தினம் ஒரு கதை - 79
தினம் ஒரு கதை - 79
அந்த வீட்டில் ஒரே ஒரு குளியலறைதான். குளியலறையோடு கழிவறையும் சேர்ந்திருக்கும். இருப்பதோ மூன்று பிள்ளைகள், அப்பா, அம்மா மற்றும் வயதான பாட்டி என ஆறு பேர்.
எல்லா காலைப் பொழுதுகளையும் போல அன்றும் பரபரப்பாக விடிந்தது. பிள்ளைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லத் தயாரானார்கள். பல் துலக்கினார்கள், காபி குடித்தார்கள். அப்பாவும் அம்மாவும் காலை உணவையும், மதிய உணவையும் சேர்ந்தே சமைத்தார்கள். அப்பா பாதியில் தயிர் வாங்கி வர கடைக்குச் சென்ற போதுதான் அது நடந்தது. பாட்டி குளியலறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டார். பிறகு வெளியே வர நினைத்தபோது அவரால் கதவைத் திறக்க முடியவில்லை. அவ்வளவுதான், மூன்று பிள்ளைகளும் பதற்றமாகிவிட்டார்கள்.
‘‘பாட்டி, சீக்கிரம் வெளியே வாங்க. இன்னைக்கு ஸ்கூலுக்கு லேட்டா போக முடியாது.’’ இது கடைக்குட்டி பேரன்.
‘‘பாட்டி, இன்னைக்கு காலேஜ்ல அசைன்மென்ட் கொடுக்கணும். சீக்கிரம் வாங்க.’’ இது முதலாம் பேத்தி
‘‘என்ன பாட்டி, சுத்தமா புரிஞ்சிக்காம இப்படி பண்றீங்க?’’ இது நடுவில் பிறந்த பேரன்.
மூவரும் பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் தட்டினார்கள். நடுவில் உள்ள பேரன் உள்ளங்கையைக் குவித்து வைத்துக் கொண்டு ‘நொய்ங்’ என்று கதவைக் குத்தி வித்தியாசமான சத்தம் எழுப்பினான். மூத்த பேரன் நேரமாகிவிட்ட கோபத்தில் தன் கையில் இருந்த டம்ளர் ஒன்றைத் தூக்கி கதவில் எறிந்தான். அது கதவில் மோதி பெரும் ஓசை எழுப்பியது. அந்தப் பக்கம் பாட்டி கதவை டகடகவென ஆட்டும் ஓசை கேட்கிறதே தவிர, திறந்தபாடில்லை.
பேரன்களும் பேத்திகளும் ஆவேசப்பட்டார்கள். அவர்களின் அவசரம் அப்படி. தன் பிள்ளைகள் மாமியாரைக் கோபத்திலும் எரிச்சலிலும் கத்துவதைப் பார்த்து பதற்றமான அம்மா கதவருகே போய் மிக உருக்கமாக, ‘‘அத்தை! உங்க பேரப்பசங்களை சிரமப்படுத்தலாமா? தயவுசெய்து வந்திருங்க. தாழ் திறக்க முடியலையா? அப்படி இப்படி அசைச்சுப் பாருங்க, வந்திரும்’’ என்று சொன்னார்.
இப்போது உள்ளே இருந்து பாட்டி அழும் ஓசை கேட்டது. அதைக் கேட்டு அனைவருக்கும் பாவமாக இருந்தாலும், நேரம் ஆகிறதே! மறுபடியும் தட்டினார்கள். தயிர் வாங்கி வந்த அப்பா, தன் அம்மாவை அனைவரும் அதட்டுவதைப் பார்த்து கவலைப்பட்டார். சூழலைப் புரிந்துகொண்டார்.
தன் பிள்ளைகள் மூவரையும் குளியலறை அருகிலிருந்து விரட்டி, ஹாலில் உள்ள சோபாவில் அமைதியாக உட்காரும்படி சொன்னார். அனைவரும் அப்பாவுக்குக் கட்டுப்பட்டு சோபாவில் அமர்ந்தார்கள். மனைவியிடம் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார்.
மெல்ல குளியலறை கதவருகே சென்றார். மென்மையான குரலில், ‘‘அம்மா! பாத்ரூம் கதவைத் திறக்கிறது ரொம்ப ஈஸி. நீங்க அவசரப்படாம பொறுமையா திறந்து பாருங்க, என்ன?’’ என்று சொல்லி அவரும் அமைதியாகக் காத்திருந்தார். இப்போது பாட்டி கதவை வேகமாக ஆட்டும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிடத்தில் பாட்டி கதவைத் திறந்து வெளியே வந்தார். அப்பா எதுவும் நடக்காதது மாதிரி பாட்டியை உள் அறைக்குக் கூட்டிச் சென்றார்.
பின் தன் குடும்பத்தினரிடம் பேசினார். ‘‘மனித மனம் அப்போதைய பிரச்னையில், குளிரில் நடுங்குவதைப் போல நடுங்கும். அப்போது அதற்குத் தேவை உங்கள் அதட்டும் பேச்சோ, கோபமோ, அன்போ, அக்கறையோ அல்லது பரிதாபமோ இல்லை. அதற்குத் தேவையெல்லாம் சில நிமிட அமைதி மட்டுமே. நீங்கள் அவசரப்பட்டு சத்தம் போடப் போட, பதற்றத்தில் பாட்டியால் தாழ்ப்பாளைத் திறக்க முடியாமல் போயிற்று. நான் என் அம்மாவின் நடுங்கும் மனதுக்கு அமைதியைக் கொடுத்தேன். அது சீராகி சரியாக செயல்பட்டு, கதவைத் திறந்து வந்தார்’’ என்றார்.
பதற்றமான நடு நடுங்கும் மனித மனதை எப்படிக் கையாள்வது என்ற பாடத்தைக் கற்றுக்கொண்ட பிள்ளைகள், அவரவர் கிளம்பத் தயாரானார்கள்.
காலை வெயில் வீட்டை வெளிச்சமாக்கியது.
Share