தினம் ஒரு கதை - 45
தினம் ஒரு கதை - 45
ஓர் ஆப்பிள் தோட்டத்தின் மூலையில் இருந்த ஒரே ஒரு மரம் சரியாய் காய்க்காமல் இருந்தது.
தினமும் தோட்டத்தின் சொந்தக்காரர் வந்து ‘ஆப்பிள் காய்த்திருக்கிறதா’ என்று பார்த்துப் பார்த்து சலித்துப் போனார்.
‘இந்த மரம் தேவையில்லாமல் நிலத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மரம் தேவையில்லாமல் மற்ற மரங்களுக்கான நீரை உறிஞ்சி வீணாக்கிக் கொண்டிருக்கிறது’ என்று நினைத்து அந்த காய்க்காத ஆப்பிள் மரத்தை வெட்டப்போனார்.
அம்மரத்தில் இருந்த பறவைகளும் பூச்சிகளும் அவரிடம் வந்து கெஞ்சின. ‘‘இதை வெட்டாதீர்கள். இது எங்கள் வாழ்விடம். உங்களுக்கு உபயோகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இந்த மரம்தான் வாழ்விடம் தருகிறது. இம்மரம் ஒரு ஓரமாக இருந்துவிட்டுப் போகட்டும்’’ என்றன.
தோட்டக்காரர் அதைக் காதில் வாங்கவில்லை. ‘‘இதை வெட்டிவிட்டு இங்கே வேறு ஏதாவது மரம் வைத்தால்தான் எனக்கு வருமானம் கிடைக்கும். உங்களுக்கு வாழ்விடம் தருகிறது என்பதற்காக, எதற்கும் பயனில்லாத இந்த மரத்தை நான் ஏன் வைத்திருக்க வேண்டும்?’’ என்று கேள்வி கேட்டுவிட்டு அதை வெட்டப் போனார்.
அப்போது மரத்தில் இருந்த வயதான அணில் ஒன்று அவரிடம் அக்கறையுடன் பேசியது. ‘‘தோட்டக்காரரே! இந்த மரத்தால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று யார் சொன்னது? கொஞ்சம் அந்தப் பக்கமாய் போய் இலைகளை விலக்கி விட்டுப் பாருங்கள். இதில் ஒரு தேன்கூடு இருப்பது தெரியும். இந்த மரப்பொந்திலும் ஏராளமான தேனீக்கள் இருக்கின்றன.
பழங்கள் இல்லை என்பதால் இம்மரத்தை யாரும் தொந்தரவு செய்வதில்லை. அதனால்தான் இதில் தேனீக்கள் தேன்கூடு கட்டியுள்ளன. இந்த ஒற்றை மரத்தில் வாழும் தேனீக்கள்தான் உன் தோட்டத்தில் இருக்கும் மற்ற ஆப்பிள் மரங்களில் மகரந்தச் சேர்க்கை நடத்தி, ஆப்பிள்கள் காய்க்கக் காரணமாய் இருக்கின்றன.
உங்கள் தோட்டத்தில் வளரும் பேரிக்காய், பிளம் பழ மரங்கள் வருங்காலத்தில் காய்ப்பதற்கும் இந்த தேனீக்களே உதவப் போகின்றன. இம்மரத்தை வெட்டினால் தேன் கூடு அழியும். அதன்பின் தேனீக்கள் உன் தோட்டத்தின் பக்கம் வராது. ஒட்டுமொத்த தோட்டத்திலும் விளைச்சல் பாதிக்கப்படும். ஆகையால் இம்மரத்தை வெட்டாமல் இருப்பதுதான் நல்லது’’ என்றது.
இதைக் கேட்ட தோட்டக்காரர், உண்மையை உணர்ந்தார்.
‘‘இயற்கையின் பிரமாண்டத்தை நான் உணரவில்லை. சுயநலம் சார்ந்தே யோசித்து, இயற்கையின் உயிர்ச்சங்கிலியை அறுக்க முயன்றது மாபெரும் தவறு என்று புரிந்து கொண்டேன்’’ என்றார். அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களிடத்தும் மன்னிப்பு கேட்டுவிட்டு, மரத்தை வெட்டாமல் சென்றார்.
Share