தினம் ஒரு கதை - 88
தினம் ஒரு கதை - 88
வனத்துறை அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன் காட்டின் அருகே இருக்கும் அரசு இல்லத்தில் வசித்து வந்தார். அவர் தினமும் காலையில் வீட்டின் முன் வராண்டாவில் நின்று, பறவைகளுக்கு தானியம் போடுவார். இது என்ன வகை என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விதவிதமான பறவைகள் வந்து தானியங்களைக் கொத்தித் தின்னும். இதை அவரும் குடும்பத்தினரும் ரசிப்பார்கள்.
இதில் முக்கிய கட்டமாக, தானியத்தைத் தன் உள்ளங்கையில் வைத்து கையை நீட்டியபடி அவர் காத்திருப்பார். சில பறவைகள் பயப்படாமல் அழகாக அவர் கையில் அமர்ந்து, தானியங்களைக் கொத்தித் தின்னும். ‘‘பறவைகள் அப்படி லாவகமாக தானியத்தைக் கொத்தும்போது கையில் ஏற்படும் குறுகுறுப்பின் சுகமே தனிதான்’’ என்று தன் குழந்தைகளிடம் அடிக்கடி சொல்வார்.
ஒருமுறை அவர் குடும்பத்துடன் வெளியூர் போக வேண்டியதாயிற்று. மூத்த மகனை மட்டும் அழைத்துச் செல்ல முடியவில்லை. ‘தேர்வுக்காக படிக்கும் வேலை இருக்கிறது’ என்று வீட்டில் தனியே தங்கினான். மறுநாள் காலை கண்விழித்தான். தன் வேலைகளை எல்லாம் செய்தான்.
‘அப்பா பறவைகளுக்கு தானியம் வைப்பாரே’ என்று நினைத்து, தானியங்களை முன் வராண்டாவில் விசிறி விட்டான். பறவைகள் கொத்தித் தின்றன. ‘நாமும் அப்பாவைப் போல உள்ளங்கையில் தானியம் வைத்துக்கொண்டு நின்றால் என்ன’ என்று நினைத்து தானியங்களுடன் உள்ளங்கையை நீட்டிக் கொண்டு நின்றான்.
அப்போது வழக்கமாக வரும் நீலப்பறவை இல்லாமல், அதன் குஞ்சு ஒன்று அவன் கையில் படபடப்பாக இறங்கியது. சடசடவென்று அவன் உள்ளங்கை தானியத்தை லாவகமாகக் கொத்தாமல், வேகமாகக் கொத்தியது. முள்ளால் குத்துவதைப் போல இவனுக்கு வலிக்க, ‘ஆ’ என்று கத்தியபடி கையை உதறினான். தானியங்கள் சிதறின. அந்த சிறிய பறவை இவன் மேல் மோதுவது போல் வந்தது. இவன் கையை வீச, கை பறவை மேலே பட்டது. அது சமாளித்து அவ்விடத்தை விட்டுப் பறந்தது.
சில நிமிடங்களில் இன்னும் அது போல குஞ்சு பறவைகளோடு படபடப்பாக வந்தது. அவற்றின் வாயில், அவன் பார்த்தாலே அருவருப்படையும் பல செத்த காட்டுப்பூச்சிகள் இருந்தன. அவற்றை இவன் மேலே போட்டதும் இவன் பதற்றமானான். வீட்டில் இருக்கும் பேட்மிட்டன் பேட்டால் அவற்றை அடித்து விரட்டினான். உள்ளறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
மறுபடியும் வெளியே போனால், அங்கே பெரிய நீலப்பறவை ஒன்று இவனைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அது இவனை பதற்றப்படுத்தாமல் பறந்தது. அப்போதுதான் கவனித்தான், அதன் வாயில் அவனுக்குப் பிடித்த நசுங்காத பெர்ரி பழம் ஒன்று இருந்தது. அதை அவன் முன்னால் போட்டது. அதை எடுத்து துடைத்து சாப்பிட்டான். மிக மிக சுவையாக இருந்தது.
இப்போது மனம் லேசானது போல் இருந்தது. ‘என்ன நடந்தது’ என்று யோசித்தான். ஒருவேளை மகனாகிய நான் அப்பாவைப் போல உள்ளங்கையில் தானியத்தை வைக்க ஆசைப்பட்டது போல, அந்தக் குஞ்சுப்பறவை உள்ளங்கை தானியத்தைக் கொத்தித் தின்ன ஆசை கொண்டிருக்குமோ?
அதற்கு தாயிடம் அனுமதி கேட்டு வந்திருக்கும். ஆனால் புது அனுபவம் என்பதாலும், என் மீது முழுமையான நம்பிக்கை வராத காரணத்தாலும் வேகமாகக் கொத்தியிருக்கிறது. அதனால் எனக்கு வலித்தது. அந்த வலியில் அதை விரட்டியிருக்கிறேன். ‘ஐயோ, இவனைத் துன்பப்படுத்தி விட்டோமே’ என்று சமாதானப்படுத்துவதற்காக அதன் அம்மா பிடித்துவந்து தனக்குக் கொடுக்கும் காட்டுப்பூச்சிகளை எனக்கு எடுத்து வந்திருக்கிறது.
மனிதர்கள் பூச்சியை விரும்பமாட்டார்கள் என்று அதற்குத் தெரியவில்லை போலும். பூச்சிகளைப் பார்த்து அருவருப்படைந்து நான் அதை பேட்மின்டன் பேட்டால் விரட்டி இருக்கிறேன். அதை குஞ்சுப் பறவை தாயிடம் சொல்லியிருக்கிறது. தாய்ப் பறவைக்கு மனிதர்களைப் பற்றித் தெரியும் என்பதால், என்னை சமாதானப்படுத்த பெர்ரி பழங்கள் கொண்டு வந்திருக்கிறது.’
இப்படி யோசித்ததும் அவனுக்குத் தெளிவு வந்தது. ‘தனக்கும் பறவைகளுக்கும் இடையிலான புரிதல் இன்மை காரணமாக சிக்கல் வந்தது. பிரச்னை வரும்போது அதை நினைத்து அதிகம் பயந்தும் பரபரப்பும் அடையாமல் இருந்தால், நிதானமாக யோசித்து நிச்சயம் தீர்வு கண்டுபிடிக்க முடியும்’ என்பதை உணர்ந்து கொண்டான்.
மறுபடியும் தானியத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு வாசலில் நின்றான். இப்போது குஞ்சுப் பறவை மிக மெதுவாக அவன் கையில் இறங்கியது. தானியத்தைக் கொத்தாமல் அவனையே தயங்கித் தயங்கி பார்த்துக் கொண்டிருந்தது. அவன் இன்னொரு கை விரலால் அதன் தலையைத் தடவி, ‘‘சாப்பிடு. கொஞ்சம் வலிச்சாலும் பரவாயில்லை. நான் தாங்கிப்பேன்’’ என்று அன்பாகச் சொன்னான்.
இப்போது அது அவனுக்கு வலிக்காமல் மிக இனிமையாக உள்ளங்கை குறுகுறுப்பைக் கொடுத்தபடி தானியங்களைக் கொத்தித் தின்றது.
Share