனதின் நுண்ணிய உணர்வைப் புரிந்து கொண்டவனே. என்னை மணப்பாயா’’ என்றபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
‘ஒரு வார்த்தை கூட பேசாமல் எப்படி அப்பெண்ணை இளவரசர் பேச வைத்தார்’ என்று மக்கள் இப்போதும் ஆச்சரியத்துடன் அதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
Share