தினம் ஒரு கதை - 80
தினம் ஒரு கதை - 80
அப்பா, அம்மா, மகள், மகன் என்றொரு அணில் குடும்பம் மரத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த மரத்தின் கிளைகள் நெருக்கமாக இங்கும் அங்கும் வளைந்து நெளிந்திருந்தன.
அனைவரும் விளையாடி கீழே இறங்கி வரும்போது மகன் அணிலைக் காணவில்லை. அப்பாவும் அம்மாவும் தங்கையும் தேடும்போது மரத்தின் மேலே முனகல் ஓசை கேட்டது. பார்த்தால், இரண்டு மூன்று கிளைகள் பின்னிப் பிணைந்த இயற்கைப் பொறியில் அது மாட்டிக் கொண்டிருந்தது.
அங்கிருந்து அதை விடுவிக்கவே முடியாது என்று அப்பா அணில் சோர்ந்து அழுதபடி இருந்தது. அது மீட்கும் முயற்சியைக் கைவிட்டது. ஆனால், அம்மா அணில் அப்படி இருக்கவில்லை. ‘எப்படியாவது மகனை மீட்பேன்’ என்று விறகுவெட்டியிடம் போய் உதவி கேட்டது.
அவரோ, ‘‘என் கோடாரி முனை கூர்மையாக இல்லை. அதைத் தட்டி சரி செய்ய கொல்லரை அழைத்து வா’’ என்று தட்டிக்கழித்தார்.
அம்மா போய் கொல்லரிடம் நின்றது. அவர், ‘‘என்னிடம் உள்ள நெருப்பு கோடாரியை வெட்ட போதுமானது அல்ல’’ என்று வேண்டுமென்றே பொய் சொல்லி தட்டிக் கழித்தார். அம்மா அணில் திரும்பத் திரும்ப கொல்லரிடம் கெஞ்சியது. ஆனாலும் கொல்லர் மசியவில்லை.
அம்மா ஆவேசமானது. அருகே குட்டையில் நீர் இருந்தது. அந்தக் குட்டையிடம் சென்று, ‘‘எனக்கு உதவி செய்யாத கொல்லரின் நெருப்பை பாய்ந்து சென்று அணைத்து விடு’’ என்று கேட்டது.
குட்டை நீர் அலட்சியப்படுத்தியது. அங்கே ஒரு யானை வந்தது. ‘‘எனக்கு உதவி செய்யாமல் அலட்சியப்படுத்தும் குட்டை நீரைக் குடித்து விடு’’ என்றது. யானையும் அம்மா அணிலை மதிக்கவில்லை.
அங்கே வந்த தேனீயிடம், ‘‘என்னை மதிக்காத யானையின் காதில் புகுந்து கடித்து விடு’’ என்றது. தேனீயும், ‘உனக்கு வேறு வேலை இல்லை’ என்பது போல கண்டுகொள்ளாமல் இருந்தது. அப்போது அங்கே வந்த பறவையிடம் சென்ற அணில், ‘‘என்னைக் கண்டுகொள்ளாத தேனீயைக் கொத்தித் தின்று விடு’’ என்று ஆவேசமாய் சொன்னது.
இதைக் கேட்ட பறவை குழப்பமாக அம்மா அணிலின் முகத்தைப் பார்த்தது. ‘‘ஏன் ஓர் அப்பாவி தேனீயைக் கொல்லச் சொல்கிறாய்?’’ என்று கேட்டது. அந்த அணில், தன் மகன் கிளையில் சிக்கி இருப்பதைச் சொல்லி அழுதது. ‘‘என் மகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் என் மகனுக்கு உதவாதவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தண்டிக்கவேண்டும் என்ற வெறி வருகிறது’’ என்று கதறியது.
இதைக் கேட்ட பறவையின் மனம் இளகியது. அம்மா அணில் சொன்ன மாதிரியே தேனீயைத் தின்பதற்குத் துரத்தியது. பறவை துரத்துவதைப் பார்த்த தேனீ, ‘அம்மா அணில் சொன்னதைச் செய்துவிடுவோம்’ என்று யானை காதில் கடிக்கப் போனது. தேனீ கடிக்க வருவதைப் பார்த்த யானை, உடனே குட்டை நீரைக் குடிக்கப் போனது. தன்னை குடிக்க வரும் யானையைப் பார்த்த குட்டை நீர், கொல்லரின் தீயை அணைக்கப் போனது.
தன் தீயை அணைக்க குட்டை நீர் வருவதைப் பார்த்த கொல்லர் நடுங்கி, ‘‘ஐயோ, நெருப்பை அணைத்து விடாதீர்கள். என் தொழிலே பாழாய் போய்விடும். நான் கோடாரியை கூர்மை செய்து தருகிறேன்’’ என்று விறகுவெட்டியின் கோடாரியை சரி செய்து கொடுத்தார்.
விறகுவெட்டியை அழைத்து வந்த அம்மா அணில், கிளைகளை வெட்டி மகனைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தது.
அவ்வளவுதான்! ‘நம் மகனை மீட்கவே முடியாது’ என்று புலம்பியபடி படுத்திருந்த அப்பா அணில் ஆச்சர்யத்துடன் தன் மனைவியைப் பார்த்தது.
அப்போது அம்மா அணில், ‘‘ஒரு தாய் நினைத்தால் தன் குழந்தைகளை எந்த சூழலில், எவ்வளவு சிக்கலில், எவ்வளவு கஷ்டத்தில் இருந்தும் காப்பாற்றுவாள்’’ என்று சொன்னது. அதன் கைகள், காயம்பட்டிருந்த மகனின் தலையைப் பரிவுடன் வருடிக் கொடுத்தன.
Share